‘மற்றவர்களுக்காகப்
பணி செய்கிறோம்’ என நினைத்தால் உடலில் தளர்வும் உள்ளத்தில் சோர்வும்
ஏற்படும். “நமக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்” என்கிற உண்மை புரிந்தால்,
உழைப்பு களைப்பை வரவழைக்காது. ஈடுபாடு இல்லாமல், எந்தப் பணியைச் செய்தாலும்
அது வயலுக்குப் பாய்ச்சும் வாய்க்காலாக இல்லாமல், நிழலுக்கு இறைத்த
நீராகிவிடும். நேரத்தை மாத்திரம் சேர்த்து வைக்க முடியாது. இன்று பணியாற்ற
மறுத்தால், ஒருநாள் போனது போனதுதான். மகத்தான மண்டபத்தை உருவாக்க
நினைக்கிறபோது, அதில் கலசம் வைக்கிறவர்கள் மட்டுமல்ல; கடைக்கால்
எழுப்புபவர்களும் அக்கறையோடு பணியாற்றினால்தான், கட்டடம் காற்றில் இடிந்து
விழாமல் காப்பாற்றப்படும்.
"சென்னை வானொலியில் உழைப்பின் மகத்துவம் பற்றி ஐந்து நாட்கள் உரையாற்றக்
கேட்டிருந்தார்கள். அந்த உரைகள் பணிப்பண்பாடு என்கிற சின்னச் சஞ்சிகையாகத்
தொகுக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் வாசித்து விடலாம். பல நிறுவனங்கள் இந்த
நூலை தன்னுடைய பணியாளர்களுக்கு வாங்கி வழங்கி கட்டாயம் படிக்கவேண்டும்
என்று வற்புறுத்தின. பணியை பாரமாகக் கருதாமல் இனிமையான நிகழ்வாகக்
கருதவேண்டும் என்கிற மையக் கருத்து சின்ன சம்பவங்களின் துணையோடு
சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருந்ததால் இதை போல நிறைய எழுதவேண்டுமென்று
பதிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். இதை வாசித்த பலர் தாங்கள் செய்கிற பணியை
புதிய அணுகுமுறையுடன் நோக்குவதாகத் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில்
இது வெற்றி பெற்ற நூல்."
இறையன்பு
|
No comments:
Post a Comment