Tuesday 19 June 2018

கொரியத் தீபக்கற்பம்!

ஒரு குடைக்குள்
உலகை அடக்கிட எண்ணிய
ஜப்பானின் ஏகாதிபத்தியத்தின் கீழ்
ஒன்றிணைந்த கொரிய தீபகற்பம்..
அச்சு நாடுகள், நேச நாடுகளுக்கான
இரண்டாம் உலகப்போரில்,
நேச நாடுகளின் வெற்றி
அச்சு நாடுகளின் அச்சாணியை கழற்றிவிட்டது.
அந்த அச்சாணியில் கழன்ற சக்கரம்
கொரியா.
நேச நாடுகளின் நேசம்
நாடு பிடிப்பதில் போனது
பேருந்தின் பின் சக்கரம் போல்  இரண்டானது,
இரண்டும்
ஆபத்தில் தவிக்கும் கப்பலில்
கடலில் கொட்டிய எண்ணெய் போல்..
நேச நாடுகளின்
கொள்கை முரனை கோடிட்டது.
வடம் கம்யூனிச ஐக்கிய சோவியத்தின் பாலும்
தென்னகம் ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பாலும்
பிரிப்பட்டு துண்டானது தீபகற்பம்..
போரில் பிடித்த நாடுகளை
தன் கொள்கை நாடுகளாக்கி விட்டன.
வடக்கர்களின் ஒன்றிணைந்த கொரிய
கனவில்..
1950 போர் மூள
3 ஆண்டு போரில்
பெரிய அண்ணன்கள் நுழைய
கொல்லப்பட்டது லட்சக்கணக்கான
கொரியர்கள்
ஆர்மிஸ்டிஸ் ஒப்பந்ததோடு முடிந்தது கொரியப் போர்.
பனிப்போர் தொடர்ந்தது...
கம்யூனிச வடக்கு வளர்ந்தது.
சீன மூங்கில் போல்
அசுர வளர்ச்சி பொருளாதாரத்தில்
ஆசியாவிலே அதிக வளர்ச்சி,
தெற்கோ கருவேலை மரமாக
விறகு குச்சிகளுக்கானதாய் திண்டாடியது.
1965 புரட்சியாளர் சே வடக்கை
மக்களுக்கான கம்யூனிச ஆட்சிக்கு
கியூபாவிற்கு முன்ணுதாரணமென புகழ
கம்யூனிச ஆட்சிகளில் சிறப்பானதொரு ஆட்சியை நல்கிய வடக்கு,
சோவியத் ஆதரவில் விலகி
சீனா ஆதரவாக மாற
மானை தவறவிட்ட புலியாய்
சோவியத் தகிக்க,
சோவியத் உறவு முறிய,
தேவைகளுக்கு அணு உலை என்ற வடக்கு,
பவர் ஸ்டார் பெரிய அண்ணண்கள்
மிரளுமளவு அறிக்கைகள் விட,
சுப்ரீம் ஸ்டாராக வடக்கு அறியப்பட,
தடைகள் முன் நிற்க,
சிரித்து கடக்கிறது வடக்கு,
சர்வாதிகாரமாகிவிட்ட வடக்கு
உலகில் பெரிய நாடுகளை மிரட்டிய பெரிய அண்ணன்களை மிரட்டுகிறது எரிமலையாய்,
எரிமலை சற்றே அடங்கி போக விரும்பி
தெற்கோடு கைக்கோர்த்து,
அமைதிக்கு வருகிறது,
அமைதி பூக்கட்டும்,
கொரியா தீபகற்பம் மீளட்டும்,
கொரியர்கள் வாழட்டும்...

                -பரத் சந்திரன் சுப்ரமணியன்

Monday 21 May 2018

தாரிணி - INS Tarini

சக்திப் பீடங்கள் நான்கில் ஒன்றாம்
தாரா தாரிணியின் பெயரிலுள்ள
இந்தியத் தயாரிப்பான
தாரிணி பாய்மரப் படகில்
உலகை வலம் வர...
மாண்டோவியில் இருந்து
சீறிப்பாய்ந்த
சுறாக்களே...
வருக... வருக...

இந்தியப் பெருங்கடலில் மிதந்து...
பூமத்திய ரேகையில்
வட அரைக்கோளத்தில் இருந்து
தென் அரைக்கோளம் தாவி
மகரரேகை தாண்டி...
கங்காரு தேசத்தின் பிரேமாண்டடில்

துறைமுகம் சென்று...
லீயுவின் நிலமுனை வழியே...
கிவிகளின் தேசத்தின் லிட்டேல்டன் துறைமுகம் சென்று...
சாண்டா அணிவகுப்பு மரியாதை பெற்று...
தென் பசிபிக் பெருங்கடலில்
ஹோர்ன் நிலமுனை வழியே
தென் அட்லாண்டிக் பெருங்கடலின்
போக்லாந்தின் ஸ்டான்லி துறைமுகம் சென்று....
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகம் அடைந்து...
குட்ஹோப் நிலமுனை வழியே...
இந்தியப் பெருங்கடலில் ஐக்கியமாகி...
சீறிப் பாய்ந்து..
மகர ரேகை கடந்து சீறுகையில்...
தொழில்நுட்பப் பழுது ஏற்பட...
மொரிசியசின் லூயிஸ் துறைமுகம் உதவ..
மீண்டும் பாயத் தொடங்கி...
பூமத்திய ரேகையில்
தென் அரைக்கோளத்தில் இருந்து
வட அரைக்கோளம் தாவி...
இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டல
எல்லையில் இருந்து..
இந்தியப் பிராந்திய கடல் எல்லையில்
நுழைந்து...
மாண்டோவிக்கு
உலகைச் சுற்றி வலம் வரும்...
கடற்படை வீராங்கனைகளே..
வருக... வருக...

கடல் மாசுவின் மீது ஆராய்ச்சி செய்து அறிக்கையோடு வரும்
வீரப்பெண்டீர்களே...
வருக.... வருக...

தரணி சுற்றத் தாரிணியில் சென்று வரும்
தாரகைகளே...
வருக... வருக...

கடல் சூழலியல் ஆராய்ந்து வரும்
அரிவைகளே...
வருக வருக...

கடல் கடத்தல் பாவம் என்ற தேசத்தில்...
கடலில் உலகைச் சுற்றிய..
நங்கைகளே...
வருக... வருக...

வேலையாள்ப் போல் பார்த்த பெண்களை
உலகைச் சுற்றி வந்து உலகையே வியக்க வைத்த..
மடந்தைகளே..
வருக... வருக...

வேடிக்கைப் பார்ப்பவளாய் வைத்திருப்போரை
வேடிக்கைப் பார்க்க வைத்த
தெரிவைகளே...
வருக... வருக...

பெண்டீர்க் காயங்களை ஆற்றி
ஆற்றுக் காட்ட வந்த
ஆறு பெண்கள் குழுவே...
வருக... வருக...

தேசம் திரும்பும்
மங்கைகளே...
பாசமுடன் வரவேற்கிறோம்...
வருக... வருக...

ஆயிரமாயிரம் மாற்றம் கண்ட
தேசத்தில்...
மாற்றம் காண விழையும்...
மனிதிகளே...
மகிழ்வுடன் வரவேற்கிறோம்...
வருக... வருக...

வர்த்திகா ஜோஷியே
வருக... வருக...

பிரதிபா ஜம்வாலே
வருக... வருக...

ஐஸ்வரியா போடப்பட்டியே
வருக... வருக...

பட்டாரப்பள்ளி சுவாதியே
வருக... வருக...

விஜய தேவியே
வருக... வருக...

பயல் குப்தாவே
வருக... வருக...

உம்மைக் கண்டும் மாறுவோர்
சிலரேனும் மாறட்டும்...
மங்கையர் வாழ்வு மலரட்டும்....

தேசம் கை கொடுக்கும்...
நேசமுடன் நாம் கொடுத்தால்...

                     -பரத் சந்திரன் சுப்ரமணியன்.



"ஜஸ்டி என்னும் ஜஸ்டிஸ்"

















மணிமகுடம் சூடவில்லை
மகுடத்தின் மாணிக்கமாய்
மிளிர்கிறாய்...

