Tuesday, 19 June 2018

கொரியத் தீபக்கற்பம்!

ஒரு குடைக்குள்
உலகை அடக்கிட எண்ணிய
ஜப்பானின் ஏகாதிபத்தியத்தின் கீழ்
ஒன்றிணைந்த கொரிய தீபகற்பம்..
அச்சு நாடுகள், நேச நாடுகளுக்கான
இரண்டாம் உலகப்போரில்,
நேச நாடுகளின் வெற்றி
அச்சு நாடுகளின் அச்சாணியை கழற்றிவிட்டது.
அந்த அச்சாணியில் கழன்ற சக்கரம்
கொரியா.
நேச நாடுகளின் நேசம்
நாடு பிடிப்பதில் போனது
பேருந்தின் பின் சக்கரம் போல்  இரண்டானது,
இரண்டும்
ஆபத்தில் தவிக்கும் கப்பலில்
கடலில் கொட்டிய எண்ணெய் போல்..
நேச நாடுகளின்
கொள்கை முரனை கோடிட்டது.
வடம் கம்யூனிச ஐக்கிய சோவியத்தின் பாலும்
தென்னகம் ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பாலும்
பிரிப்பட்டு துண்டானது தீபகற்பம்..
போரில் பிடித்த நாடுகளை
தன் கொள்கை நாடுகளாக்கி விட்டன.
வடக்கர்களின் ஒன்றிணைந்த கொரிய
கனவில்..
1950 போர் மூள
3 ஆண்டு போரில்
பெரிய அண்ணன்கள் நுழைய
கொல்லப்பட்டது லட்சக்கணக்கான
கொரியர்கள்
ஆர்மிஸ்டிஸ் ஒப்பந்ததோடு முடிந்தது கொரியப் போர்.
பனிப்போர் தொடர்ந்தது...
கம்யூனிச வடக்கு வளர்ந்தது.
சீன மூங்கில் போல்
அசுர வளர்ச்சி பொருளாதாரத்தில்
ஆசியாவிலே அதிக வளர்ச்சி,
தெற்கோ கருவேலை மரமாக
விறகு குச்சிகளுக்கானதாய் திண்டாடியது.
1965 புரட்சியாளர் சே வடக்கை
மக்களுக்கான கம்யூனிச ஆட்சிக்கு
கியூபாவிற்கு முன்ணுதாரணமென புகழ
கம்யூனிச ஆட்சிகளில் சிறப்பானதொரு ஆட்சியை நல்கிய வடக்கு,
சோவியத் ஆதரவில் விலகி
சீனா ஆதரவாக மாற
மானை தவறவிட்ட புலியாய்
சோவியத் தகிக்க,
சோவியத் உறவு முறிய,
தேவைகளுக்கு அணு உலை என்ற வடக்கு,
பவர் ஸ்டார் பெரிய அண்ணண்கள்
மிரளுமளவு அறிக்கைகள் விட,
சுப்ரீம் ஸ்டாராக வடக்கு அறியப்பட,
தடைகள் முன் நிற்க,
சிரித்து கடக்கிறது வடக்கு,
சர்வாதிகாரமாகிவிட்ட வடக்கு
உலகில் பெரிய நாடுகளை மிரட்டிய பெரிய அண்ணன்களை மிரட்டுகிறது எரிமலையாய்,
எரிமலை சற்றே அடங்கி போக விரும்பி
தெற்கோடு கைக்கோர்த்து,
அமைதிக்கு வருகிறது,
அமைதி பூக்கட்டும்,
கொரியா தீபகற்பம் மீளட்டும்,
கொரியர்கள் வாழட்டும்...

                -பரத் சந்திரன் சுப்ரமணியன்

No comments:

Post a Comment