பணிப் பண்பாடு -இறையன்பு
முதல் பதிப்பு: மே 2009
பதிப்பகம் -NCBH விலை -15
நன்றி :iraianbu.in
முதல் பதிப்பு: மே 2009
பதிப்பகம் -NCBH விலை -15
நன்றி :iraianbu.in
மாவீரன்
அலெக்சாண்டர் தன் போர் வீரர்களுடன் உலகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது பாலை வனம் ஒன்றை அடைந்தனர்.அப்போது
அனைவரும் தண்ணீர் தாகத்தால் சோர்வடைந்தனர். அப்போது அந்த வழியே சில இறை
தொண்டர்கள் சென்றனர்.அப்போது அலெக்சாண்டரை கண்ட அவர்கள் தங்களிடம் இருந்த
குவளை தண்ணீரினை அவனுடைய தலை கவசத்தில் ஊற்றி கொடுத்து பருகுமாறு
கூறினர்.அதற்கு அந்த மாவீரனோ என் தலைமையை நம்பி எனக்காகவும் தங்கள்
நாட்டுக்காகவும் இவர்கள் என்னுடன் வந்து உள்ளனர்.எனவே இவர்களை விடுத்து
நான் மட்டும் தண்ணீரை பருகினால் அது தலைமைக்கு அழகல்ல,என்று கூறி தண்ணீரை
பருக மறுத்து நன்றி கூறி இறை தொண்டர்களிடம் இருந்து விடை பெற்றான்.இதை
கண்ட போர் வீரர்கள் அட நம் மன்னர் நம்மை சிறப்பித்து விட்டார், என்று கூறி
உற்சாகத்தில் தாகத்தை மறந்து போர் புரிந்து வெற்றிகளை குவித்து
அலெக்ஸாண்டரின் பாதங்களில் சமர்பித்தனர்.
வழிப்போக்கன்
ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. ஊரை
சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே
தண்ணீரை தேடிய பயணம் செல்ல வேண்டி இருந்தது.அப்படியோர் வறட்சி நிலவி
இருந்தது.அப்போது ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி
அளித்தது.உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்து
கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார்.உடனே அந்த வழிப்போக்கன்
நன்றி என்று கூறி விட்டு ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம்
மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால் உனக்கு இறைவனின்
கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.உடனே அந்த விவசாயி ஐயா இந்த நிலமும்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரை போன்று வறண்டு தான்
கிடந்தது.என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும் தான் இன்று இப்படி
காட்சி அளிக்கிறது என்று பணிவாக கூறினான்.மேலும் ஐயா நான் இந்த நிலத்தை
பதபடுத்திய போது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை உடன் என் மனமும்
பக்குவப்பட்டது என்றான்.இது போன்ற விடா முயற்சியும் தன்நம்பிகையும்
இருந்தால் நாம் ஈடுபடும் காரியத்தில் மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றி
பெறலாம் என்று அந்த வழிபோக்கனுக்கு புரிந்தது.
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால்
தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை
அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார்.
அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச்
சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால்
அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து,
அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து
சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று
கூறினார்.
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும்
பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு
எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும்
எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி முடித்தார்.
ஒரு
கூக்கிராமத்தை நோக்கி பண்டிதர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் செய்து
கொண்டிருந்தார்.அப்போது அந்த மாட்டு வண்டிகாரனிடம் அந்த பண்டிதர்,ஐயா இந்த
ஊரில் சிதம்பரம் பிள்ளை என்ற ஒரு வள்ளல் இருந்தாரே அவர் எப்படி
இருக்கிறார்
என்று கேட்டார். அதற்கு அவர் மேலே போய் சேர்ந்துட்டார் என்று பதில்
வந்தது.அது சரி அவரை பற்றி ஏன் கேட்டீர்கள்,என்று வண்டிக்காரன்
கேட்டார்.அதற்கு அந்த பண்டிதர் தன் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்துக்
கொண்டு ஏழையாக பிறந்த எமக்கு படிக்க பணம் கொடுத்த வள்ளல் அவர்.அதனால் தான்
எமக்கு இந்த வாழ்கை கிடைத்தது,என்று கூறி அழுதுவிட்டார்.ஊர் வந்தவுடன்
கீழே இறங்கி பேசிய வாடகையை எடுத்து நீட்டினார் அந்த பண்டிதர்.உடனே அந்த
வண்டிக்காரன் பணம் வேண்டாம் என்று கூறி புறப்பட தயாரானான்.அதற்கு அந்த
பண்டிதர், ஏன் வேண்டாம்,எதற்கு வேண்டாம் என்று கேட்டார் . அதற்கு அவர் ஐயா
நீங்கள் கேட்ட சிதம்பரம் பிள்ளை பரம்பரை தாங்க நாங்க.இப்போ நொடிஞ்சு
ஏழையாய் போய்ட்டோம்.மிச்சம் இருக்கிற இந்த மாடும் வண்டியும் தாங்க ஐயா
எங்களுக்கு சோறு போடுது.ஆனாலும் எங்க ஐயா கொடுத்து வளர்ந்தவக நீங்க
உங்ககிட்ட கூலி வாங்கினா கொடுத்த இடத்தில திருப்பி வாங்கின குத்தம்
வருமுங்க நாங்க கொடுத்த இடத்தில் வாங்குறது இல்லைங்க என்று கூறிக்கொண்டே
வண்டியை எடுத்தார் அந்த வண்டிகார பெருந்தகை.
அமெரிக்காவின்
பிரபல கோடிஸ்வரர் ஒருவர் முதுமையிலும் கடும் உழப்பை
மேற்கொண்டிருந்தார்.நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்பவர் அவர்.ஒரு முறை
விமானத்தில் அவர் பயணம் செய்த போது பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர்
அவரை வியப்புடன் பார்த்தார்.பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே
இருந்தார்.உடனே அந்த இளைஞர் அவரிடம் அய்யா நீங்கள் ஏகப்பட்ட சொத்து
சேர்த்து வைத்துளிர்கள்.இனியும் இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா
என்று கேட்டார்.அதற்கு அந்த பெரியவர் தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல
உயிரத்தில் பறக்க வைத்திருக்கிறார்.சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது
சுலபமாக பறக்றது இல்லையா.அதான் விமானம் மேலே எறிவிட்டது என்று விமானி
என்ஜின் ஐ அணைத்துவிட்டால் என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல
தான் வாழ்க்கையும் நாம் கடுமையாக உழைத்து மேலே வந்து விட்டு,நாம்
தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும்
விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல்
ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர்
ராக்பெல்லர் ஆவார்.
அபாரமாக
ஒருமுறை பியானோ வாசித்தபோது கூடி இருந்த அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரம்
ஆகியது.பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.அப்போது ஒரு பெண்மணி அவர் கரங்களை
பற்றி கொண்டு முத்தமழை பொழிந்து,உங்கள் கரங்கள் விசேசமானவை.உங்களுக்கு
என்று யாருக்கும் தராத சிறப்பான ஆற்றலை கடவுள் வழங்கி உள்ளார் என்று
அப்பெண்மணி கூறினார்.அதற்கு அம்மேதை அம்மணி இது கடவுள் அளித்த ஆற்றல்
இல்லை,தினம்தோறும் என்னுடிய 8 மணி நேர பயிற்சியின் பலன் இது. முயற்சியும்
பயிற்சியும் இருந்தால் நீங்களும் இப்படி வாசிக்கலாம் என்று கூறிய இசை மேதை
வேறு யாரும் இல்லை செவிப்புலன் பழுதுற்ற பீத்தோவன்.