கருத்துரிமைக்கான நீதி ஆணையிட்டாய்
நீதி உரிமைக்காக அணியினை
வகுத்துவிட்டாய்
மக்களுக்காக....

தனிமனித ரகசியம் அடிப்படை உரிமை என்றாய்...
மகுடத்திற்கான நியமன ரகசியம் உடைத்தாய்...
நீதிக்காக.....

பதவிக்கு அலைவோர் நடுவில்
நடுநிலை தவறாது நீதி அளித்தாய்...
குடியானவனுக்காக...

இதோ நீ விடை பெற போகிறாய்...
பிரிவு உபச்சாரம் இல்லாது..
சம்பிரதாயங்களை உடைத்தாய்...
சம்பிரதாயப் பணிகளை மறுத்தாய்...
பகுத்தறிவாளனாக...


நீ பதவியில் இருந்து விடை பெற்றாலும்..
உன் அதிகாரம் குறைந்தாலும்..
நீ பிறப்பித்த ஆணைகள்
மக்கள் அதிகாரமாய்...
உன் கருத்துக்கள் நீதி துறையின்
கருத்துருக்களாய்...

உன் ஆசை சீர்திருத்தங்கள்..
விரைவில் பிறக்கட்டும்...
உன் ஓய்வுக்கு பின் வாழ்க்கை சிறக்கட்டும்...
தன் பெயரில் ஜஸ்டி வைத்து ஜஸ்டிஸ்
வழங்கிய நீதிமானே...
ஜஸ்டி செலமேஸ்வர் எனும் பெயர் நீதி துறை
வரலாற்றில் பதியட்டும்....
உன் புகழ் சிறக்கட்டும்..
உன் மக்கள் தொண்டு தொடரட்டும்...
உன் வாழ்வு மலரட்டும்...

                   -பரத் சந்திரன் சுப்ரமணியன்.


Sunday 22 January 2017

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகுமா?

ஜல்லிக்கட்டுக்கு தமிழக ஆளுநர் அவசர சட்டம் ஒன்றை பிறப்பிததுள்ளார். அவசர சட்டம் குறித்த விளக்கம். மாநிலம் பிறப்பிக்கும் அவசர சட்டம் என்பது சட்டசபை நடை பெறாத போது மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் படி ஆளுநர் சட்டம் பிறப்பிக்க நம்முடைய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் சட்டமன்றம் கூடிய 6 வார காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏற்கபட்டால் அது நிரந்திர சட்டமாகும். இல்லையேல் அவசர சட்டம் காலவாதி ஆகிவிடும். எனவே அவசர சட்டம்  சட்டமன்றம் கூடிய 6 வார காலம் மட்டுமே செல்லுபடி ஆகும். 6 மாதம் என குறிப்பிடுவது 2 சட்டமன்ற கூட்ட தொடர்க்கு இடைப்பட்ட அதிக பட்ச கால இடைவெளியே ஆகும். எனவே ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். ஏனெனில் ஜனவரி 23 அன்று சட்ட மன்றம் கூட இருப்பதால் அது மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். ஒருவேளை இச்சட்டமன்ற கூட்ட தொடரில் நிறவேற்றப்பட்டால் அது நிரந்தர சட்டமாகும் இல்லையேல் மார்ச் 5ல் அவசர சட்டம் காலவாதி ஆகிவிடும். எனவே இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்று நாம் நம்புவோம்.

Tuesday 4 October 2016

காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்.

இமயம் முதல் குமரி வரை
இந்தியன் அன்றோ
சண்டைகள் செய்வதனாலே
வேற்று நாட்டவராகிவிடுவிரோ
பற்பல மொழிகள் பேசி திரிந்தாலும்
ஓர் தாய் பிள்ளைகள் அன்றோ
மொழி வேறு என்பதனாலே
சகோதரனுக்கும் தண்ணீர் தர மறுக்கலாமோ
வயிற்றுக்கு சோறு வேண்டும்
சோற்றுக்கு உழ வேண்டும்
உழவுக்கு நீர் வேண்டும் -அதனை
அளிக்க உமக்கு மனம் வேண்டும்
மொழி அரசியலுக்கு மக்கள் அடிமை கொள்ளலாமோ
உலகின் முன் வெட்கி தலை குனிதல் ஆகுமோ
மக்கள் மனதில் மனிதம் பிறந்திடல் வேண்டும் - அதற்கு
ஜாதி மாதம் மொழி இனம் நாடுகளுக்கு அப்பாற்பட்ட
மனிதர் ஆக வேண்டும் 
நம் மீது விழுந்த கரை போக்கிடல் வேண்டும் - அதற்கு
காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்
காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்.......

என்ற அவாவுடன் ...........................
                                                                    -பரத் சந்திரன் சுப்ரமணியன்.
 

கதறி துடிக்கிறாள் பாரத மாதா!

என் சொல்வேன் என் சொல்வேன்
எப்போதோ வரப்போகும் உன்னிடம் அதை வாங்கி வா இதை வாங்கி வா என்று
அன்பு கட்டளை இட அலைபேசியில் பேசிட விரைந்து வரும்
குழந்தை இடம் என் சொல்வேன்
உன் தந்தை இடம் இனி பேசவே முடியாதென்று
உன்னிடம் கொஞ்சி பேசி மகிழும் உன் மனைவி இடம் என் சொல்வேன்
உன்னை அரவணைக்கும் கைகள் உன்னை  இனி ஆர தழுவாதென்று
செல்ல சண்டை இடும் உன் சகோதர சகோதரிகளிடம் என் சொல்வேன்
இனி  உங்கள் சகோதரனிடம் செல்ல சண்டை இட முடியாது என்று
உன்னையே நினைத்து உருகும் உன் தாய் இடம் என் சொல்வேன்
உங்கள் மகனின் நினைவுகள் மட்டுமே மிஞ்சியது என்று
உன்னை நினைத்து என்றும் பெருமை கொள்ளும் உன் தந்தை இடத்து என் சொல்வேன்
உங்கள் அருமை பெருமை மகன் இன் உயிர் நீத்தான்  என்று
என் சொல்வேன்  என் சொல்வேன் என்று- அழும்
பாரத மாதவிடம் கவலை படாதே தாயே
என் மகனும் என்னுடைய  எண்ணற்ற இந்திய சகோதரர்களும்
உன்னை காப்பார்கள் என்று கூறுகிறது
பாரதத்தை காக்க எதிரிகளிடம் போராடி இன் உயிர் நீத்த ராணுவ வீரனின் ஆத்மா
கேட்ட உடன் மேலும் மனம் உடைந்து கதறி துடிக்கிறாள் பாரத மாதா
உன்னையும்  இழந்து விட்டேனே என்று........

உரி தீவிரவாத தாக்குதலுக்கு பழியான எனது அருமை சகோதரர்களுக்காக
அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும்
அவர்களின் எண்ணமும் லட்சியமும் நிறைவேறிடவும்
அவர்கள் குடும்பம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்திடவும்
எல்லாம் வல்ல உண்மை பரம் பொருளை வேண்டி நிற்கும்...........

                                                                           -பரத் சந்திரன் சுப்ரமணியன்
 

Tuesday 2 August 2016

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி ?

