Monday 13 October 2014

குறை கூறவில்லை விடை கூறுகிறேன்

18 ஆண்டுகள் ஆகிவிட்டன எதற்கு சட்டப்படி ஒரு குழந்தை பெரியவன் என்ற அந்தஸ்து பெருவதற்கா? சட்டம் தன்  கடமையை செய்ய! ஆம்! தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர ஏறக்குறைய என் வயது. இந்த வழக்கில் குற்றம் சுமத்த பட்ட நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முதல் குற்றவாளி ஜெவுக்கு 100 கோடி அபராதம் மற்றும் மற்ற மூவர்க்கும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.என்ன தான் கால தாமதமான நீதியை நீதி துறை வழங்கினாலும் சட்டத்தின் முன் ஏற்ற தாழ்வுகள் இல்லை.அனைவரும் சமம் என்று வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜான் மைகேல்.டி.குன்ஹா ஆணித்தரமாக அடித்து காட்டி உள்ளார். இதன் மூலம் நீதி துறையின் மீதான நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அவரது அசாத்தியமான துணிச்சல், வேகம், அரசையும் அரசியலையும் கட்சியையும் ஒருங்கே வழிநடத்தி செல்லும் திறன் கொண்ட அவருக்கு கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.மக்கள் பிரதிநிதியாக இருந்த அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.மற்றவர்களுக்கும் முன்னுதாரனமாகவும் இருக்க வேண்டும்.அவர் அப்படி செயல்பட்டாலும் அவர்  ஆதரவாளர்கள்அவர் பால் கொண்ட அன்பால் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுப்பட்டு மக்களுக்கும் மக்களின் சொத்தான பொது சொத்துக்கும் சேதம் விளைவித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவர்களின் எதிர்ப்பை நீதி துறையை அவமதிக்கும் வண்ணம் காண்பிப்பது, என்பது இந்தியாவின் நீதி துறையையும் சட்டத்தையும் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கர்ஐயும் சட்டம் பயின்ற வழக்குரைஞர் ,நீதிபதிகள் ஆகியோரை அவமதிப்பது போன்றதாகும்.எனவே நம் முதல்வர் அவர்களின் வேண்டுகோளின் படி அனைவரும் தங்கள் வன்முறையை கைவிட்டு அறவழியில் செயல்படுங்கள்.

No comments:

Post a Comment