Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts

Sunday, 14 June 2015

பணிப் பண்பாடு -இறையன்பு

பணிப் பண்பாடு -இறையன்பு 
முதல் பதிப்பு: மே 2009
  பதிப்பகம் -NCBH                             விலை -15


‘மற்றவர்களுக்காகப் பணி செய்கிறோம்’ என நினைத்தால் உடலில் தளர்வும் உள்ளத்தில் சோர்வும் ஏற்படும். “நமக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்” என்கிற உண்மை புரிந்தால், உழைப்பு களைப்பை வரவழைக்காது. ஈடுபாடு இல்லாமல், எந்தப் பணியைச் செய்தாலும் அது வயலுக்குப் பாய்ச்சும் வாய்க்காலாக இல்லாமல், நிழலுக்கு இறைத்த நீராகிவிடும். நேரத்தை மாத்திரம் சேர்த்து வைக்க முடியாது. இன்று பணியாற்ற மறுத்தால், ஒருநாள் போனது போனதுதான். மகத்தான மண்டபத்தை உருவாக்க நினைக்கிறபோது, அதில் கலசம் வைக்கிறவர்கள் மட்டுமல்ல; கடைக்கால் எழுப்புபவர்களும் அக்கறையோடு பணியாற்றினால்தான், கட்டடம் காற்றில் இடிந்து விழாமல் காப்பாற்றப்படும்.
"சென்னை வானொலியில் உழைப்பின் மகத்துவம் பற்றி ஐந்து நாட்கள் உரையாற்றக் கேட்டிருந்தார்கள். அந்த உரைகள் பணிப்பண்பாடு என்கிற சின்னச் சஞ்சிகையாகத் தொகுக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் வாசித்து விடலாம். பல நிறுவனங்கள் இந்த நூலை தன்னுடைய பணியாளர்களுக்கு வாங்கி வழங்கி கட்டாயம் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தின. பணியை பாரமாகக் கருதாமல் இனிமையான நிகழ்வாகக் கருதவேண்டும் என்கிற மையக் கருத்து சின்ன சம்பவங்களின் துணையோடு சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருந்ததால் இதை போல நிறைய எழுதவேண்டுமென்று பதிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். இதை வாசித்த பலர் தாங்கள் செய்கிற பணியை புதிய அணுகுமுறையுடன் நோக்குவதாகத் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் இது வெற்றி பெற்ற நூல்."
இறையன்பு
  நன்றி :iraianbu.in

பொன்னியின் செல்வன் -கல்கி

     எனக்கு  படித்ததில்  பிடித்தது               
ச.வேல்முருகன்,
துணைப்பேராசிரியர்,
ஆதிபராசக்தி  பொறியியல் கல்லூரி ,
மேல்மருவத்தூர்.                                                                       
                             
                                            பொன்னியின் செல்வன் -கல்கி
எனக்கு  படித்ததில்  பிடித்தது  கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற  வரலாற்று நாவல் தான் .பிற்கால  சோழர்களில் தலை சிறந்த மன்னராகிய இராஜா ராஜா சோழனின்  பெயரில் இருந்தாலும் வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத் தேவனே  கதையின் நாயகன் ஆவார் .தன்கையில் வந்த மணிமகுடத்தை இன்னொருவர் சிரசில் சுட்டிய தியாக சிகரம் அருள்மொழிலர்மனின் ( இராஜா ராஜா சோழன்) வீரத்தையும் தியாகத்தையும் மையமாக வைத்து வந்தியத் தேவன் எனும் கலகலப்பான பாத்திரத்தை கொண்டு மிக நேர்த்தியாக  கல்கி கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களையும வாசகர்களின் நாடிதுடிப்பிற்கு ஏற்றவாறு 
நகர்த்தி செல்வதுதான் அனைவரையும் கவர்ந்த ஒன்று.கடைசி அத்தியாயத்தில் "வேடிக்கையும்,விளையாட்டும் ,குறும்பும் ,குதூகலமும்,துடுக்கும்  உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை 
இனி நாம் காணப்போவதில்லை"என்று கல்கி அவர்கள் எழுதியதை  படித்தபோது  கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் ஆறாக ஓடியது இன்றும் மறக்க முடியாது.அப்போது நான் ஒன்பதாவது  வகுப்பு முடிந்து  பத்தாம் வகுப்பு செல்ல இருந்த நேரம் இருப்பினும் என்னை படிக்க தூண்டிய
என் பெற்றோர்களை நினைத்து  பெருமிதம் கொள்கிறேன்.