IRCTC faster train ticket booking tricks
ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி ?
இதுக்கு தான் இந்த ஊரு பக்கமே வரதில இங்க வந்துட்டு போறதுக்கே 2 நாளு ஆகிடுது இதுல நின்னு கிட்டே தான் போகணும் நின்னுகிட்டேதான் வரணும்னா எப்படி வரது.சரி இரயில் வண்டியில் தட்கல் முறையில் ஆவது முன் பதிவு செய்து  போகலாம் என்று செல்பவர்களுக்கும் 3-5 நிமிடங்களில் டிக்கெட் காலி என்று வீடு திரும்ப வேண்டி இருக்கிறது.சரி நாமும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம் என்றால் நமக்கு வாய்ப்பே இருக்காது.இதனால் சலித்து கொள்பவர்கள் ஏராளம்.அவர்களுக்கு ஒரு எளிதான வழி நம்முடைய பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே type செய்து வைத்து கொள்ளலாம்.
அதற்கான எளிய வழி முறைகள்:
1)கீழே கொடுக்கப்  பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
2)கிளிக் செய்தவுடன் தோன்றும் ஒரு பக்கத்தில் Reservation Form என்ற buttonனும் video demo என்ற buttonனும் இருக்கும்.
3)demo வீடியோவைக்காண Demo videoவினை கிளிக் செய்யவும்.Demovideo 4)reservation formமை கிளிக் செய்தால் resevation form  போன்ற ஒரு படிவம் தோன்றும் அதில் நீங்கள் உங்களுடைய பயணிகளின் விவரங்களை தட்டச்சு செய்து வைத்துக் கொள்ளவும்.Reservation form
5)பின்பு i am feel lucky என்ற பொத்தானை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் magic auto fill என்ற பொத்தான் இருக்கும் அதனை drag செய்து படத்தில் உள்ளது போன்ற book mark tool bar இல் வைத்து கொள்ளவும்.
6)இனி வேலை சுலபம் தான். எப்போதும் போன்று நாம் irctc  website இல் login செய்து பயண விவரத்திற்கு பின் வரும் passenger detail  பக்கம் வரும் பொழுது நீங்கள் drag செய்து வைத்திருந்த magic auto fillஐ கிளிக் செய்தால் உங்கள படிவம் நிரப்ப பட்டிருக்கும் பிறகு என்ன தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம். அதனால் உங்களின் வாய்ப்பும்  அதிகம் ஆகிறது.
                                                       HAPPY  JOURNEY  பார்வையாளர்களே!

Thursday 30 June 2016

புரட்சி முதல் வினுப்ரியா வரை சமூக ஊடகம் - உலக சமூக ஊடக தினம்

நீங்கள் உணவு இல்லாமல் கூட ஒரு நாள் இருந்து விடுவீர்கள், ஏன் குடிக்க  தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்து விடுவீர்கள் ஆனால் ஒரு நிமிடம் கூட உங்களால் சமூக வலைதளத்தில் டிவீட்டர் இல் tweet அல்லது retweet செய்யாமலோ facebook இல் போஸ்ட் போடாமலோ அல்லது share செய்யாமலோ இன்ஸ்டாகிராம் இல்லாமலோ கூகிள் பிளஸ் சில் போஸ்ட் போடாமலோ உங்களால் இருக்க முடியாது.  உலகின் பல நாடுகளில் சமீப காலமாக புரட்சி ஏற்பட தொடங்கிய இடம் சமூக வலைதளம்.  தங்கள் உலகின் அத்துணை தவறுகளையும் தட்டி கேட்க்கும் இடமாகவும் நெட்டிசன்களின் பொழுது போக்கு அம்சமாகவும், சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் மீம்ஸ் மன்னர்களின் அவையாகவும் இருந்த இருக்கும் இருக்க போகும் இடமாகவும்,
இருக்கும் இடம் சமூக வலைதளம். புரட்சிகளுக்கு மட்டும் அல்ல அமைதிக்கும் சமூக செய்யற்பாட்டுக்கும் உதவிய தளமும் கூட. சென்னை பெரு வெள்ளத்தில் அரசிற்கு முன்பே நம்மை ஒருங்கிணைத்தது சமூக வலைதளமே. சமூக வலைதளம் ஓர் அரசினை புரட்சியால் அகற்றவும் முடியும் அதே  சமூக வலைதளத்தின் மூலம் ஆட்சியை அமைக்கவும் முடியும் என்பதை சமீபத்திய இந்திய தேர்தல் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. சமூக வலைதளத்தின் மூலம் விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும் கட்சிகள் முன் வைத்த போதே உங்களுக்கு அது புரிந்து இருக்கும்.  நாட்டில் ஒரு தவறு நடந்தவுடன் ஒரு வலை பதிவு வருகிறது உடனே அந்த தவறு அரசு தரப்பில் சரி செய்ய படுகிறது .  அதே போல் ஓர் உதவி என்று சமூக வலைதளத்தில் ஒரு குரல் கேட்கிறது உடனே அந்த உதவியினை மனிதாபி மானம் உடைய ஒருவரால் அந்த நபருக்கு சரியான நேரத்திற்குள் சென்று அடைகிறது என்றால் அது சமூக ஊடகத்தின் தாக்கத்தால் மட்டுமே முடியும். சமூக வலைதளத்தின் தாக்கம் இளைஞர்களிடம் மட்டும் அல்ல எல்லா வயதினர்களிடம் ஏற்பட்டு உள்ளது என்பதனை நம்மால் அறிய முடிகிறது. நம் குடியரசுத்தலைவர், பிரதமர், முதல் ஏன் 93 வயது பெரியவர் கலைஞர் வரை அனைவரின் சமூக வலைதள பயன்பாட்டினை கான  முடிகிறது. அத்தகைய சமூக வலைதளங்கள் சமீப நாட்களாக திசை திரும்பி பயணிக்க தொடங்கி இருப்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு காட்டவும் கிலியை ஏற்படுத்தவும் செய்கின்றது. வினுப்ரியா அவர்களின் மரணமும் அதை தான் நமக்கு சுட்டுகிறது. இது போன்ற தவறான/மோசமான செயல்களுக்கும் சமூக ஊடகங்கள் பயன்படுவது அதிர்ச்சியை தான் ஏற்படுத்துகின்றன. முதலில் நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் மனித தன்மையுடன் செயல்படுவோம் என்ற உறுதி மொழியை உலக சமூக ஊடக தினமான இன்று ஏற்போம். பல  வினுப்ரியாக்கள் நம்மை உடன் பிறப்புகளாக நம்பி தான் சமூக ஊடகங்களுக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல் படுவோம். சரியான உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடுவோம். சமூக வலைதளத்தை சரியான முறையில் பயன் படுத்துவோம். போஸ்ட்களும், மீம்ஸ்களும் இடுவது குற்றம் அல்ல அவை பிறர் பாதிக்காதவண்ணமும் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காதவண்ணமும் இருத்தல் வேண்டும். சமூக வலைத்தளங்கள் நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் இடமும் கூட.........    

Wednesday 29 June 2016

"உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?" மனிதாபிமானம் குன்றி வரும் சென்னை வாசிகளே!

