Showing posts with label சமூக பிரச்சனைகளுக்கு சுமுக தீர்வு. Show all posts
Showing posts with label சமூக பிரச்சனைகளுக்கு சுமுக தீர்வு. Show all posts

Monday, 21 May 2018

"ஜஸ்டி என்னும் ஜஸ்டிஸ்"

















மணிமகுடம் சூடவில்லை
மகுடத்தின் மாணிக்கமாய்
மிளிர்கிறாய்...

கருத்துரிமைக்கான நீதி ஆணையிட்டாய்
நீதி உரிமைக்காக அணியினை
வகுத்துவிட்டாய்
மக்களுக்காக....

தனிமனித ரகசியம் அடிப்படை உரிமை என்றாய்...
மகுடத்திற்கான நியமன ரகசியம் உடைத்தாய்...
நீதிக்காக.....

பதவிக்கு அலைவோர் நடுவில்
நடுநிலை தவறாது நீதி அளித்தாய்...
குடியானவனுக்காக...

இதோ நீ விடை பெற போகிறாய்...
பிரிவு உபச்சாரம் இல்லாது..
சம்பிரதாயங்களை உடைத்தாய்...
சம்பிரதாயப் பணிகளை மறுத்தாய்...
பகுத்தறிவாளனாக...


நீ பதவியில் இருந்து விடை பெற்றாலும்..
உன் அதிகாரம் குறைந்தாலும்..
நீ பிறப்பித்த ஆணைகள்
மக்கள் அதிகாரமாய்...
உன் கருத்துக்கள் நீதி துறையின்
கருத்துருக்களாய்...

உன் ஆசை சீர்திருத்தங்கள்..
விரைவில் பிறக்கட்டும்...
உன் ஓய்வுக்கு பின் வாழ்க்கை சிறக்கட்டும்...
தன் பெயரில் ஜஸ்டி வைத்து ஜஸ்டிஸ்
வழங்கிய நீதிமானே...
ஜஸ்டி செலமேஸ்வர் எனும் பெயர் நீதி துறை
வரலாற்றில் பதியட்டும்....
உன் புகழ் சிறக்கட்டும்..
உன் மக்கள் தொண்டு தொடரட்டும்...
உன் வாழ்வு மலரட்டும்...

                   -பரத் சந்திரன் சுப்ரமணியன்.


Sunday, 22 January 2017

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகுமா?

ஜல்லிக்கட்டுக்கு தமிழக ஆளுநர் அவசர சட்டம் ஒன்றை பிறப்பிததுள்ளார். அவசர சட்டம் குறித்த விளக்கம். மாநிலம் பிறப்பிக்கும் அவசர சட்டம் என்பது சட்டசபை நடை பெறாத போது மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் படி ஆளுநர் சட்டம் பிறப்பிக்க நம்முடைய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் சட்டமன்றம் கூடிய 6 வார காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏற்கபட்டால் அது நிரந்திர சட்டமாகும். இல்லையேல் அவசர சட்டம் காலவாதி ஆகிவிடும். எனவே அவசர சட்டம்  சட்டமன்றம் கூடிய 6 வார காலம் மட்டுமே செல்லுபடி ஆகும். 6 மாதம் என குறிப்பிடுவது 2 சட்டமன்ற கூட்ட தொடர்க்கு இடைப்பட்ட அதிக பட்ச கால இடைவெளியே ஆகும். எனவே ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். ஏனெனில் ஜனவரி 23 அன்று சட்ட மன்றம் கூட இருப்பதால் அது மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். ஒருவேளை இச்சட்டமன்ற கூட்ட தொடரில் நிறவேற்றப்பட்டால் அது நிரந்தர சட்டமாகும் இல்லையேல் மார்ச் 5ல் அவசர சட்டம் காலவாதி ஆகிவிடும். எனவே இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்று நாம் நம்புவோம்.

