Monday, 20 October 2014

SWACCH BHARAT


எனக்கு  பலமுறை தோன்றி இருக்கிறது.ஏன் நம் இந்தியா இவ்வளவு குப்பையும் கூளமாக இருக்கிறது.நம் ஊரில் மட்டும் தான்  இப்படியா? என்று யோசிக்க தோன்றும்.ஆனால் நம் ஊரில்  தான் ரோட்டில் குப்பையை போட்டு செல்லுபவர்,ரயில் நிலைய நடை மேடையில் உணவு பொட்டலத்தை தூக்கி போடுபவர்,சுவற்றில் சிவப்பு நிற பெயிண்ட் அடித்தார் போல பளிச் என்று வெற்றிலையை மென்று துப்பி செல்லும் பாட்டி,ஏன் நம் நாட்டின் புண்ணிய நதியான கங்கையை கூட நம்மால் சுத்தமாக வைத்து இருக்க முடியவில்லை.காரணம் என்னவென்றால்  நம் நாட்டில் உள்ள  121 கோடி மக்களும் எதாவது ஒரு வழியில்  நம் நாட்டை அசுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இது பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்த போது ஒரு உண்மை எனக்கு சுளீர் என உணர்த்தியது.நீங்கள் நாட்டிற்கு வந்து விட்டீர் அவரவர் வீட்டினையே சுத்த படுத்தாத போது எங்கு நாட்டை....... என்று சொல்லி தலையில் அடித்து கொண்டார். இது போன்ற அசுத்தமான இந்தியாவை தூய்மை படுத்துவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள திட்டமே SWACCH  BHARAT திட்டம்.இத்திட்டத்தின் மூலம் நம் நாட்டை ஒரே நாளில் தூய்மை படுத்தி விட முடியாது என்பது  அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை  இந்தியாவின்   தூய்மைக்கான ஒரு முன்னோடி திட்டமாகவே இதை நாம் கருத வேண்டும். நம் வீடு போன்று தான் நம் நாட்டையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.இதற்கே  அரசாங்கம்  திட்டம் போட்டு தான் நடைமுறைபடுத்துகிறது என்றால் பாரத்தின் பிள்ளைகளான நம்மிடம் எவ்வளவு பொறுப்புணர்ச்சி இருக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது.எனவே  உறங்கி கிடக்கும் நம்மை   சத்தமாக எழுப்பும் இத்திட்டத்தை நாம் உபயோகப்  படுத்தி நம் தாய் நாட்டை சுத்தம் செய்திட வேண்டும். சுத்தம் செய்தால் மட்டும் போதுமா இல்லையே சுத்தத்தை நாம் பராமரிக்கவும் வேண்டும், என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அத்துடன் அரசாங்கமும் மக்களுக்கு போதிய  அடிப்படை வசதிகளும், அத்துடன் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.அரசு மட்டும் தான் இதை செய்ய வேண்டுமா???????