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சட்ட பேரவையில் சொல்லும் நாளிற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நடைபெற்ற கொலைகளை கண்டால் தமிழகம் அமைதி பூங்காவாக  இல்லை, கொலை மயாணமாக(?) மாறி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதுவும் நுங்கம்பாக்கம் ஸ்வாதி அவர்களின் படுகொலை சென்னையில் மனிதாபி மானிகள் இன்னும் வாழ்கிறார்களா? என்ற கேள்வி நம் முன் வந்து செல்கிறது.  அதிகாலை பொழுதில் எப்பொழுதும் போல தன் அன்றாட வேலைகளை கவனிக்க தான் அலுவலகத்திற்கு புறப்பட்ட ஸ்வாதி அவர்களுக்கும் அவரை ரயில் நிலையம் வரை கொண்டு வந்து விட்ட அவர் அப்பாவிற்கும் தெரியாது, நாம் அன்றாடம் மனிதாபிமானம் அற்ற ஜந்துக்களுடன் (மன்னிக்கவும் மனித தன்மை அற்ற எவரும் மனிதன் அல்ல என்றே இதுகாறும் நான் படித்த கேட்ட அறிவு) தான் பயணிக்கிறோம் என்று. அன்று ஒருவர் அல்லது இருவர் இணைந்து குரல் கொடுத்தாவாது அதனை தடுக்க முற்பட்டிருக்கலாம். இதில் இருந்தே நம்மவர்களிடம் மனிதபிமானமும் இல்லை, ஒற்றுமையும் இல்லை, என்று அறிய முடிகிறது. அட! ஐந்து அறிவு ஜீவிகளிடம் கூட ஓற்றுமை உள்ளது. முன்பு ஒரு முறை  அநேகமாக 2011 ஆண்டு ஆட்சி பொறுப்பில் முதல்வர் அவர்கள் அமர்ந்த போது கொள்ளையர்களும், கொலையாளிகளும் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர். இனி தமிழகம் அமைதி பூங்காவாக  செயல்படும் என்ற வார்தைகளை உதிர்த்த நியாபகம். அப்படியானால் அந்த கூலி படையினருக்கோ  அல்லது அரசின் அனுமான படி கூலி படை அல்லாதவற்கும் துணிச்சல் பிறந்து விட்டதா? துணிச்சல் பிறந்து விட்டது என்றால் அதற்கு காரணம் யார்? அதற்கு மக்களின் அரசு மட்டும் காரணம் அல்ல மக்களாகிய நாமும் ஓர் காரணம் தான்  நகரமயம் ஆன பிறகு சென்னையில் கலாச்சாரம் மட்டும் அல்ல மனிதாபிமானமும் குறைந்து விட்டது (அழியவில்லை!) என்றே இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. இதை பயன் படுத்தியே கூலி படையினரும்  தமிழகத்தில் தன்  கை வரிசையை காட்ட துவங்கி உள்ளனர். இத்துணை கொடூர கொலையை தடுக்க முன் வராத உங்களை தான் சென்னை பெரு வெள்ளத்தின் போது எத்துணை எத்துணை மனிதாபிமானிகள்  தமிழகதின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்து தமிழகத்தில் என்றுமே மனிதாபிமானம் சாகாது என்று உணர்த்திவிட்டு சென்றனர். ஆனால் இன்று அதே  சென்னையில் அத்துணை பேர் முன்பு பட்ட பகலில் மனிதாபிமானம் அற்ற முறையில் மனிதாபிமானம் உள்ள ஒரு பெண்ணிற்கு ஓர் கொடூரம் நடக்கிறது அதை தடுக்க அங்குள்ள எந்த சென்னை வாசிகளும் முன் வரவில்லை. அன்று நீங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது உங்களை போன்று அன்று யாரும் உதவ முன் வரவில்லை என்றால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கனம் நினைத்து பாருங்கள். பொதுவாக செய்த நன்றியை சொல்லிக்காட்டும் வழக்கம் இல்லாதவர்கள் தமிழர்கள் ஆனால் நம் கண் முன்பே தன்  மக்களின் மனிதாபி மானம் இழப்பதை  கண்டு கனத்த இதயத்துடன் தான் இதை இங்கு நினைவு கூறுகிறேன். இந்த நிகழ்வு மட்டும் அல்ல இது போன்று எத்தனை எத்தனை ஸ்வாதிகள், என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. அதில் ஸ்வாதியின் பெயரும் இடம் பெறுமே ஒழிய, மக்களின் மனதில் மனிதாபிமானம் இடம் பெறபோவதில்லை(?). வசிப்பிடம் தான் நகரமயம் ஆகி வரலாமே ஒழிய மனித மனதில் மனிதாபிமானம் அழிந்து நகரமாய் ஆகி விட கூடாது. அப்போது தான் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாகவும், சென்னை சிங்கார சென்னையாகவும்  இருக்கும் என்பதை உணருங்கள். இந்த தருணத்திலும் எனக்கு ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது அது வைகை புயல் வடிவேல் அவர்களின் நகைச்சுவை "உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?". சென்னை வாசிகளே. ஒரு கனம்  நினைத்து பாருங்கள் உங்கள் மனமே உங்களை வறுத்து எடுக்கும். இனியேனும் மனிதாபிமனதுடன் ஒன்று பட்டு செயல்பட்டு நாம் மனிதர்கள் தான், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்று உலகிற்கு உணர்த்துவோம். ஏனெனில் உலகம் அனைத்தையும் வெகு விரைவில் மறந்து விடும் நம்மைப் போல(!)..................

Saturday 14 May 2016

வாக்களிப்போம் நேர்மையாக!


இன்று நீங்கள் சுதந்திரமாக பேசமுடிகிறது, எழுத முடிகிறது, வலை பதிவுகளை இட முடிகிறது. ஏன் உங்கள் நண்பரில் இருந்து நம் பிரதமர் வரை கலாய்ப்பதற்கு  மீம்ஸ் பதிவிட முடிகிறது என்றால் அதற்கான காரணம் ஒன்று தான் நாம்  ஜனநாயக நாட்டினர் என்பதே. நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க தயார் பொழுது கழிக்க தயார் ஆனால் உங்களுடைய ஜனநாயக கடமையாற்ற மட்டும் நீங்கள் தயார் இல்லை. காரணமோ  தெரியவில்லை! உங்களின் அத்துணை உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு உரிமை உண்டெனில் அது ஜனநாயகத்தின் திறவுகோலான வாக்குரிமை. அது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட. முன்  எப்போதும் இல்லாத அளவு இந்த முறை தேர்தல் ஆணையமும் மிக கடுமையான விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கி உள்ளது. சமுக வலைதளமாக இருக்கட்டும் , கல்லூரிகளாக இருக்கட்டும், பொது மக்கள் கூடும் இடமாக இருக்கட்டும் அது தன் பணியை செய்து கொண்டு தான்  இருக்கிறது. ஆனால் திரை அரங்குகளில் படம் பார்க்க எத்துனை பெரிய வரிசையில் நிற்க தயாராக இருக்கும் நம்மால் , சமூக வலை தளங்களில் உலாவ தயாராக இருக்கும் நம்மால். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பொழுதை போக்க தயாராக இருக்கும் நம்மால்  வாக்களிக்க சில மணி துளிகளை செலவு செய்ய தயாராக இல்லை. ஒன்றை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் நீங்கள் சுதந்திர  காற்றை சுவாசிக்க காரணம்  ஜனநாயகம். ஜனநாயகத்தை சரியாக பயன் படுத்தினால் தான் நீங்கள் சுதந்திரமாக வாழ இயலும். மேலும் நான் இந்த பள்ளியில் தான்  இந்த கல்லூரியில் தான் படிப்பேன், இந்த உடையை தான் அணிவேன், இதை தான் உண்ணுவேன், இந்த பொருளை தான் பயன் படுத்துவேன், இந்த இடத்தில தான் வேலை செய்வேன் என்று கூறும் நீங்கள், ஏன் உங்களை இவர்கள்  தான் ஆள வேண்டும் என்று விரும்புவது இல்லை. மேலும் வாக்களிக்க பணம் தருவது மட்டும் அல்ல பெறுவதும் குற்றம். நீங்கள் பணம் பெறுகிறிர்கள் என்றால். நீங்கள் அவர்கள் செய்த/ செய்ய போகும் பாவங்களுக்கு உங்களுடைய பங்கினை கேட்கின்றீர்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள்  எப்பொழுது லஞ்சம் பெற நினைத்தீர்களோ அப்போதே நீங்கள் உங்களின் அத்துணை உரிமைகளும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் சமூகத்தின் கொள்ளைக்காரனாகிவிடுகிறீர்கள். எனவே இந்த எண்ணத்தை மாற்றி வாக்களிப்பதற்கு பணம் பெறுவது தனது தன்மானத்தை விற்கும் இழி செயல் என கருதி நேர்மையாக வாக்களிக்கும் படியும், நீங்கள் மட்டும் அல்லாமல் உங்களின் பெற்றோர்கள் நண்பர்கள், உறவினர்களையும் நேர்மையாக வாக்களிக்க வைக்க வேண்டியதும் உங்களின் கடமை என்பதை உணருங்கள். இந்த முறையேனும் 100 சதவிகித வாக்கினை  நேர்மையாக அளித்து நம் ஜனநாயக கடமையை ஆற்றுவோம். வாக்களிப்போம் நேர்மையாக!.......

Saturday 31 October 2015

லஞ்சம்- மக்களாகிய நாமும் ஓர் காரணமா?