Thursday, 30 June 2016

புரட்சி முதல் வினுப்ரியா வரை சமூக ஊடகம் - உலக சமூக ஊடக தினம்

நீங்கள் உணவு இல்லாமல் கூட ஒரு நாள் இருந்து விடுவீர்கள், ஏன் குடிக்க  தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்து விடுவீர்கள் ஆனால் ஒரு நிமிடம் கூட உங்களால் சமூக வலைதளத்தில் டிவீட்டர் இல் tweet அல்லது retweet செய்யாமலோ facebook இல் போஸ்ட் போடாமலோ அல்லது share செய்யாமலோ இன்ஸ்டாகிராம் இல்லாமலோ கூகிள் பிளஸ் சில் போஸ்ட் போடாமலோ உங்களால் இருக்க முடியாது.  உலகின் பல நாடுகளில் சமீப காலமாக புரட்சி ஏற்பட தொடங்கிய இடம் சமூக வலைதளம்.  தங்கள் உலகின் அத்துணை தவறுகளையும் தட்டி கேட்க்கும் இடமாகவும் நெட்டிசன்களின் பொழுது போக்கு அம்சமாகவும், சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் மீம்ஸ் மன்னர்களின் அவையாகவும் இருந்த இருக்கும் இருக்க போகும் இடமாகவும்,
இருக்கும் இடம் சமூக வலைதளம். புரட்சிகளுக்கு மட்டும் அல்ல அமைதிக்கும் சமூக செய்யற்பாட்டுக்கும் உதவிய தளமும் கூட. சென்னை பெரு வெள்ளத்தில் அரசிற்கு முன்பே நம்மை ஒருங்கிணைத்தது சமூக வலைதளமே. சமூக வலைதளம் ஓர் அரசினை புரட்சியால் அகற்றவும் முடியும் அதே  சமூக வலைதளத்தின் மூலம் ஆட்சியை அமைக்கவும் முடியும் என்பதை சமீபத்திய இந்திய தேர்தல் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. சமூக வலைதளத்தின் மூலம் விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும் கட்சிகள் முன் வைத்த போதே உங்களுக்கு அது புரிந்து இருக்கும்.  நாட்டில் ஒரு தவறு நடந்தவுடன் ஒரு வலை பதிவு வருகிறது உடனே அந்த தவறு அரசு தரப்பில் சரி செய்ய படுகிறது .  அதே போல் ஓர் உதவி என்று சமூக வலைதளத்தில் ஒரு குரல் கேட்கிறது உடனே அந்த உதவியினை மனிதாபி மானம் உடைய ஒருவரால் அந்த நபருக்கு சரியான நேரத்திற்குள் சென்று அடைகிறது என்றால் அது சமூக ஊடகத்தின் தாக்கத்தால் மட்டுமே முடியும். சமூக வலைதளத்தின் தாக்கம் இளைஞர்களிடம் மட்டும் அல்ல எல்லா வயதினர்களிடம் ஏற்பட்டு உள்ளது என்பதனை நம்மால் அறிய முடிகிறது. நம் குடியரசுத்தலைவர், பிரதமர், முதல் ஏன் 93 வயது பெரியவர் கலைஞர் வரை அனைவரின் சமூக வலைதள பயன்பாட்டினை கான  முடிகிறது. அத்தகைய சமூக வலைதளங்கள் சமீப நாட்களாக திசை திரும்பி பயணிக்க தொடங்கி இருப்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு காட்டவும் கிலியை ஏற்படுத்தவும் செய்கின்றது. வினுப்ரியா அவர்களின் மரணமும் அதை தான் நமக்கு சுட்டுகிறது. இது போன்ற தவறான/மோசமான செயல்களுக்கும் சமூக ஊடகங்கள் பயன்படுவது அதிர்ச்சியை தான் ஏற்படுத்துகின்றன. முதலில் நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் மனித தன்மையுடன் செயல்படுவோம் என்ற உறுதி மொழியை உலக சமூக ஊடக தினமான இன்று ஏற்போம். பல  வினுப்ரியாக்கள் நம்மை உடன் பிறப்புகளாக நம்பி தான் சமூக ஊடகங்களுக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல் படுவோம். சரியான உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடுவோம். சமூக வலைதளத்தை சரியான முறையில் பயன் படுத்துவோம். போஸ்ட்களும், மீம்ஸ்களும் இடுவது குற்றம் அல்ல அவை பிறர் பாதிக்காதவண்ணமும் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காதவண்ணமும் இருத்தல் வேண்டும். சமூக வலைத்தளங்கள் நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் இடமும் கூட.........    

Wednesday, 29 June 2016

"உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?" மனிதாபிமானம் குன்றி வரும் சென்னை வாசிகளே!

