Monday 3 August 2015

கலாம் எனும் - ஓர் இதிகாசம்

இராமேசுவரத்தில் முத்தாய் பிறந்து
பொக்ரைன் அணுகுண்டு சோதனை  செய்து அயல்நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்  எல்லாம் சிம்ம சொப்பணமாய் விளங்கிய நீ
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய்
உலக விண்வெளி ஆராய்ச்சியின் தலை மகனாய்
பாரதத்தின் ரத்தினமாய் 
இந்தியாவின் மூத்த குடிமகனாய்
இவ்வுலகத்திற்கு  கிடைத்த அரிதான வைரம் நீ
உன்னிடம் கற்று கொள்ள ஏராளம் -ஆனால்
காலமோ இல்லை தாராளம் 
உன்னுடைய எளிமையே உனது வலிமை
உன்னுடைய அன்பு என்னும் பலகீனமே உனது பலம்
உன்னுடைய தனிமையே உனது தனிச் சிறப்பு
உன் புன்னகையில் ஓர் குழந்தையை  கண்டோம்
உன் மனிதநேய  பண்பில் இறைவனை கண்டோம்
எங்களை கனவு காண செய்வதையே கனவாக கொண்டு -கடைசி மூச்சு வரை
உங்களுடைய அறிவையும், ஆற்றலையும் அளித்து
மஹாபாரத கர்ணனாய்
திரு குரானில்  வரும் மலைக்கராய்
பைபல் படி நல்ல மேய்ப்பராய்
ஜாதி மதங்களை தாண்டி ஓர் தனி இதிகாசமாய்  வாழ்ந்த உம்
இறப்பிற்கு எங்கள் கண்நீர்த் துளிகளை சிந்தாமல்
உன்னுடைய 2020ல் இந்தியா கனவிற்கு வேர்வை துளிகளை சிந்தி
உழைத்து அந்த வெற்றி  துளியை உனக்கு காணிக்கை ஆக்குவோம்
உனது கனவு இந்தியாவில் நீ வாழ முடியாமல் விதி சதி செய்து இருக்கலாம்- ஆனால் 
உனது கனவு இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதையும் - ஒவ்வொரு
மனித இதயத்தில் நீ வாழ்வதையும் எந்த விதியாலும் சதியாலும் தடுக்க இயலாது

லஞச ஊழல்  அற்ற  வல்லரசு இந்தியாவை உருவாக்க
ஓர் மாணவனாய் ஓர் இளைஞராய்
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய் உறுதி பூணுகின்றோம்.
 


No comments:

Post a Comment