நம் நாட்டில் இன்று அதிக அளவு ஊழலும் லஞ்சமும் பெருகி இருப்பதற்கு காரணம் அதிகாரிகள் மட்டும் இல்லை மக்களாகிய நாமும் தான். அவர்கள் கேட்டதால் தான்  பணம் கொடுத்தாக வேண்டி உள்ளது என்று கூறுபவரா நீங்கள்? உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று இனியாவது உணருங்கள். நான் அதிகாரிகளுக்காக உங்களை குறை கூறவில்லை உண்மையை எடுத்துரைக்க விரும்பிகிறேன். உங்களுக்கான அவசரத்தையும் உங்களுடைய காலதாமதமும் தான் அதிகாரிகளின் பிளஸ். நாளை சமர்பிக்க வேண்டிய விண்ணப்பத்திற்கு இன்று தான் பலர் அரசு அலுவலகம் சென்று அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இன்னப்பிற விஷயங்களுக்காக அந்த அதிகாரிகள் முன் நின்றால் உங்களின் அவசரத்திற்கு ஏற்ற ஒரு விலையை (லஞ்சம்) நிர்ணயம் செய்கின்றனர். இங்கு விலை என்பது உங்களின் அவசரத்திற்கு கொடுக்கும் லஞ்சம். அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்பு காலாவதியான ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க தவறி நீங்கள் என்றேனும் காவல் துறைக்கு(லஞ்சம் அல்லது அபராத தொகைக்கு) பயந்து புதுப்பிக்க அதிகாரியிடம் சென்றால் உங்களின் கால தாமதத்திற்கு என்று ஓர் விலை (லஞ்சம்). உங்கள் காலதாமதத்திற்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அது போல் உங்களின் பொறுப்புணர்ச்சி அற்ற செயலும் தான் காரணம் உங்களுடைய கவன குறைவால் ஏதேனும் ஒருமுக்கியமான சான்றிதழை வீட்டில் வைத்து விடுவது அல்லது அந்த சான்றிதழ் வாங்காமலே விட்டு விடுவது போன்ற காரணங்களுக்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அந்த விலை (லஞ்சம்) உங்களின் சான்றிதழ் இல்லாமையை பொருத்து மாறுபடுகிறது. நம் அரசு  சான்றிதழ்களை,  சான்றிதழ்களை பொருத்து இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விடவேண்டும் என்று ஒரு வரைமுறையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் புதுப்பிக்க தவறிய  சான்றிதழ்களையும் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வேறு தந்துள்ளது. அது மட்டும் அல்லாது இப்போது ஆன்லைன் வசதியை பயன் படுத்தி அரசு, மக்கள்  எளிதாக  சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இணைய சேவைகளை வேறு வழங்கி வருகிறது. இருப்பினும்  நான் லஞ்சம் கொடுத்து தான்  சான்றிதழ்களை பெறுவேன் என்று உங்கள் பணத்தை விரயமாக்குவதை மக்களாகிய நம்முடைய முட்டாள்தனம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அட என்னப்பா இது, அந்த அதிகாரி எல்லாம் சரியாக இருந்தும் லஞ்சம் கேட்க்கிறார் என்கிறீர்களா? இருக்கவே இருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்ப்பு துறை உங்கள் புகாரை அந்த துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1800-11-0180 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது http://cvc.nic.in/ என்ற இணைய முகவரியிலோ சென்று உங்கள் புகார்களை அளிக்கலாம். அவ்வாறு அளிப்பது மூலம் ஒரு நல்ல இந்திய குடிமகனாய் நம் கடமையை சரியாக செய்தோம் என்ற ஓர் உணர்வை பெறலாம்.மேலும் நம்  சான்றிதழ்களையும் பெறுவதோடு நாட்டையும் நாட்டு  மக்களையும் சுரண்டிய ஓர் ஊழல் பெருச்சாளியை விரட்டி, இனி சுரண்டாமல் தடுத்தோம் என்ற மகிழ்ச்சியை பெறலாம். சரி அந்த அதிகாரி லஞ்சம்  கொடுக்காததால் வேண்டும் என்றே தாமதம் செய்கிறார் என்றால் என்ன செய்ய என்கிறீர்களா? இதோ அதற்கும் வழி இல்லாமல் இல்லை, நீங்கள் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உங்கள் புகாரை சமந்தப்பட்ட துறையின் சமந்தப்பட்ட அதிகாரிக்கு தரலாம். அப்படியும் நடவடிக்கை இல்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல் பெற்று ஆதரங்களை  திரட்டி நீதி மன்றங்களை அணுகி வெற்றி பெறலாம். இதெல்லாம் சரி இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டுமே என்கிறீர்களா? அதை நம் மக்கள் பிரதிநிதிகளும், மக்களுக்கு என உள்ள அதிகரிகளும் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவகத்திலும் பெறக் கூடிய சான்றிதழ்கள் என்ன, அவற்றை பெறக்கூடிய வழிமுறை என்ன, அவற்றை பெற தேவையான ஆவணங்கள் என்ன,  அவற்றை எத்தனை நாட்களில் பெற முடியும், புகார் தர வேண்டிய அதிகாரியின் பதவி, முகவரி, அலுவலக எண், மற்றும் வலைதள முகவரி, லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் எண் வலைதள முகவரி போன்ற தகவலுடன் கூடிய பதாதைகளை மக்களின் கண்களுக்கு தெரியும் படி அலுவலகங்களில் இருக்க செய்தல் வேண்டும், மேலும் மக்களிடம் இது குறித்த மேலும் சில விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் மட்டும் அல்ல மக்களாகிய நம்முடைய பொறுப்பும் கூட. இன்று முதலேனும் நாம்  லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன் என்று உறுதி ஏற்போம். "இந்திய குடிமகனாகிய நான் இன்று முதல் லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன்" என உறுதி கொள்கிறேன். உறுதி ஏற்றால் மட்டும் போதாது அதை நெஞ்சில் நிறுத்தி கடைபிடிக்கவும் வேண்டும். கடைபிடிப்பீர்களா? 

Friday 14 August 2015

UNSPLASH:ஓர் புகைப்பட வலை தளம்

சமூக வலை தளங்களில் புகைப்படங்களில் வார்த்தைகளால் விளையாடுபவரா நீங்கள்? அட புகைப்படம் நல்லவே கிடைக்கவில்லை கிடைத்த புகைப்படமும் நல்ல தரத்தில் இல்லை என்று எண்ணுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இப்பொழுது unsplash (https://unsplash.com/) எனும் இனையதளத்தை அறிமுகம் செய்கிறேன் அந்த தளத்தில் நிறைய அழகிய  புகைபடங்களை  நல்ல தரத்துடன்  காண முடிகிறது. பிறகு என்ன டவுன்லோட் செய்து மாற்றம் செய்து புகை படத்தை உங்களின் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து விடுங்கள். 

Knoword: ஆங்கில விளையாட்டு

 நாம் எதையேனும் ஒன்றை   விளையாட்டாய், வேடிக்கையாய்   கற்றால் நாம் அவற்றை  எளிதில் கற்று விடுவதோடு மட்டும் அல்லாமல் அதை நீண்ட நாட்களுக்கு  எளிதில் நினைவில் கொள்வோம். ஆங்கிலம்  என்றாலே அலறி ஒடுபவராக இருப்பவர்களுக்காக ஆங்கிலத்தை விளையாட்டாய் கற்று கொள்வதற்கு உதவுகிறது knoword(http://knoword.org/) என்னும் இணையதளம். இந்த இணைய தளமானது ஒரு வார்த்தையின் அர்த்தத்தையும்(பொருள்) அந்த வார்த்தையின்  முதல் எழுத்தையும் அளித்து விடும் அதை வைத்து நாம் அந்த வார்த்தையினை கண்டு பிடித்திடல் வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 20 புள்ளிகளும் 5 நொடி கூடுதல் நேரமும் தரப்படும். தவறான அல்லது பதில் அளிக்காத கேள்விகளுக்கு 10 புள்ளிகள் கழிக்கப்படும். இதன் மூலம் உங்களால்  அதிக வார்த்தைகளை கற்று கொள்ள முடியும். அங்கிலத்தை அறிந்திட வாழ்த்துக்கள்.

Sunday 9 August 2015

நல்ல தரத்துடன் முழு அளவுடன் கூடிய பிரிண்ட் ஸ்க்ரீனிற்கு?