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சட்ட பேரவையில் சொல்லும் நாளிற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நடைபெற்ற கொலைகளை கண்டால் தமிழகம் அமைதி பூங்காவாக  இல்லை, கொலை மயாணமாக(?) மாறி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதுவும் நுங்கம்பாக்கம் ஸ்வாதி அவர்களின் படுகொலை சென்னையில் மனிதாபி மானிகள் இன்னும் வாழ்கிறார்களா? என்ற கேள்வி நம் முன் வந்து செல்கிறது.  அதிகாலை பொழுதில் எப்பொழுதும் போல தன் அன்றாட வேலைகளை கவனிக்க தான் அலுவலகத்திற்கு புறப்பட்ட ஸ்வாதி அவர்களுக்கும் அவரை ரயில் நிலையம் வரை கொண்டு வந்து விட்ட அவர் அப்பாவிற்கும் தெரியாது, நாம் அன்றாடம் மனிதாபிமானம் அற்ற ஜந்துக்களுடன் (மன்னிக்கவும் மனித தன்மை அற்ற எவரும் மனிதன் அல்ல என்றே இதுகாறும் நான் படித்த கேட்ட அறிவு) தான் பயணிக்கிறோம் என்று. அன்று ஒருவர் அல்லது இருவர் இணைந்து குரல் கொடுத்தாவாது அதனை தடுக்க முற்பட்டிருக்கலாம். இதில் இருந்தே நம்மவர்களிடம் மனிதபிமானமும் இல்லை, ஒற்றுமையும் இல்லை, என்று அறிய முடிகிறது. அட! ஐந்து அறிவு ஜீவிகளிடம் கூட ஓற்றுமை உள்ளது. முன்பு ஒரு முறை  அநேகமாக 2011 ஆண்டு ஆட்சி பொறுப்பில் முதல்வர் அவர்கள் அமர்ந்த போது கொள்ளையர்களும், கொலையாளிகளும் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர். இனி தமிழகம் அமைதி பூங்காவாக  செயல்படும் என்ற வார்தைகளை உதிர்த்த நியாபகம். அப்படியானால் அந்த கூலி படையினருக்கோ  அல்லது அரசின் அனுமான படி கூலி படை அல்லாதவற்கும் துணிச்சல் பிறந்து விட்டதா? துணிச்சல் பிறந்து விட்டது என்றால் அதற்கு காரணம் யார்? அதற்கு மக்களின் அரசு மட்டும் காரணம் அல்ல மக்களாகிய நாமும் ஓர் காரணம் தான்  நகரமயம் ஆன பிறகு சென்னையில் கலாச்சாரம் மட்டும் அல்ல மனிதாபிமானமும் குறைந்து விட்டது (அழியவில்லை!) என்றே இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. இதை பயன் படுத்தியே கூலி படையினரும்  தமிழகத்தில் தன்  கை வரிசையை காட்ட துவங்கி உள்ளனர். இத்துணை கொடூர கொலையை தடுக்க முன் வராத உங்களை தான் சென்னை பெரு வெள்ளத்தின் போது எத்துணை எத்துணை மனிதாபிமானிகள்  தமிழகதின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்து தமிழகத்தில் என்றுமே மனிதாபிமானம் சாகாது என்று உணர்த்திவிட்டு சென்றனர். ஆனால் இன்று அதே  சென்னையில் அத்துணை பேர் முன்பு பட்ட பகலில் மனிதாபிமானம் அற்ற முறையில் மனிதாபிமானம் உள்ள ஒரு பெண்ணிற்கு ஓர் கொடூரம் நடக்கிறது அதை தடுக்க அங்குள்ள எந்த சென்னை வாசிகளும் முன் வரவில்லை. அன்று நீங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது உங்களை போன்று அன்று யாரும் உதவ முன் வரவில்லை என்றால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கனம் நினைத்து பாருங்கள். பொதுவாக செய்த நன்றியை சொல்லிக்காட்டும் வழக்கம் இல்லாதவர்கள் தமிழர்கள் ஆனால் நம் கண் முன்பே தன்  மக்களின் மனிதாபி மானம் இழப்பதை  கண்டு கனத்த இதயத்துடன் தான் இதை இங்கு நினைவு கூறுகிறேன். இந்த நிகழ்வு மட்டும் அல்ல இது போன்று எத்தனை எத்தனை ஸ்வாதிகள், என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. அதில் ஸ்வாதியின் பெயரும் இடம் பெறுமே ஒழிய, மக்களின் மனதில் மனிதாபிமானம் இடம் பெறபோவதில்லை(?). வசிப்பிடம் தான் நகரமயம் ஆகி வரலாமே ஒழிய மனித மனதில் மனிதாபிமானம் அழிந்து நகரமாய் ஆகி விட கூடாது. அப்போது தான் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாகவும், சென்னை சிங்கார சென்னையாகவும்  இருக்கும் என்பதை உணருங்கள். இந்த தருணத்திலும் எனக்கு ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது அது வைகை புயல் வடிவேல் அவர்களின் நகைச்சுவை "உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?". சென்னை வாசிகளே. ஒரு கனம்  நினைத்து பாருங்கள் உங்கள் மனமே உங்களை வறுத்து எடுக்கும். இனியேனும் மனிதாபிமனதுடன் ஒன்று பட்டு செயல்பட்டு நாம் மனிதர்கள் தான், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்று உலகிற்கு உணர்த்துவோம். ஏனெனில் உலகம் அனைத்தையும் வெகு விரைவில் மறந்து விடும் நம்மைப் போல(!)..................

Saturday, 14 May 2016

வாக்களிப்போம் நேர்மையாக!


இன்று நீங்கள் சுதந்திரமாக பேசமுடிகிறது, எழுத முடிகிறது, வலை பதிவுகளை இட முடிகிறது. ஏன் உங்கள் நண்பரில் இருந்து நம் பிரதமர் வரை கலாய்ப்பதற்கு  மீம்ஸ் பதிவிட முடிகிறது என்றால் அதற்கான காரணம் ஒன்று தான் நாம்  ஜனநாயக நாட்டினர் என்பதே. நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க தயார் பொழுது கழிக்க தயார் ஆனால் உங்களுடைய ஜனநாயக கடமையாற்ற மட்டும் நீங்கள் தயார் இல்லை. காரணமோ  தெரியவில்லை! உங்களின் அத்துணை உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு உரிமை உண்டெனில் அது ஜனநாயகத்தின் திறவுகோலான வாக்குரிமை. அது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட. முன்  எப்போதும் இல்லாத அளவு இந்த முறை தேர்தல் ஆணையமும் மிக கடுமையான விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கி உள்ளது. சமுக வலைதளமாக இருக்கட்டும் , கல்லூரிகளாக இருக்கட்டும், பொது மக்கள் கூடும் இடமாக இருக்கட்டும் அது தன் பணியை செய்து கொண்டு தான்  இருக்கிறது. ஆனால் திரை அரங்குகளில் படம் பார்க்க எத்துனை பெரிய வரிசையில் நிற்க தயாராக இருக்கும் நம்மால் , சமூக வலை தளங்களில் உலாவ தயாராக இருக்கும் நம்மால். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பொழுதை போக்க தயாராக இருக்கும் நம்மால்  வாக்களிக்க சில மணி துளிகளை செலவு செய்ய தயாராக இல்லை. ஒன்றை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் நீங்கள் சுதந்திர  காற்றை சுவாசிக்க காரணம்  ஜனநாயகம். ஜனநாயகத்தை சரியாக பயன் படுத்தினால் தான் நீங்கள் சுதந்திரமாக வாழ இயலும். மேலும் நான் இந்த பள்ளியில் தான்  இந்த கல்லூரியில் தான் படிப்பேன், இந்த உடையை தான் அணிவேன், இதை தான் உண்ணுவேன், இந்த பொருளை தான் பயன் படுத்துவேன், இந்த இடத்தில தான் வேலை செய்வேன் என்று கூறும் நீங்கள், ஏன் உங்களை இவர்கள்  தான் ஆள வேண்டும் என்று விரும்புவது இல்லை. மேலும் வாக்களிக்க பணம் தருவது மட்டும் அல்ல பெறுவதும் குற்றம். நீங்கள் பணம் பெறுகிறிர்கள் என்றால். நீங்கள் அவர்கள் செய்த/ செய்ய போகும் பாவங்களுக்கு உங்களுடைய பங்கினை கேட்கின்றீர்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள்  எப்பொழுது லஞ்சம் பெற நினைத்தீர்களோ அப்போதே நீங்கள் உங்களின் அத்துணை உரிமைகளும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் சமூகத்தின் கொள்ளைக்காரனாகிவிடுகிறீர்கள். எனவே இந்த எண்ணத்தை மாற்றி வாக்களிப்பதற்கு பணம் பெறுவது தனது தன்மானத்தை விற்கும் இழி செயல் என கருதி நேர்மையாக வாக்களிக்கும் படியும், நீங்கள் மட்டும் அல்லாமல் உங்களின் பெற்றோர்கள் நண்பர்கள், உறவினர்களையும் நேர்மையாக வாக்களிக்க வைக்க வேண்டியதும் உங்களின் கடமை என்பதை உணருங்கள். இந்த முறையேனும் 100 சதவிகித வாக்கினை  நேர்மையாக அளித்து நம் ஜனநாயக கடமையை ஆற்றுவோம். வாக்களிப்போம் நேர்மையாக!.......

