அய்யய்யோ! மெயிலை தவறான மெயில் id க்கு அனுப்பி விட்டோமே, தவறான பைலினை அட்டாச் செய்து அனுப்பி விட்டோமே என வருந்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக நாம் அனுப்பிய மெயிலை திரும்பப் பெரும் வசதியினை ஜிமெயில் நமக்கு ஏற்படுத்தி தந்து உள்ளது. ஆனால் என்ன தற்சமயம் இதை செய்வதற்கான நேரம் குறைவு 05-30 நொடிகள் தான். இதுவரை கூகுள் labs மூலம் இந்த சேவையை பரிசோதனை மூலம் நமக்கு வழங்கியது. அதை நம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது கூகுள் நிறுவனம். இதனை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஜிமெயிலினை log in செய்தால் வரும் திரையின் வலது பக்கத்தின் மேல் பகுதியில் பல்சக்கரம் போன்ற icon ஐ கிளிக் செய்து settings optionஐ கிளிக் செய்தால் வரும் திரையில் undo send யினை enable செய்து உங்களுக்கு தேவையான நேர அளவினை select செய்து save செய்தால் நீங்கள் இந்த வசதியினை எளிதாக பெற்றுவிடலம். சரி எப்படி undo செய்வது என்று கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பதில் நீங்கள் மெயிலினை send செய்த பிறகு மேலே காட்டி உள்ளவாறு notification ஒன்று வரும் அதில் நீங்கள் undoவினை நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் click செய்தால் நீங்கள் உங்கள் மெயிலினை எளிதாக திரும்ப பெற்று கொள்ளலாம்.
No comments:
Post a Comment