நீங்கள் வலை தளத்தில் உலாவி கொண்டு  இருக்கையில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த அல்லது  தேவை படுகின்ற ஒன்றை உங்கள் தேவைக்கோ அல்லது நண்பர்களுக்கு பகிர நினைத்தால் பிரிண்ட் ஸ்க்ரீன் option ஐ பயன்  படுத்துவோர் அதிகம் ஆனால் அதில் தெளிவாகவோ அல்லது ஓர் குறிப்பிட்ட அளவிற்கு மேல் முழுமையாகவோ இருக்காது, அதற்காகவே ஓர் வலைதள செயலி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது அதில் நீங்கள் பிரிண்ட் ஸ்க்ரீன் எடுக்க வேண்டிய வலை பக்கத்தின் முகவரியை மட்டும் கொடுத்தால் போதும் அந்த வலை பக்கம் முழுவதும் பிரிண்ட் ஸ்க்ரீன் எடுக்கப்பட்டு காட்டும் மேலும் அதனை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.  இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழு பக்கத்தையும் நல்ல தரத்துடன் வழங்குவதே. அதனை zoom  செய்து பார்த்தல் புரியும். பிரிண்ட் ஸ்க்ரீன்னுக்கு ctrlq.org/screenshots/

Monday 3 August 2015

கலாம் எனும் - ஓர் இதிகாசம்

இராமேசுவரத்தில் முத்தாய் பிறந்து
பொக்ரைன் அணுகுண்டு சோதனை  செய்து அயல்நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்  எல்லாம் சிம்ம சொப்பணமாய் விளங்கிய நீ
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய்
உலக விண்வெளி ஆராய்ச்சியின் தலை மகனாய்
பாரதத்தின் ரத்தினமாய் 
இந்தியாவின் மூத்த குடிமகனாய்
இவ்வுலகத்திற்கு  கிடைத்த அரிதான வைரம் நீ
உன்னிடம் கற்று கொள்ள ஏராளம் -ஆனால்
காலமோ இல்லை தாராளம் 
உன்னுடைய எளிமையே உனது வலிமை
உன்னுடைய அன்பு என்னும் பலகீனமே உனது பலம்
உன்னுடைய தனிமையே உனது தனிச் சிறப்பு
உன் புன்னகையில் ஓர் குழந்தையை  கண்டோம்
உன் மனிதநேய  பண்பில் இறைவனை கண்டோம்
எங்களை கனவு காண செய்வதையே கனவாக கொண்டு -கடைசி மூச்சு வரை
உங்களுடைய அறிவையும், ஆற்றலையும் அளித்து
மஹாபாரத கர்ணனாய்
திரு குரானில்  வரும் மலைக்கராய்
பைபல் படி நல்ல மேய்ப்பராய்
ஜாதி மதங்களை தாண்டி ஓர் தனி இதிகாசமாய்  வாழ்ந்த உம்
இறப்பிற்கு எங்கள் கண்நீர்த் துளிகளை சிந்தாமல்
உன்னுடைய 2020ல் இந்தியா கனவிற்கு வேர்வை துளிகளை சிந்தி
உழைத்து அந்த வெற்றி  துளியை உனக்கு காணிக்கை ஆக்குவோம்
உனது கனவு இந்தியாவில் நீ வாழ முடியாமல் விதி சதி செய்து இருக்கலாம்- ஆனால் 
உனது கனவு இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதையும் - ஒவ்வொரு
மனித இதயத்தில் நீ வாழ்வதையும் எந்த விதியாலும் சதியாலும் தடுக்க இயலாது

லஞச ஊழல்  அற்ற  வல்லரசு இந்தியாவை உருவாக்க
ஓர் மாணவனாய் ஓர் இளைஞராய்
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய் உறுதி பூணுகின்றோம்.
 


Sunday 28 June 2015

வீட்டில் இருந்து கொண்டே உங்களின் அறிவை உபயோகப்படுத்தி சம்பாதிக்க!

அடச்சே! நமள்ள எதுக்கு லட்சகணக்கா செலவு பண்ணி இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க வீட்ல சும்மா உட்காரவா? என்று புலம்பும் பெண்ணா நீங்கள்? அல்லது படித்து கொண்டே வேலை செய்ய நினைக்கும் மாணவர்களா நீங்கள்? உங்களுக்கான பகுதி இதோ. என்னுடைய அறிவை உபயோகப்படுத்த வேண்டும்  அதே நேரத்தில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கான வேலையை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் அதற்காக பல வலைதளங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கின்றன அதில் சில  நம்ப தகுந்த வலைதளங்கள் மூலம் உங்களுக்கான வேலையை நீங்கள் செய்ய இதோ எங்களின் பரிந்துரைகள்:
                                                                    1-freelancer.in 
                                                                    2-guru.com 

 உங்களின் முன்னேற்றதிற்கு வாழ்த்துக்கள் !!!

ஜிமெயிலில் நாம் அனுப்பிய மெயிலினை திரும்ப பெறுவது எப்படி ?


அய்யய்யோ! மெயிலை தவறான மெயில் id க்கு அனுப்பி விட்டோமே, தவறான பைலினை அட்டாச் செய்து அனுப்பி விட்டோமே  என வருந்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக நாம் அனுப்பிய மெயிலை திரும்பப்  பெரும் வசதியினை ஜிமெயில் நமக்கு ஏற்படுத்தி தந்து உள்ளது. ஆனால் என்ன தற்சமயம் இதை செய்வதற்கான நேரம் குறைவு 05-30 நொடிகள் தான். இதுவரை கூகுள் labs மூலம் இந்த சேவையை பரிசோதனை மூலம் நமக்கு வழங்கியது. அதை நம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது கூகுள் நிறுவனம். இதனை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஜிமெயிலினை log in செய்தால் வரும் திரையின் வலது பக்கத்தின் மேல் பகுதியில் பல்சக்கரம் போன்ற icon ஐ கிளிக் செய்து settings optionஐ கிளிக் செய்தால் வரும் திரையில் undo send யினை enable செய்து  உங்களுக்கு தேவையான நேர அளவினை select செய்து save  செய்தால் நீங்கள் இந்த வசதியினை எளிதாக பெற்றுவிடலம். சரி எப்படி undo செய்வது என்று கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பதில் நீங்கள் மெயிலினை send செய்த பிறகு  மேலே காட்டி உள்ளவாறு notification ஒன்று வரும் அதில்  நீங்கள் undoவினை நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் click செய்தால் நீங்கள் உங்கள் மெயிலினை எளிதாக திரும்ப பெற்று கொள்ளலாம்.

Sunday 14 June 2015

பணிப் பண்பாடு -இறையன்பு

பணிப் பண்பாடு -இறைன்பு 
முதல் பதிப்பு: மே 2009
  பதிப்பகம் -NCBH                             விலை -15


‘மற்றவர்களுக்காகப் பணி செய்கிறோம்’ என நினைத்தால் உடலில் தளர்வும் உள்ளத்தில் சோர்வும் ஏற்படும். “நமக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்” என்கிற உண்மை புரிந்தால், உழைப்பு களைப்பை வரவழைக்காது. ஈடுபாடு இல்லாமல், எந்தப் பணியைச் செய்தாலும் அது வயலுக்குப் பாய்ச்சும் வாய்க்காலாக இல்லாமல், நிழலுக்கு இறைத்த நீராகிவிடும். நேரத்தை மாத்திரம் சேர்த்து வைக்க முடியாது. இன்று பணியாற்ற மறுத்தால், ஒருநாள் போனது போனதுதான். மகத்தான மண்டபத்தை உருவாக்க நினைக்கிறபோது, அதில் கலசம் வைக்கிறவர்கள் மட்டுமல்ல; கடைக்கால் எழுப்புபவர்களும் அக்கறையோடு பணியாற்றினால்தான், கட்டடம் காற்றில் இடிந்து விழாமல் காப்பாற்றப்படும்.
"சென்னை வானொலியில் உழைப்பின் மகத்துவம் பற்றி ஐந்து நாட்கள் உரையாற்றக் கேட்டிருந்தார்கள். அந்த உரைகள் பணிப்பண்பாடு என்கிற சின்னச் சஞ்சிகையாகத் தொகுக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் வாசித்து விடலாம். பல நிறுவனங்கள் இந்த நூலை தன்னுடைய பணியாளர்களுக்கு வாங்கி வழங்கி கட்டாயம் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தின. பணியை பாரமாகக் கருதாமல் இனிமையான நிகழ்வாகக் கருதவேண்டும் என்கிற மையக் கருத்து சின்ன சம்பவங்களின் துணையோடு சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருந்ததால் இதை போல நிறைய எழுதவேண்டுமென்று பதிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். இதை வாசித்த பலர் தாங்கள் செய்கிற பணியை புதிய அணுகுமுறையுடன் நோக்குவதாகத் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் இது வெற்றி பெற்ற நூல்."
இறையன்பு
  நன்றி :iraianbu.in