Saturday, 31 October 2015

லஞ்சம்- மக்களாகிய நாமும் ஓர் காரணமா?


நம் நாட்டில் இன்று அதிக அளவு ஊழலும் லஞ்சமும் பெருகி இருப்பதற்கு காரணம் அதிகாரிகள் மட்டும் இல்லை மக்களாகிய நாமும் தான். அவர்கள் கேட்டதால் தான்  பணம் கொடுத்தாக வேண்டி உள்ளது என்று கூறுபவரா நீங்கள்? உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று இனியாவது உணருங்கள். நான் அதிகாரிகளுக்காக உங்களை குறை கூறவில்லை உண்மையை எடுத்துரைக்க விரும்பிகிறேன். உங்களுக்கான அவசரத்தையும் உங்களுடைய காலதாமதமும் தான் அதிகாரிகளின் பிளஸ். நாளை சமர்பிக்க வேண்டிய விண்ணப்பத்திற்கு இன்று தான் பலர் அரசு அலுவலகம் சென்று அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இன்னப்பிற விஷயங்களுக்காக அந்த அதிகாரிகள் முன் நின்றால் உங்களின் அவசரத்திற்கு ஏற்ற ஒரு விலையை (லஞ்சம்) நிர்ணயம் செய்கின்றனர். இங்கு விலை என்பது உங்களின் அவசரத்திற்கு கொடுக்கும் லஞ்சம். அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்பு காலாவதியான ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க தவறி நீங்கள் என்றேனும் காவல் துறைக்கு(லஞ்சம் அல்லது அபராத தொகைக்கு) பயந்து புதுப்பிக்க அதிகாரியிடம் சென்றால் உங்களின் கால தாமதத்திற்கு என்று ஓர் விலை (லஞ்சம்). உங்கள் காலதாமதத்திற்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அது போல் உங்களின் பொறுப்புணர்ச்சி அற்ற செயலும் தான் காரணம் உங்களுடைய கவன குறைவால் ஏதேனும் ஒருமுக்கியமான சான்றிதழை வீட்டில் வைத்து விடுவது அல்லது அந்த சான்றிதழ் வாங்காமலே விட்டு விடுவது போன்ற காரணங்களுக்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அந்த விலை (லஞ்சம்) உங்களின் சான்றிதழ் இல்லாமையை பொருத்து மாறுபடுகிறது. நம் அரசு  சான்றிதழ்களை,  சான்றிதழ்களை பொருத்து இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விடவேண்டும் என்று ஒரு வரைமுறையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் புதுப்பிக்க தவறிய  சான்றிதழ்களையும் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வேறு தந்துள்ளது. அது மட்டும் அல்லாது இப்போது ஆன்லைன் வசதியை பயன் படுத்தி அரசு, மக்கள்  எளிதாக  சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இணைய சேவைகளை வேறு வழங்கி வருகிறது. இருப்பினும்  நான் லஞ்சம் கொடுத்து தான்  சான்றிதழ்களை பெறுவேன் என்று உங்கள் பணத்தை விரயமாக்குவதை மக்களாகிய நம்முடைய முட்டாள்தனம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அட என்னப்பா இது, அந்த அதிகாரி எல்லாம் சரியாக இருந்தும் லஞ்சம் கேட்க்கிறார் என்கிறீர்களா? இருக்கவே இருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்ப்பு துறை உங்கள் புகாரை அந்த துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1800-11-0180 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது http://cvc.nic.in/ என்ற இணைய முகவரியிலோ சென்று உங்கள் புகார்களை அளிக்கலாம். அவ்வாறு அளிப்பது மூலம் ஒரு நல்ல இந்திய குடிமகனாய் நம் கடமையை சரியாக செய்தோம் என்ற ஓர் உணர்வை பெறலாம்.மேலும் நம்  சான்றிதழ்களையும் பெறுவதோடு நாட்டையும் நாட்டு  மக்களையும் சுரண்டிய ஓர் ஊழல் பெருச்சாளியை விரட்டி, இனி சுரண்டாமல் தடுத்தோம் என்ற மகிழ்ச்சியை பெறலாம். சரி அந்த அதிகாரி லஞ்சம்  கொடுக்காததால் வேண்டும் என்றே தாமதம் செய்கிறார் என்றால் என்ன செய்ய என்கிறீர்களா? இதோ அதற்கும் வழி இல்லாமல் இல்லை, நீங்கள் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உங்கள் புகாரை சமந்தப்பட்ட துறையின் சமந்தப்பட்ட அதிகாரிக்கு தரலாம். அப்படியும் நடவடிக்கை இல்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல் பெற்று ஆதரங்களை  திரட்டி நீதி மன்றங்களை அணுகி வெற்றி பெறலாம். இதெல்லாம் சரி இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டுமே என்கிறீர்களா? அதை நம் மக்கள் பிரதிநிதிகளும், மக்களுக்கு என உள்ள அதிகரிகளும் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவகத்திலும் பெறக் கூடிய சான்றிதழ்கள் என்ன, அவற்றை பெறக்கூடிய வழிமுறை என்ன, அவற்றை பெற தேவையான ஆவணங்கள் என்ன,  அவற்றை எத்தனை நாட்களில் பெற முடியும், புகார் தர வேண்டிய அதிகாரியின் பதவி, முகவரி, அலுவலக எண், மற்றும் வலைதள முகவரி, லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் எண் வலைதள முகவரி போன்ற தகவலுடன் கூடிய பதாதைகளை மக்களின் கண்களுக்கு தெரியும் படி அலுவலகங்களில் இருக்க செய்தல் வேண்டும், மேலும் மக்களிடம் இது குறித்த மேலும் சில விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் மட்டும் அல்ல மக்களாகிய நம்முடைய பொறுப்பும் கூட. இன்று முதலேனும் நாம்  லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன் என்று உறுதி ஏற்போம். "இந்திய குடிமகனாகிய நான் இன்று முதல் லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன்" என உறுதி கொள்கிறேன். உறுதி ஏற்றால் மட்டும் போதாது அதை நெஞ்சில் நிறுத்தி கடைபிடிக்கவும் வேண்டும். கடைபிடிப்பீர்களா? 

