Sunday, 14 June 2015

விடா முயற்சியும் தன்நம்பிக்கையும்

விடா முயற்சியும் தன்நம்பிக்கையும் 
கதை நீதி :விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி 
வழிப்போக்கன்  ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. ஊரை சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே தண்ணீரை தேடிய பயணம் செல்ல வேண்டி இருந்தது.அப்படியோர் வறட்சி நிலவி இருந்தது.அப்போது ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்து கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார்.உடனே அந்த வழிப்போக்கன் நன்றி என்று கூறி விட்டு ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம் மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால்  உனக்கு இறைவனின் கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.உடனே அந்த விவசாயி ஐயா இந்த நிலமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரை போன்று வறண்டு தான் கிடந்தது.என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும்   தான் இன்று இப்படி காட்சி அளிக்கிறது என்று பணிவாக கூறினான்.மேலும் ஐயா நான் இந்த நிலத்தை பதபடுத்திய போது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை உடன் என் மனமும் பக்குவப்பட்டது என்றான்.இது போன்ற விடா முயற்சியும் தன்நம்பிகையும் இருந்தால் நாம் ஈடுபடும் காரியத்தில் மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றி பெறலாம் என்று அந்த வழிபோக்கனுக்கு புரிந்தது.

No comments:

Post a Comment