வாசிப்போம் வளர்வோம்

வாசிப்போம் வளர்வோம் 
கதை நீதி : புத்தகங்களே வாழ்க்கையின் தத்துவங்கள்.
கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களிடம் பேராசிரியர் ஒருவர்
மாணவர்களே இன்ப சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கே செல்லலாம் என்று நீங்களே கூறுங்கள் என்று கேட்டார். உடனே மாணவன் ஒருவன் எழுந்து குற்றாலம் என்றான். அதற்கு பல மாணவர்கள் பார்த்தாச்சு என்று கூறினர். இன்னொரு மாணவன் கொடைக்கானல், மற்றொரு மாணவன் ஊட்டி, ஓகேனக்கல், என்று கூற அதற்கும் பார்த்தாச்சு என்றே பதில் வந்தது. உடனே ஒரு மாணவன் எழுந்து நம் கல்லூரியின் நூலகம் செல்லலாம், அங்கு தான் ஒருவரும் சென்றதில்லை என்று கூறினார். உடனே வகுப்பறை முழுவதும் ஒரே சிரிப்பலை எழுந்தது. இது சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திக்கவும் வேண்டிய விஷயம். இது மாணவர்களிடம் வசிக்கும் திறன் குறைந்து கொண்டே செல்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. பல சாதனையாளர்களை உருவாக்கியது புத்தகங்கள் தான் என்பது மறுக்க  முடியாத உண்மை. சில சாமானியன்களை சரித்திர சாதனையாளர்களாக மாற்றிய புத்தகம்:
ரஸ்கினின் கடையனுக்கும் கடை தோற்றம்  - மோகன் தாஸ் என்ற சாமானியனை                 மகாத்மாவாக மாற்றியது.
சேக்கிழரின் பெரிய புராணம்  - வெங்கட்ராமனாய் இருந்தவரை பகவான் ரமனமஹிரிஷியாய் மாற்றியது.
 இது போன்று எராளமானவர்களின் வாழ்க்கையையே மாற்றியப் புத்தகங்கள் உங்களையும் உயர்த்த காத்து கொண்டு தான் இருக்கின்றன.

தலைமை பண்பு

தலைமை பண்பு
கதை நீதி :தலைமைக்கு தகுதி வேண்டும்
மாவீரன் அலெக்சாண்டர் தன் போர் வீரர்களுடன் உலகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது பாலை வனம் ஒன்றை அடைந்தனர்.அப்போது அனைவரும் தண்ணீர் தாகத்தால் சோர்வடைந்தனர். அப்போது அந்த வழியே சில இறை தொண்டர்கள் சென்றனர்.அப்போது அலெக்சாண்டரை கண்ட அவர்கள் தங்களிடம் இருந்த குவளை தண்ணீரினை அவனுடைய தலை கவசத்தில் ஊற்றி கொடுத்து பருகுமாறு கூறினர்.அதற்கு அந்த மாவீரனோ என் தலைமையை நம்பி   எனக்காகவும் தங்கள் நாட்டுக்காகவும்  இவர்கள் என்னுடன் வந்து உள்ளனர்.எனவே இவர்களை விடுத்து  நான் மட்டும் தண்ணீரை பருகினால் அது தலைமைக்கு அழகல்ல,என்று கூறி தண்ணீரை பருக மறுத்து நன்றி கூறி  இறை தொண்டர்களிடம் இருந்து விடை பெற்றான்.இதை கண்ட போர் வீரர்கள் அட நம் மன்னர் நம்மை சிறப்பித்து விட்டார், என்று கூறி உற்சாகத்தில் தாகத்தை மறந்து போர் புரிந்து  வெற்றிகளை குவித்து அலெக்ஸாண்டரின் பாதங்களில் சமர்பித்தனர். 

விடா முயற்சியும் தன்நம்பிக்கையும்

விடா முயற்சியும் தன்நம்பிக்கையும் 
கதை நீதி :விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி 
வழிப்போக்கன்  ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. ஊரை சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே தண்ணீரை தேடிய பயணம் செல்ல வேண்டி இருந்தது.அப்படியோர் வறட்சி நிலவி இருந்தது.அப்போது ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்து கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார்.உடனே அந்த வழிப்போக்கன் நன்றி என்று கூறி விட்டு ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம் மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால்  உனக்கு இறைவனின் கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.உடனே அந்த விவசாயி ஐயா இந்த நிலமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரை போன்று வறண்டு தான் கிடந்தது.என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும்   தான் இன்று இப்படி காட்சி அளிக்கிறது என்று பணிவாக கூறினான்.மேலும் ஐயா நான் இந்த நிலத்தை பதபடுத்திய போது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை உடன் என் மனமும் பக்குவப்பட்டது என்றான்.இது போன்ற விடா முயற்சியும் தன்நம்பிகையும் இருந்தால் நாம் ஈடுபடும் காரியத்தில் மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றி பெறலாம் என்று அந்த வழிபோக்கனுக்கு புரிந்தது.

தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்:

தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்:
கதை நீதி : துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம்  தளராமல் இருக்க வேண்டும்
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி முடித்தார்.

முயற்சி

முயற்சி 
கதை நீதி :முயற்சி  திருவினை ஆக்கும் :
ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய தேயிலையை எல்லா கடைகளிலும் விற்பதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டுபட்டு இருந்தார்.ஆனால்  அந்த  பகுதியில்  அந்த தேயிலை பரிட்சயம் இல்லை.ஆனால் விற்பனை பிரதிநிதியின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு சிலர் மட்டும் சில பொட்டலங்களை வாங்கி காட்சிக்கு வைத்து இருந்தனர் .ஆனால்  ஒருவர் மட்டும் வாங்க மறுத்து வந்தார். உடனே அந்த விற்பனை பிரதிநிதி தன் மகளை அழைத்து அந்த கடைக்கு அனுப்பி அந்த தேயிலை இருகிறதா  என்று கேட்டு வாங்கி வரசொன்னார். இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன் மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்த கடயை நோக்கியே பலரும் படை எடுக்க வேறு வழி இன்றி அந்த கடைகாரரும் தேயிலை பொட்டலங்களைவாங்க ஆரம்பித்தார்.அவருடைய கடையிலும் அந்த தேயிலை பொட்டலங்களை பார்த்த மக்கள் சிலர் அதை வாங்க முன் வந்தனர். பிரதிநிதி பல இலவசம் மற்றும் தள்ளுபடி என்று வாங்குபவர்களை கவர்ந்து அந்த தேயிலையை மக்கள் மனதில் பதியவைத்தார். நாளடைவில் அந்த தேநீர் சுவையானது தான் என்று பரவலாக மக்களுக்கு தெரிய  ஆரம்பித்தது.இரண்டே ஆண்டுகளில் போட்டி தேயிலையை  வென்று தன கனவை நனவாக்கினார்.எனவே முயற்சி இருந்தால் நாம் எதிலும் வெற்றி அடையலாம்.