Monday, 2 March 2015

யார் தான் காரணம் ?

தினம் தினம் இன்னல்களை அனுபவிப்பது எனது அன்பு சகோதர மீனவர்கள் என்ற எண்ணம் ஏன் டெல்லியில் உள்ள பெரிய மனிதர்களுக்கு வரவில்லை.
இலங்கை மீதான பயமா?, இங்குள்ள பெரிய மனிதர்கள் எடுத்துரைக்க வேண்டிய விதத்தில் எடுத்துரைக்காததன் விணையா? இல்லை, தமிழர்கள் தானே என்ற எண்ணமா ?  யார் தான் காரணம்? இலங்கை மீதான பயமா என்றால்  குழந்தைக் கூட  இல்லை என்று சொல்லி விடும் காரணம் மிக மிக சிறய படை பலம்  கொண்ட இலங்கையிடம் இந்தியா பயப்படுகிறதா? என்றால் இல்லை. சரி, இங்குள்ள அரசியல்வாதிகள் எடுத்துரைக்க வேண்டிய விதத்தில் எடுத்துரைக்காததன் விணை என்றால் நம் தமிழக அரசியல்வாதிகளின் அலட்சியம் ஒரு காரணமா? அப்படி என்றால் பிறகு  எதற்கு இத்தகைய பிரதிநிதிகள், நாம் எதற்கு இவர்களுக்கு ஓட்டு போட்டு மக்கள் மன்றங்களுக்கு அனுப்பினோம். முடிய வில்லை என்றால் ஏன் முடிய வில்லை பிறகு எதற்கு வாக்குறுதிகளை அள்ளி அள்ளி அளிக்கிறார்கள். நம் மக்கள் தானே முட்டாள்கள் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம், பிறகு வாக்குறுதிகளை   அவர்களே மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?  அல்லது தமிழர்கள் தானே என்கிற  டெல்லியில் உள்ள பெரிய மனிதர்களின் எண்ணமா?  அப்படி என்ற எண்ணம் படைத்த அரசியல்வாதிகளிடம் நாம் பெருமையாக ஒன்றினை   சொல்லுவோம் "எங்கள் முன்னோர்களைப் போல் நாங்கள்  முல்லைக்கு தேரும்  கொடுப்போம், எங்களை சீண்டினால் இமயத்திலும் தமிழரின் வீரத்தை நிலை நாட்டிடுவோம்"  என்று.  

Sunday, 18 January 2015

ஏன் இந்த அலட்சியம் கேட்பீர்களா ?

