Sunday 18 January 2015

இந்தியர்களுக்கான மவுசு !

இன்றைய இளைஞர்களின்  முக்கிய கனவுகளில் ஒன்று படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது தான். அதே போல வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகம் இந்திய  இளைஞர்களை தான்  விரும்புகிறார்கள். சமீபத்தில் வேலை இல்லா திண்டாட்டம் வளர்ந்த  வல்லரசு நாடான  அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் தலை தூக்கி அவர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தியது. சில நாட்டு அரசாங்கங்கள் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்தன. அதில் அமெரிக்கா  அரசு இந்திய இளைஞர்களை கண்டு நடுங்கியது. அதனால் அவர்கள் தம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம்   நிறுவனங்களுக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்தது. இந்தியர்களின்  திறமையை உணர்ந்து இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர்      பில் கேட்ஸ் அவர்கள் ஒரு முறை தன் பேட்டியில் "அமெரிக்காவில் இந்தியர்களை தடை செய்தால்  என் நிறுவனத்தையே இந்தியாவிற்கு  மாற்றி விடுவேன் என்று கூறியுள்ளார் ". இதன் மூலம் நம் இந்தியர்களின் மவுசினை அறிந்து கொள்ளலாம். இதற்கு காரணம் தான் என்ன?  அதீத திறமையும், குறைந்த சம்பளமும் தான். எடுத்து காட்டாக மின்னஞ்சலினை கண்டறிந்தவர் வெளிநாடு வாழ் இந்தியர் (தமிழர் )  சிவா அய்யாதுரை , நோபல் பரிசு வென்ற வேதியல் அறிஞர்  வெளிநாடு வாழ் இந்தியர் (தமிழர் ) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். என்று நவீன உலகம் போற்றிடும் அறிஞர்கள் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களே! மேலும் நம்மவர்களின்  அறிவார்ந்த செயல்களால் தான் பல்வேறு நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்து/ அடைந்து கொண்டு /அடைய இருக்கின்றன என்பது இந்தியர்களின் திறமையை வெளிச்சமிட்டு காட்டி உள்ளது.

No comments:

Post a Comment