வண்டிகார பெருந்தகை

வண்டிகார பெருந்தகை
கதை நியதி :பலனை எதிர்பார்க்காதே!
ஒரு கூக்கிராமத்தை நோக்கி பண்டிதர் ஒருவர்  மாட்டு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த மாட்டு வண்டிகாரனிடம் அந்த பண்டிதர்,ஐயா இந்த ஊரில் சிதம்பரம்  பிள்ளை என்ற ஒரு வள்ளல் இருந்தாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர் மேலே போய் சேர்ந்துட்டார் என்று பதில் வந்தது.அது சரி அவரை பற்றி ஏன் கேட்டீர்கள்,என்று வண்டிக்காரன் கேட்டார்.அதற்கு அந்த பண்டிதர் தன் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ஏழையாக பிறந்த எமக்கு படிக்க பணம் கொடுத்த வள்ளல் அவர்.அதனால் தான் எமக்கு இந்த வாழ்கை கிடைத்தது,என்று கூறி அழுதுவிட்டார்.ஊர் வந்தவுடன் கீழே இறங்கி பேசிய வாடகையை எடுத்து நீட்டினார் அந்த பண்டிதர்.உடனே அந்த வண்டிக்காரன் பணம் வேண்டாம் என்று கூறி புறப்பட தயாரானான்.அதற்கு அந்த பண்டிதர், ஏன் வேண்டாம்,எதற்கு வேண்டாம் என்று கேட்டார் . அதற்கு அவர் ஐயா நீங்கள் கேட்ட சிதம்பரம் பிள்ளை பரம்பரை தாங்க நாங்க.இப்போ நொடிஞ்சு ஏழையாய் போய்ட்டோம்.மிச்சம் இருக்கிற இந்த மாடும் வண்டியும் தாங்க ஐயா எங்களுக்கு சோறு போடுது.ஆனாலும் எங்க ஐயா கொடுத்து வளர்ந்தவக நீங்க உங்ககிட்ட கூலி வாங்கினா கொடுத்த இடத்தில திருப்பி வாங்கின குத்தம் வருமுங்க நாங்க கொடுத்த இடத்தில் வாங்குறது இல்லைங்க என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தார் அந்த வண்டிகார பெருந்தகை.  

உழைப்பிற்கு வயது உண்டா ?

 உழைப்பிற்கு வயது உண்டா ?
கதை நீதி : உழைப்பே உயர்வு
அமெரிக்காவின் பிரபல கோடிஸ்வரர் ஒருவர் முதுமையிலும் கடும் உழப்பை மேற்கொண்டிருந்தார்.நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்பவர் அவர்.ஒரு முறை விமானத்தில் அவர் பயணம் செய்த போது பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர் அவரை வியப்புடன் பார்த்தார்.பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே இருந்தார்.உடனே அந்த இளைஞர் அவரிடம் அய்யா நீங்கள் ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்துளிர்கள்.இனியும் இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா என்று கேட்டார்.அதற்கு அந்த பெரியவர் தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல உயிரத்தில் பறக்க வைத்திருக்கிறார்.சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது சுலபமாக பறக்றது இல்லையா.அதான் விமானம் மேலே எறிவிட்டது என்று விமானி என்ஜின் ஐ   அணைத்துவிட்டால்  என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல தான்  வாழ்க்கையும் நாம் கடுமையாக   உழைத்து மேலே வந்து விட்டு,நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும் விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர் ராக்பெல்லர் ஆவார்.

கடவுளின் கருணையா ?

கடவுளின் கருணையா ?
கதை நீதி : முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.
                        ஒரு உலக புகழ் பெற்ற இசை மேதை ஒருவர் வழக்கம்போல
அபாரமாக ஒருமுறை பியானோ வாசித்தபோது கூடி இருந்த அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரம் ஆகியது.பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.அப்போது ஒரு பெண்மணி அவர் கரங்களை பற்றி கொண்டு முத்தமழை பொழிந்து,உங்கள் கரங்கள் விசேசமானவை.உங்களுக்கு என்று யாருக்கும் தராத சிறப்பான ஆற்றலை கடவுள் வழங்கி உள்ளார் என்று அப்பெண்மணி கூறினார்.அதற்கு அம்மேதை அம்மணி இது கடவுள் அளித்த ஆற்றல் இல்லை,தினம்தோறும் என்னுடிய 8 மணி நேர பயிற்சியின் பலன் இது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நீங்களும் இப்படி வாசிக்கலாம் என்று கூறிய இசை மேதை வேறு யாரும் இல்லை செவிப்புலன் பழுதுற்ற பீத்தோவன்.

கடவுளை விட மனிதன் உயர்ந்தவனா ?

கடவுளை விட மனிதன் உயர்ந்தவனா ?
கதை நீதி:உள்ளத்தனைவது உயர்வு.
                              யார்  உயர்ந்தவர் கடவுளா? மனிதரா? என்று கேட்டால் எப்பொழுதும்  கடவுளே உயர்ந்தவர் என்ற பதில் மட்டுமே வரும் கடவுளை விட மனிதன் உயர்ந்த கதை இது.மகாபாரத போரிலே அர்ச்சுனனின் அம்புகளால் கர்ணனை கொல்ல  முடியவில்லை.அவனது தானங்களின் புண்ணிய பலன் அவனை காத்தது .எனவே அவனை அம்புகளால் கொல்ல முடியாது என்று எண்ணிய கண்ணன்,மரணத்தையும் யாசிப்பது என்று முடிவு செய்து,ஏழை  அந்தணன் வடிவில் வந்து, நீ செய்த புண்ணியங்கள் யாவையும் எனக்கு தா  என்று யாசகம் கேட்டான்.வந்திருப்பது கண்ணன் என்பதை உணர்ந்த கர்ணன் இறைவனே நம்மிடம் இறைவனே யாசகம் கேட்கிறபோது மறுப்பது எப்படி என்று மகிழ்வுடன் நீ செய்த  புன்னிய பலனை மட்டும் தான் கேட்டாய் நான் உமக்கு செய்த, செய்கிற,செய்ய போகிற யாவையும் உமக்கு அளிக்கிறேன்.என்று தாரை வார்த்தான் கர்ணன்.இதயத்தில் வழிந்த இரத்தத்தை உளங்கையில் வாரிய கர்ணன் தாரை  வார்தான் கர்ணன்.தானம்  வாங்கும் பொழுது கடவுள் கண்ணன்  கை தாழ்ந்தது  கொடுக்கும் பொழுது மனிதன் கர்ணன்  கை உயர்ந்தது கொடுகிற  எண்ணம் மனிதனை உயர்த்தியது 
வாங்குகிற எண்ணம் கடவுளை தாழ்த்தியது. அதற்காக கடவுள் தாழ்ந்தவர் இல்லை.மனிதனை உயர்த்துவதற்காக கடவுள் தன்னை தாழ்ததவும் தயங்க மாட்டார் என்பதே நிர்தசனமான உண்மை.

பொன்னியின் செல்வன் -கல்கி

     எனக்கு  படித்ததில்  பிடித்தது               
ச.வேல்முருகன்,
துணைப்பேராசிரியர்,
ஆதிபராசக்தி  பொறியியல் கல்லூரி ,
மேல்மருவத்தூர்.                                                                       
                             
                                            பொன்னியின் செல்வன் -கல்கி
எனக்கு  படித்ததில்  பிடித்தது  கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற  வரலாற்று நாவல் தான் .பிற்கால  சோழர்களில் தலை சிறந்த மன்னராகிய இராஜா ராஜா சோழனின்  பெயரில் இருந்தாலும் வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத் தேவனே  கதையின் நாயகன் ஆவார் .தன்கையில் வந்த மணிமகுடத்தை இன்னொருவர் சிரசில் சுட்டிய தியாக சிகரம் அருள்மொழிலர்மனின் ( இராஜா ராஜா சோழன்) வீரத்தையும் தியாகத்தையும் மையமாக வைத்து வந்தியத் தேவன் எனும் கலகலப்பான பாத்திரத்தை கொண்டு மிக நேர்த்தியாக  கல்கி கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களையும வாசகர்களின் நாடிதுடிப்பிற்கு ஏற்றவாறு 
நகர்த்தி செல்வதுதான் அனைவரையும் கவர்ந்த ஒன்று.கடைசி அத்தியாயத்தில் "வேடிக்கையும்,விளையாட்டும் ,குறும்பும் ,குதூகலமும்,துடுக்கும்  உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை 
இனி நாம் காணப்போவதில்லை"என்று கல்கி அவர்கள் எழுதியதை  படித்தபோது  கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் ஆறாக ஓடியது இன்றும் மறக்க முடியாது.அப்போது நான் ஒன்பதாவது  வகுப்பு முடிந்து  பத்தாம் வகுப்பு செல்ல இருந்த நேரம் இருப்பினும் என்னை படிக்க தூண்டிய
என் பெற்றோர்களை நினைத்து  பெருமிதம் கொள்கிறேன்.