இந்தியர்கள்  திறமையானவர்கள், அறிவாளிகள், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிறகு ஏன் இந்தியா வளரும் நாடுகளின் பட்டியலிலே பல ஆண்டுகளாக உள்ளது  என்று எல்லார்  மனதிலும்  சந்தேகம் எழும் அல்லவா? அதற்கான விடை இதோ நம்மவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை என்றவுடன் மூட்டை முடுச்சுகளை கட்டி கொண்டு கிளம்பி விடுகிறார்கள். வெளிநாட்டினரும் நம்மவர்களை நன்கு பயன் படுத்தி கொள்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியான தகவல். நம்மவர்களுக்கு வெளிநாட்டில் வேலை என்றால் பெருமைதானே என்று நீங்கள் கேட்கலாம்? பெருமை தான் ஆனால் அது இந்தியாவிற்கு ஒரு பெரும் இழப்பு, எப்படி என்று கேள்வி எழுகிறதா? அதற்கும் விடை இங்கே உங்களுக்கு புரியும் வண்ணம் கூற வேண்டுமானால் "ஒரு மகன் தன் சம்பளத்தை தாயிடம் அளிக்காமல் அவனின் மாமியாரிடம் அளித்தால் அந்த தாயின் இழப்பு என்னவோ?" அது தான் நம் இந்திய தாய் நாட்டிற்கான இழப்பும்  என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த தாய்  எப்படி தன் மகன் சம்பாதிக்கிறான் என்று பெருமை கொள்கிறாளோ  அது போல தான்  அவர்களின் தாய்  நாட்டை சார்ந்த  நாம்(சகோதர,சகோதரிகளாக) பெருமைபட்டு கொள்கிறோம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை. இதனால் அந்த தாய்  எந்த பயனும் அடைவது இல்லையோ அது போல நம் இந்திய திரு நாடும் எந்த வளர்ச்சியும்/பயனும் அடைவது இல்லை. எனவே தான் நாம் வளரும் நாடாகவே இருக்கிறோம். பிறகு ஏன் அவர்கள்  இந்தியாவில் வேலை செய்யவில்லை என்ற கேள்வி எழும் அல்லவா? அதற்கும் விடை இங்கே  நம்மவர்களுக்கான எந்த நவீன வசதியையும்/வாய்ப்புகளையும்  இந்திய அரசாங்கம்  ஏற்படுத்தி தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  அதனால் தான்  மாமியார் ஏற்படுத்தி கொடுத்த வசதிக்கும்/வாய்ப்பிற்கும் மருமகன் நன்றி சொல்கிறான். ஏன் இந்தியாவில் வசதிகளும்/வாய்ப்புகளும் இல்லையா?  இல்லை என்றால் ஏன் இல்லை என்று மனம் கொந்தளிகிறதா? உண்மையில் இந்தியாவில் சில வசதிகளை தவிர அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் வாய்ப்பு? என்ன ஆனால்? என்று கேட்கிறீர்களா?வாய்ப்புகளை ஊழல் நிறைந்த அரசியலாலும், தன் நாட்டை தாய் நாடு என்று கருதாத அரசியல்வாதிகளாலும், குடிமக்களை சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும்  மதிக்காத பொறுப்பற்ற அதிகாரிகளாலும் தான் அந்த வாய்ப்புகள் உரியவரிடம் சென்றடையவில்லை. ஏன் இந்த ஊழலும், அலட்சியமும் நம் நாட்டை பற்றிக் கொண்டு உள்ளன என்று கேள்வியினை கேட்க மனம் துடிக்கிறதா? அதை நீங்கள் ஓட்டு போட்டு  தேர்வு செய்த  மக்கள் பிரதிநிதிகளிடமும், மக்கள் அதிகாரிகளிடமும் தான் நாம் கேட்க வேண்டும். கேட்பீர்களா ????????????????????????????????    



இந்தியர்களுக்கான மவுசு !

இன்றைய இளைஞர்களின்  முக்கிய கனவுகளில் ஒன்று படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது தான். அதே போல வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகம் இந்திய  இளைஞர்களை தான்  விரும்புகிறார்கள். சமீபத்தில் வேலை இல்லா திண்டாட்டம் வளர்ந்த  வல்லரசு நாடான  அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் தலை தூக்கி அவர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தியது. சில நாட்டு அரசாங்கங்கள் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்தன. அதில் அமெரிக்கா  அரசு இந்திய இளைஞர்களை கண்டு நடுங்கியது. அதனால் அவர்கள் தம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம்   நிறுவனங்களுக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்தது. இந்தியர்களின்  திறமையை உணர்ந்து இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர்      பில் கேட்ஸ் அவர்கள் ஒரு முறை தன் பேட்டியில் "அமெரிக்காவில் இந்தியர்களை தடை செய்தால்  என் நிறுவனத்தையே இந்தியாவிற்கு  மாற்றி விடுவேன் என்று கூறியுள்ளார் ". இதன் மூலம் நம் இந்தியர்களின் மவுசினை அறிந்து கொள்ளலாம். இதற்கு காரணம் தான் என்ன?  அதீத திறமையும், குறைந்த சம்பளமும் தான். எடுத்து காட்டாக மின்னஞ்சலினை கண்டறிந்தவர் வெளிநாடு வாழ் இந்தியர் (தமிழர் )  சிவா அய்யாதுரை , நோபல் பரிசு வென்ற வேதியல் அறிஞர்  வெளிநாடு வாழ் இந்தியர் (தமிழர் ) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். என்று நவீன உலகம் போற்றிடும் அறிஞர்கள் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களே! மேலும் நம்மவர்களின்  அறிவார்ந்த செயல்களால் தான் பல்வேறு நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்து/ அடைந்து கொண்டு /அடைய இருக்கின்றன என்பது இந்தியர்களின் திறமையை வெளிச்சமிட்டு காட்டி உள்ளது.

Friday, 2 January 2015

யாரை ஏமாற்றும் வேலை இது ?


