Sunday, 18 January 2015

ஏன் இந்த அலட்சியம் கேட்பீர்களா ?

இந்தியர்கள்  திறமையானவர்கள், அறிவாளிகள், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிறகு ஏன் இந்தியா வளரும் நாடுகளின் பட்டியலிலே பல ஆண்டுகளாக உள்ளது  என்று எல்லார்  மனதிலும்  சந்தேகம் எழும் அல்லவா? அதற்கான விடை இதோ நம்மவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை என்றவுடன் மூட்டை முடுச்சுகளை கட்டி கொண்டு கிளம்பி விடுகிறார்கள். வெளிநாட்டினரும் நம்மவர்களை நன்கு பயன் படுத்தி கொள்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியான தகவல். நம்மவர்களுக்கு வெளிநாட்டில் வேலை என்றால் பெருமைதானே என்று நீங்கள் கேட்கலாம்? பெருமை தான் ஆனால் அது இந்தியாவிற்கு ஒரு பெரும் இழப்பு, எப்படி என்று கேள்வி எழுகிறதா? அதற்கும் விடை இங்கே உங்களுக்கு புரியும் வண்ணம் கூற வேண்டுமானால் "ஒரு மகன் தன் சம்பளத்தை தாயிடம் அளிக்காமல் அவனின் மாமியாரிடம் அளித்தால் அந்த தாயின் இழப்பு என்னவோ?" அது தான் நம் இந்திய தாய் நாட்டிற்கான இழப்பும்  என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த தாய்  எப்படி தன் மகன் சம்பாதிக்கிறான் என்று பெருமை கொள்கிறாளோ  அது போல தான்  அவர்களின் தாய்  நாட்டை சார்ந்த  நாம்(சகோதர,சகோதரிகளாக) பெருமைபட்டு கொள்கிறோம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை. இதனால் அந்த தாய்  எந்த பயனும் அடைவது இல்லையோ அது போல நம் இந்திய திரு நாடும் எந்த வளர்ச்சியும்/பயனும் அடைவது இல்லை. எனவே தான் நாம் வளரும் நாடாகவே இருக்கிறோம். பிறகு ஏன் அவர்கள்  இந்தியாவில் வேலை செய்யவில்லை என்ற கேள்வி எழும் அல்லவா? அதற்கும் விடை இங்கே  நம்மவர்களுக்கான எந்த நவீன வசதியையும்/வாய்ப்புகளையும்  இந்திய அரசாங்கம்  ஏற்படுத்தி தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  அதனால் தான்  மாமியார் ஏற்படுத்தி கொடுத்த வசதிக்கும்/வாய்ப்பிற்கும் மருமகன் நன்றி சொல்கிறான். ஏன் இந்தியாவில் வசதிகளும்/வாய்ப்புகளும் இல்லையா?  இல்லை என்றால் ஏன் இல்லை என்று மனம் கொந்தளிகிறதா? உண்மையில் இந்தியாவில் சில வசதிகளை தவிர அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் வாய்ப்பு? என்ன ஆனால்? என்று கேட்கிறீர்களா?வாய்ப்புகளை ஊழல் நிறைந்த அரசியலாலும், தன் நாட்டை தாய் நாடு என்று கருதாத அரசியல்வாதிகளாலும், குடிமக்களை சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும்  மதிக்காத பொறுப்பற்ற அதிகாரிகளாலும் தான் அந்த வாய்ப்புகள் உரியவரிடம் சென்றடையவில்லை. ஏன் இந்த ஊழலும், அலட்சியமும் நம் நாட்டை பற்றிக் கொண்டு உள்ளன என்று கேள்வியினை கேட்க மனம் துடிக்கிறதா? அதை நீங்கள் ஓட்டு போட்டு  தேர்வு செய்த  மக்கள் பிரதிநிதிகளிடமும், மக்கள் அதிகாரிகளிடமும் தான் நாம் கேட்க வேண்டும். கேட்பீர்களா ????????????????????????????????    



No comments:

Post a Comment