Friday 2 January 2015

யாரை ஏமாற்றும் வேலை இது ?


பாமரன் முதல் கோடிஸ்வரன் வரை பயணம் என்றாலே ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகிறார்கள் காரணம் காசும்  கம்மி பயண சௌகரியமும் அதிகம் என்பது தான் ஆனால் இப்பொழுதோ நிலைமை தலைகீழ் என்ன தான் ஆயிற்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்திற்கு பல கோடி பேர் பயணிக்கும் ரயிலில் இன்று பயணம் செய்யவே தயக்கமாய்  இருக்கிறது காரணம் கட்டணம். முன்பெல்லாம் சாதாரண முன்பதிவு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ தட்கல் என்று கூறியும், ப்ரீமியம் தட்கல் என்று கூறியும் பாதி இருக்கைகளுக்கும் மேலாக அதிக கட்டணத்தை (கொள்ளை அடிக்கிறார்கள்) வசுலிக்கிறார்கள்.தட்கல் கட்டணமாவது பரவாய் இல்லை 90 ரூபாய் என்று தெரிந்து நாம் டிக்கெட் எடுக்கிறோம்.ஆனால் ப்ரீமியம் தட்கலில் சீரற்ற முறையில் (random) கட்டணத்தை கணிப்பொறியே தீர்மானிக்கிறது. எனவே பல நேரங்களில் நமக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதனால் சில நேரங்களில் விமான கட்டணத்தையே விஞ்சிவிடுகிறது.இதனால்  பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுக்கிறார்கள். ஆம்னி பஸ்கள்  கூட அரசிற்கு பம்முகிறார்ப்போல பாவனை செய்கின்ற இந்த வேளையில் பொது துறையில் இது  போன்ற மறைமுக கட்டணம்  என்பது  ஏற்றுக்கொள்ளக் கூடியது   இல்லை.  சரி இரயிலில்  பயணிப்பதற்கேற்ற சூழ்நிலையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.எங்கு பார்த்தாலும் எலியும் மூட்டை பூச்சியுமாகவே இருக்கின்றன.இதில் இந்தியாவில் எந்த ரயிலும் சரியாக வந்து சாதனை(!) படைத்தது கூட  கிடையாது.இது போன்ற சூழ்நிலையில் ஒரு பொது துறை நிறுவனம் இது போன்றதோர் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது என்பது யாரை ஏமாற்றும் வேலை? அரசு இது போன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை  தவிர்த்து இரயில்வே துறையை முன்னேற்றமடைய முயற்சி எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.