பாமரன் முதல் கோடிஸ்வரன் வரை பயணம் என்றாலே ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகிறார்கள் காரணம் காசும்  கம்மி பயண சௌகரியமும் அதிகம் என்பது தான் ஆனால் இப்பொழுதோ நிலைமை தலைகீழ் என்ன தான் ஆயிற்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்திற்கு பல கோடி பேர் பயணிக்கும் ரயிலில் இன்று பயணம் செய்யவே தயக்கமாய்  இருக்கிறது காரணம் கட்டணம். முன்பெல்லாம் சாதாரண முன்பதிவு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ தட்கல் என்று கூறியும், ப்ரீமியம் தட்கல் என்று கூறியும் பாதி இருக்கைகளுக்கும் மேலாக அதிக கட்டணத்தை (கொள்ளை அடிக்கிறார்கள்) வசுலிக்கிறார்கள்.தட்கல் கட்டணமாவது பரவாய் இல்லை 90 ரூபாய் என்று தெரிந்து நாம் டிக்கெட் எடுக்கிறோம்.ஆனால் ப்ரீமியம் தட்கலில் சீரற்ற முறையில் (random) கட்டணத்தை கணிப்பொறியே தீர்மானிக்கிறது. எனவே பல நேரங்களில் நமக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதனால் சில நேரங்களில் விமான கட்டணத்தையே விஞ்சிவிடுகிறது.இதனால்  பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுக்கிறார்கள். ஆம்னி பஸ்கள்  கூட அரசிற்கு பம்முகிறார்ப்போல பாவனை செய்கின்ற இந்த வேளையில் பொது துறையில் இது  போன்ற மறைமுக கட்டணம்  என்பது  ஏற்றுக்கொள்ளக் கூடியது   இல்லை.  சரி இரயிலில்  பயணிப்பதற்கேற்ற சூழ்நிலையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.எங்கு பார்த்தாலும் எலியும் மூட்டை பூச்சியுமாகவே இருக்கின்றன.இதில் இந்தியாவில் எந்த ரயிலும் சரியாக வந்து சாதனை(!) படைத்தது கூட  கிடையாது.இது போன்ற சூழ்நிலையில் ஒரு பொது துறை நிறுவனம் இது போன்றதோர் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது என்பது யாரை ஏமாற்றும் வேலை? அரசு இது போன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை  தவிர்த்து இரயில்வே துறையை முன்னேற்றமடைய முயற்சி எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Wednesday, 29 October 2014

கல்வியில் தேவை தானா ஜாதி?


ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியின் பாடல்களை பக்கம் பக்கமாக பாட திட்டத்தினுள் வைத்துவிட்டு பள்ளியில் சேருவதற்கே ஜாதியை கேட்பது நகை முரண் அல்லவோ? அரசு பள்ளியிலாவது ஜாதியின் பெயரை மட்டும் தான் கேட்கிறார்கள்.பல உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளியில் நிலமை படு மோசம்.பள்ளியின் பெயரிலே ஜாதியை கொண்டும் ஜாதியை சார்ந்த பெயரைகொண்டும் இயங்கும் பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளிடம் ஜாதி என்னும் கருவேல விதையை விதைத்து விடுகிறார்கள்.ஒரு குழந்தை தான் பயிலும் பள்ளியை நடத்தும் நிர்வாகம் சார்ந்த ஜாதியை சேர்ந்ததாக மட்டும் இருந்தால் நிதி உதவி, இலவச நோட்டு புத்தகம், நன்கொடை என்று ரசிது இல்லாமல் வாங்க கூடிய பணம், என்று அனைத்தையும் இலவசமாக அளிக்கிறார்கள். ஒரே வகுப்பில் பயிலும் ஒரு ஜாதி குழந்தைகளுக்கு மட்டும் இச்சலுகைகளை அளித்து விட்டு மற்றொரு இனம் என்பதற்காக மற்ற குழந்தைகளுக்கு அளிக்காமல் இருக்கும் அந்த இடத்தில் ஏற்படும் ஜாதிய ஏற்ற தாழ்வு என்பது பிற்காலத்தில் எப்படி கருவேல மரம் மற்ற செடிகளை வளர விடுவதில்லையோ அது போன்றே அவர்கள் மற்ற இனத்தவ்ர்களையும் வளர விடுவதில்லை.இதுவே ஜாதிய வெறிக்கு அடிகோல் இடுகிறது.கல்வி என்பது ஒருவனுக்கு அறிவு என்னும் நெருப்பை பற்ற வைத்து அறியாமை எனும் இருளை நீக்க உதவிடும் ஒரு கருவி. ஆனால் தனியார் மயமாக்கப்பட்ட கல்வியில் இன்று பெரும் ஓட்டையாக இருப்பது ஜாதி, கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்காமல் அறியாமை எனும் ஜாதியை வளர்கிறார்கள். இது தீவிரவாதத்தை விட மிக கொடியது. நம்முடைய சிறுவயதில் அளிக்கப்படும் இத்தகைய நஞ்சுகளை எத்தனை அரியவகை விசமுறிவுகளை (கல்வி,அறிவு) அளித்தாலும் சரி குணப்படுத்த முடியாது. இந்த மன நோயை வளரவிடாமல் தடுக்க தேவை புதிய சட்டம். அதில் கல்வி நிறுவனங்கள் ஜாதியின் பெயராலோ, அல்லது ஜாதிய தலைவரின் பெயராலோ இயங்க கூடாது. அதே போல ஜாதிய அறநிலைகளாளும் இயங்க கூடாது. மேலும் ஒரு அறநிலையோ/தனி நபரோ தன் ஜாதிய குழந்தைகளுக்கு மட்டும் உதவி செய்வது என்பதே முட்டாள்தனம் தான். இருப்பினும் ஒரு குழந்தையின் அறிவுபெற அது உதவுமானால் நாம் அதை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கும் சில வழிமுறைகளை வைத்து, அதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால் எக்காரணம் கொண்டும் அவர்கள் கல்வி நிறுவனங்களின் மூலம் நேரடியாக சென்று உதவக்கூடாது. தேவை இருப்பின் விசாரித்து கொள்ளலாமே ஒழிய நேரடியாக கல்வி நிறுவனங்களின் மூலம் உதவ அனுமதிக்கக் கூடாது. மேலும் நாம் ஜாதிய அரசியலையும் விட்டு ஒழித்தால் மட்டுமே நம்மால் ஏற்ற தாழ்வற்ற இந்தியாவை உருவாக்கிட முடியும் என்பதில் எள் அளவுவேனும் நமக்கு சந்தேகம் வேண்டாம். நாம் போலியோவை விரட்டிவிட்டோம் என்று மாறு தட்டிக்கொள்கிறோம். அது போன்று ஜாதி எனும் மன நோயை எப்பொழுது????????????????????

