Tuesday, 4 October 2016

காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்.

இமயம் முதல் குமரி வரை
இந்தியன் அன்றோ
சண்டைகள் செய்வதனாலே
வேற்று நாட்டவராகிவிடுவிரோ
பற்பல மொழிகள் பேசி திரிந்தாலும்
ஓர் தாய் பிள்ளைகள் அன்றோ
மொழி வேறு என்பதனாலே
சகோதரனுக்கும் தண்ணீர் தர மறுக்கலாமோ
வயிற்றுக்கு சோறு வேண்டும்
சோற்றுக்கு உழ வேண்டும்
உழவுக்கு நீர் வேண்டும் -அதனை
அளிக்க உமக்கு மனம் வேண்டும்
மொழி அரசியலுக்கு மக்கள் அடிமை கொள்ளலாமோ
உலகின் முன் வெட்கி தலை குனிதல் ஆகுமோ
மக்கள் மனதில் மனிதம் பிறந்திடல் வேண்டும் - அதற்கு
ஜாதி மாதம் மொழி இனம் நாடுகளுக்கு அப்பாற்பட்ட
மனிதர் ஆக வேண்டும் 
நம் மீது விழுந்த கரை போக்கிடல் வேண்டும் - அதற்கு
காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்
காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்.......

என்ற அவாவுடன் ...........................
                                                                    -பரத் சந்திரன் சுப்ரமணியன்.
 

No comments:

Post a Comment