நீங்கள் உணவு இல்லாமல் கூட ஒரு நாள் இருந்து விடுவீர்கள், ஏன் குடிக்க தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்து விடுவீர்கள் ஆனால் ஒரு நிமிடம் கூட உங்களால் சமூக வலைதளத்தில் டிவீட்டர் இல் tweet அல்லது retweet செய்யாமலோ facebook இல் போஸ்ட் போடாமலோ அல்லது share செய்யாமலோ இன்ஸ்டாகிராம் இல்லாமலோ கூகிள் பிளஸ் சில் போஸ்ட் போடாமலோ உங்களால் இருக்க முடியாது. உலகின் பல நாடுகளில் சமீப காலமாக புரட்சி ஏற்பட தொடங்கிய இடம் சமூக வலைதளம். தங்கள் உலகின் அத்துணை தவறுகளையும் தட்டி கேட்க்கும் இடமாகவும் நெட்டிசன்களின் பொழுது போக்கு அம்சமாகவும், சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் மீம்ஸ் மன்னர்களின் அவையாகவும் இருந்த இருக்கும் இருக்க போகும் இடமாகவும்,
இருக்கும் இடம் சமூக வலைதளம். புரட்சிகளுக்கு மட்டும் அல்ல அமைதிக்கும் சமூக செய்யற்பாட்டுக்கும் உதவிய தளமும் கூட. சென்னை பெரு வெள்ளத்தில் அரசிற்கு முன்பே நம்மை ஒருங்கிணைத்தது சமூக வலைதளமே. சமூக வலைதளம் ஓர் அரசினை புரட்சியால் அகற்றவும் முடியும் அதே சமூக வலைதளத்தின் மூலம் ஆட்சியை அமைக்கவும் முடியும் என்பதை சமீபத்திய இந்திய தேர்தல் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. சமூக வலைதளத்தின் மூலம் விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும் கட்சிகள் முன் வைத்த போதே உங்களுக்கு அது புரிந்து இருக்கும். நாட்டில் ஒரு தவறு நடந்தவுடன் ஒரு வலை பதிவு வருகிறது உடனே அந்த தவறு அரசு தரப்பில் சரி செய்ய படுகிறது . அதே போல் ஓர் உதவி என்று சமூக வலைதளத்தில் ஒரு குரல் கேட்கிறது உடனே அந்த உதவியினை மனிதாபி மானம் உடைய ஒருவரால் அந்த நபருக்கு சரியான நேரத்திற்குள் சென்று அடைகிறது என்றால் அது சமூக ஊடகத்தின் தாக்கத்தால் மட்டுமே முடியும். சமூக வலைதளத்தின் தாக்கம் இளைஞர்களிடம் மட்டும் அல்ல எல்லா வயதினர்களிடம் ஏற்பட்டு உள்ளது என்பதனை நம்மால் அறிய முடிகிறது. நம் குடியரசுத்தலைவர், பிரதமர், முதல் ஏன் 93 வயது பெரியவர் கலைஞர் வரை அனைவரின் சமூக வலைதள பயன்பாட்டினை கான முடிகிறது. அத்தகைய சமூக வலைதளங்கள் சமீப நாட்களாக திசை திரும்பி பயணிக்க தொடங்கி இருப்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு காட்டவும் கிலியை ஏற்படுத்தவும் செய்கின்றது. வினுப்ரியா அவர்களின் மரணமும் அதை தான் நமக்கு சுட்டுகிறது. இது போன்ற தவறான/மோசமான செயல்களுக்கும் சமூக ஊடகங்கள் பயன்படுவது அதிர்ச்சியை தான் ஏற்படுத்துகின்றன. முதலில் நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் மனித தன்மையுடன் செயல்படுவோம் என்ற உறுதி மொழியை உலக சமூக ஊடக தினமான இன்று ஏற்போம். பல வினுப்ரியாக்கள் நம்மை உடன் பிறப்புகளாக நம்பி தான் சமூக ஊடகங்களுக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல் படுவோம். சரியான உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடுவோம். சமூக வலைதளத்தை சரியான முறையில் பயன் படுத்துவோம். போஸ்ட்களும், மீம்ஸ்களும் இடுவது குற்றம் அல்ல அவை பிறர் பாதிக்காதவண்ணமும் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காதவண்ணமும் இருத்தல் வேண்டும். சமூக வலைத்தளங்கள் நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் இடமும் கூட.........
No comments:
Post a Comment