Wednesday 29 October 2014

கல்வியில் தேவை தானா ஜாதி?


ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியின் பாடல்களை பக்கம் பக்கமாக பாட திட்டத்தினுள் வைத்துவிட்டு பள்ளியில் சேருவதற்கே ஜாதியை கேட்பது நகை முரண் அல்லவோ? அரசு பள்ளியிலாவது ஜாதியின் பெயரை மட்டும் தான் கேட்கிறார்கள்.பல உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளியில் நிலமை படு மோசம்.பள்ளியின் பெயரிலே ஜாதியை கொண்டும் ஜாதியை சார்ந்த பெயரைகொண்டும் இயங்கும் பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளிடம் ஜாதி என்னும் கருவேல விதையை விதைத்து விடுகிறார்கள்.ஒரு குழந்தை தான் பயிலும் பள்ளியை நடத்தும் நிர்வாகம் சார்ந்த ஜாதியை சேர்ந்ததாக மட்டும் இருந்தால் நிதி உதவி, இலவச நோட்டு புத்தகம், நன்கொடை என்று ரசிது இல்லாமல் வாங்க கூடிய பணம், என்று அனைத்தையும் இலவசமாக அளிக்கிறார்கள். ஒரே வகுப்பில் பயிலும் ஒரு ஜாதி குழந்தைகளுக்கு மட்டும் இச்சலுகைகளை அளித்து விட்டு மற்றொரு இனம் என்பதற்காக மற்ற குழந்தைகளுக்கு அளிக்காமல் இருக்கும் அந்த இடத்தில் ஏற்படும் ஜாதிய ஏற்ற தாழ்வு என்பது பிற்காலத்தில் எப்படி கருவேல மரம் மற்ற செடிகளை வளர விடுவதில்லையோ அது போன்றே அவர்கள் மற்ற இனத்தவ்ர்களையும் வளர விடுவதில்லை.இதுவே ஜாதிய வெறிக்கு அடிகோல் இடுகிறது.கல்வி என்பது ஒருவனுக்கு அறிவு என்னும் நெருப்பை பற்ற வைத்து அறியாமை எனும் இருளை நீக்க உதவிடும் ஒரு கருவி. ஆனால் தனியார் மயமாக்கப்பட்ட கல்வியில் இன்று பெரும் ஓட்டையாக இருப்பது ஜாதி, கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்காமல் அறியாமை எனும் ஜாதியை வளர்கிறார்கள். இது தீவிரவாதத்தை விட மிக கொடியது. நம்முடைய சிறுவயதில் அளிக்கப்படும் இத்தகைய நஞ்சுகளை எத்தனை அரியவகை விசமுறிவுகளை (கல்வி,அறிவு) அளித்தாலும் சரி குணப்படுத்த முடியாது. இந்த மன நோயை வளரவிடாமல் தடுக்க தேவை புதிய சட்டம். அதில் கல்வி நிறுவனங்கள் ஜாதியின் பெயராலோ, அல்லது ஜாதிய தலைவரின் பெயராலோ இயங்க கூடாது. அதே போல ஜாதிய அறநிலைகளாளும் இயங்க கூடாது. மேலும் ஒரு அறநிலையோ/தனி நபரோ தன் ஜாதிய குழந்தைகளுக்கு மட்டும் உதவி செய்வது என்பதே முட்டாள்தனம் தான். இருப்பினும் ஒரு குழந்தையின் அறிவுபெற அது உதவுமானால் நாம் அதை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கும் சில வழிமுறைகளை வைத்து, அதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால் எக்காரணம் கொண்டும் அவர்கள் கல்வி நிறுவனங்களின் மூலம் நேரடியாக சென்று உதவக்கூடாது. தேவை இருப்பின் விசாரித்து கொள்ளலாமே ஒழிய நேரடியாக கல்வி நிறுவனங்களின் மூலம் உதவ அனுமதிக்கக் கூடாது. மேலும் நாம் ஜாதிய அரசியலையும் விட்டு ஒழித்தால் மட்டுமே நம்மால் ஏற்ற தாழ்வற்ற இந்தியாவை உருவாக்கிட முடியும் என்பதில் எள் அளவுவேனும் நமக்கு சந்தேகம் வேண்டாம். நாம் போலியோவை விரட்டிவிட்டோம் என்று மாறு தட்டிக்கொள்கிறோம். அது போன்று ஜாதி எனும் மன நோயை எப்பொழுது????????????????????

No comments:

Post a Comment