நாம் எதையேனும் ஒன்றை விளையாட்டாய், வேடிக்கையாய் கற்றால் நாம் அவற்றை எளிதில் கற்று விடுவதோடு மட்டும் அல்லாமல் அதை நீண்ட நாட்களுக்கு எளிதில் நினைவில் கொள்வோம். ஆங்கிலம் என்றாலே அலறி ஒடுபவராக இருப்பவர்களுக்காக ஆங்கிலத்தை விளையாட்டாய் கற்று கொள்வதற்கு உதவுகிறது knoword(http://knoword.org/) என்னும் இணையதளம். இந்த இணைய தளமானது ஒரு வார்த்தையின் அர்த்தத்தையும்(பொருள்) அந்த வார்த்தையின் முதல் எழுத்தையும் அளித்து விடும் அதை வைத்து நாம் அந்த வார்த்தையினை கண்டு பிடித்திடல் வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 20 புள்ளிகளும் 5 நொடி கூடுதல் நேரமும் தரப்படும். தவறான அல்லது பதில் அளிக்காத கேள்விகளுக்கு 10 புள்ளிகள் கழிக்கப்படும். இதன் மூலம் உங்களால் அதிக வார்த்தைகளை கற்று கொள்ள முடியும். அங்கிலத்தை அறிந்திட வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment