Monday 21 May 2018

"ஜஸ்டி என்னும் ஜஸ்டிஸ்"

















மணிமகுடம் சூடவில்லை
மகுடத்தின் மாணிக்கமாய்
மிளிர்கிறாய்...

கருத்துரிமைக்கான நீதி ஆணையிட்டாய்
நீதி உரிமைக்காக அணியினை
வகுத்துவிட்டாய்
மக்களுக்காக....

தனிமனித ரகசியம் அடிப்படை உரிமை என்றாய்...
மகுடத்திற்கான நியமன ரகசியம் உடைத்தாய்...
நீதிக்காக.....

பதவிக்கு அலைவோர் நடுவில்
நடுநிலை தவறாது நீதி அளித்தாய்...
குடியானவனுக்காக...

இதோ நீ விடை பெற போகிறாய்...
பிரிவு உபச்சாரம் இல்லாது..
சம்பிரதாயங்களை உடைத்தாய்...
சம்பிரதாயப் பணிகளை மறுத்தாய்...
பகுத்தறிவாளனாக...


நீ பதவியில் இருந்து விடை பெற்றாலும்..
உன் அதிகாரம் குறைந்தாலும்..
நீ பிறப்பித்த ஆணைகள்
மக்கள் அதிகாரமாய்...
உன் கருத்துக்கள் நீதி துறையின்
கருத்துருக்களாய்...

உன் ஆசை சீர்திருத்தங்கள்..
விரைவில் பிறக்கட்டும்...
உன் ஓய்வுக்கு பின் வாழ்க்கை சிறக்கட்டும்...
தன் பெயரில் ஜஸ்டி வைத்து ஜஸ்டிஸ்
வழங்கிய நீதிமானே...
ஜஸ்டி செலமேஸ்வர் எனும் பெயர் நீதி துறை
வரலாற்றில் பதியட்டும்....
உன் புகழ் சிறக்கட்டும்..
உன் மக்கள் தொண்டு தொடரட்டும்...
உன் வாழ்வு மலரட்டும்...

                   -பரத் சந்திரன் சுப்ரமணியன்.


No comments:

Post a Comment