Monday, 20 October 2014

SWACCH BHARAT


எனக்கு  பலமுறை தோன்றி இருக்கிறது.ஏன் நம் இந்தியா இவ்வளவு குப்பையும் கூளமாக இருக்கிறது.நம் ஊரில் மட்டும் தான்  இப்படியா? என்று யோசிக்க தோன்றும்.ஆனால் நம் ஊரில்  தான் ரோட்டில் குப்பையை போட்டு செல்லுபவர்,ரயில் நிலைய நடை மேடையில் உணவு பொட்டலத்தை தூக்கி போடுபவர்,சுவற்றில் சிவப்பு நிற பெயிண்ட் அடித்தார் போல பளிச் என்று வெற்றிலையை மென்று துப்பி செல்லும் பாட்டி,ஏன் நம் நாட்டின் புண்ணிய நதியான கங்கையை கூட நம்மால் சுத்தமாக வைத்து இருக்க முடியவில்லை.காரணம் என்னவென்றால்  நம் நாட்டில் உள்ள  121 கோடி மக்களும் எதாவது ஒரு வழியில்  நம் நாட்டை அசுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இது பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்த போது ஒரு உண்மை எனக்கு சுளீர் என உணர்த்தியது.நீங்கள் நாட்டிற்கு வந்து விட்டீர் அவரவர் வீட்டினையே சுத்த படுத்தாத போது எங்கு நாட்டை....... என்று சொல்லி தலையில் அடித்து கொண்டார். இது போன்ற அசுத்தமான இந்தியாவை தூய்மை படுத்துவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள திட்டமே SWACCH  BHARAT திட்டம்.இத்திட்டத்தின் மூலம் நம் நாட்டை ஒரே நாளில் தூய்மை படுத்தி விட முடியாது என்பது  அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை  இந்தியாவின்   தூய்மைக்கான ஒரு முன்னோடி திட்டமாகவே இதை நாம் கருத வேண்டும். நம் வீடு போன்று தான் நம் நாட்டையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.இதற்கே  அரசாங்கம்  திட்டம் போட்டு தான் நடைமுறைபடுத்துகிறது என்றால் பாரத்தின் பிள்ளைகளான நம்மிடம் எவ்வளவு பொறுப்புணர்ச்சி இருக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது.எனவே  உறங்கி கிடக்கும் நம்மை   சத்தமாக எழுப்பும் இத்திட்டத்தை நாம் உபயோகப்  படுத்தி நம் தாய் நாட்டை சுத்தம் செய்திட வேண்டும். சுத்தம் செய்தால் மட்டும் போதுமா இல்லையே சுத்தத்தை நாம் பராமரிக்கவும் வேண்டும், என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அத்துடன் அரசாங்கமும் மக்களுக்கு போதிய  அடிப்படை வசதிகளும், அத்துடன் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.அரசு மட்டும் தான் இதை செய்ய வேண்டுமா???????

Monday, 13 October 2014

குறை கூறவில்லை விடை கூறுகிறேன்

18 ஆண்டுகள் ஆகிவிட்டன எதற்கு சட்டப்படி ஒரு குழந்தை பெரியவன் என்ற அந்தஸ்து பெருவதற்கா? சட்டம் தன்  கடமையை செய்ய! ஆம்! தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர ஏறக்குறைய என் வயது. இந்த வழக்கில் குற்றம் சுமத்த பட்ட நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முதல் குற்றவாளி ஜெவுக்கு 100 கோடி அபராதம் மற்றும் மற்ற மூவர்க்கும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.என்ன தான் கால தாமதமான நீதியை நீதி துறை வழங்கினாலும் சட்டத்தின் முன் ஏற்ற தாழ்வுகள் இல்லை.அனைவரும் சமம் என்று வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜான் மைகேல்.டி.குன்ஹா ஆணித்தரமாக அடித்து காட்டி உள்ளார். இதன் மூலம் நீதி துறையின் மீதான நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அவரது அசாத்தியமான துணிச்சல், வேகம், அரசையும் அரசியலையும் கட்சியையும் ஒருங்கே வழிநடத்தி செல்லும் திறன் கொண்ட அவருக்கு கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.மக்கள் பிரதிநிதியாக இருந்த அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.மற்றவர்களுக்கும் முன்னுதாரனமாகவும் இருக்க வேண்டும்.அவர் அப்படி செயல்பட்டாலும் அவர்  ஆதரவாளர்கள்அவர் பால் கொண்ட அன்பால் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுப்பட்டு மக்களுக்கும் மக்களின் சொத்தான பொது சொத்துக்கும் சேதம் விளைவித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவர்களின் எதிர்ப்பை நீதி துறையை அவமதிக்கும் வண்ணம் காண்பிப்பது, என்பது இந்தியாவின் நீதி துறையையும் சட்டத்தையும் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கர்ஐயும் சட்டம் பயின்ற வழக்குரைஞர் ,நீதிபதிகள் ஆகியோரை அவமதிப்பது போன்றதாகும்.எனவே நம் முதல்வர் அவர்களின் வேண்டுகோளின் படி அனைவரும் தங்கள் வன்முறையை கைவிட்டு அறவழியில் செயல்படுங்கள்.