நம் நாட்டில் இன்று அதிக அளவு ஊழலும் லஞ்சமும் பெருகி இருப்பதற்கு காரணம் அதிகாரிகள் மட்டும் இல்லை மக்களாகிய நாமும் தான். அவர்கள் கேட்டதால் தான் பணம் கொடுத்தாக வேண்டி உள்ளது என்று கூறுபவரா நீங்கள்? உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று இனியாவது உணருங்கள். நான் அதிகாரிகளுக்காக உங்களை குறை கூறவில்லை உண்மையை எடுத்துரைக்க விரும்பிகிறேன். உங்களுக்கான அவசரத்தையும் உங்களுடைய காலதாமதமும் தான் அதிகாரிகளின் பிளஸ். நாளை சமர்பிக்க வேண்டிய விண்ணப்பத்திற்கு இன்று தான் பலர் அரசு அலுவலகம் சென்று அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இன்னப்பிற விஷயங்களுக்காக அந்த அதிகாரிகள் முன் நின்றால் உங்களின் அவசரத்திற்கு ஏற்ற ஒரு விலையை (லஞ்சம்) நிர்ணயம் செய்கின்றனர். இங்கு விலை என்பது உங்களின் அவசரத்திற்கு கொடுக்கும் லஞ்சம். அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்பு காலாவதியான ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க தவறி நீங்கள் என்றேனும் காவல் துறைக்கு(லஞ்சம் அல்லது அபராத தொகைக்கு) பயந்து புதுப்பிக்க அதிகாரியிடம் சென்றால் உங்களின் கால தாமதத்திற்கு என்று ஓர் விலை (லஞ்சம்). உங்கள் காலதாமதத்திற்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அது போல் உங்களின் பொறுப்புணர்ச்சி அற்ற செயலும் தான் காரணம் உங்களுடைய கவன குறைவால் ஏதேனும் ஒருமுக்கியமான சான்றிதழை வீட்டில் வைத்து விடுவது அல்லது அந்த சான்றிதழ் வாங்காமலே விட்டு விடுவது போன்ற காரணங்களுக்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அந்த விலை (லஞ்சம்) உங்களின் சான்றிதழ் இல்லாமையை பொருத்து மாறுபடுகிறது. நம் அரசு சான்றிதழ்களை, சான்றிதழ்களை பொருத்து இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விடவேண்டும் என்று ஒரு வரைமுறையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் புதுப்பிக்க தவறிய சான்றிதழ்களையும் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வேறு தந்துள்ளது. அது மட்டும் அல்லாது இப்போது ஆன்லைன் வசதியை பயன் படுத்தி அரசு, மக்கள் எளிதாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இணைய சேவைகளை வேறு வழங்கி வருகிறது. இருப்பினும் நான் லஞ்சம் கொடுத்து தான் சான்றிதழ்களை பெறுவேன் என்று உங்கள் பணத்தை விரயமாக்குவதை மக்களாகிய நம்முடைய முட்டாள்தனம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அட என்னப்பா இது, அந்த அதிகாரி எல்லாம் சரியாக இருந்தும் லஞ்சம் கேட்க்கிறார் என்கிறீர்களா? இருக்கவே இருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்ப்பு துறை உங்கள் புகாரை அந்த துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1800-11-0180 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது http://cvc.nic.in/ என்ற இணைய முகவரியிலோ சென்று உங்கள் புகார்களை அளிக்கலாம். அவ்வாறு அளிப்பது மூலம் ஒரு நல்ல இந்திய குடிமகனாய் நம் கடமையை சரியாக செய்தோம் என்ற ஓர் உணர்வை பெறலாம்.மேலும் நம் சான்றிதழ்களையும் பெறுவதோடு நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டிய ஓர் ஊழல் பெருச்சாளியை விரட்டி, இனி சுரண்டாமல் தடுத்தோம் என்ற மகிழ்ச்சியை பெறலாம். சரி அந்த அதிகாரி லஞ்சம் கொடுக்காததால் வேண்டும் என்றே தாமதம் செய்கிறார் என்றால் என்ன செய்ய என்கிறீர்களா? இதோ அதற்கும் வழி இல்லாமல் இல்லை, நீங்கள் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உங்கள் புகாரை சமந்தப்பட்ட துறையின் சமந்தப்பட்ட அதிகாரிக்கு தரலாம். அப்படியும் நடவடிக்கை இல்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல் பெற்று ஆதரங்களை திரட்டி நீதி மன்றங்களை அணுகி வெற்றி பெறலாம். இதெல்லாம் சரி இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டுமே என்கிறீர்களா? அதை நம் மக்கள் பிரதிநிதிகளும், மக்களுக்கு என உள்ள அதிகரிகளும் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவகத்திலும் பெறக் கூடிய சான்றிதழ்கள் என்ன, அவற்றை பெறக்கூடிய வழிமுறை என்ன, அவற்றை பெற தேவையான ஆவணங்கள் என்ன, அவற்றை எத்தனை நாட்களில் பெற முடியும், புகார் தர வேண்டிய அதிகாரியின் பதவி, முகவரி, அலுவலக எண், மற்றும் வலைதள முகவரி, லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் எண் வலைதள முகவரி போன்ற தகவலுடன் கூடிய பதாதைகளை மக்களின் கண்களுக்கு தெரியும் படி அலுவலகங்களில் இருக்க செய்தல் வேண்டும், மேலும் மக்களிடம் இது குறித்த மேலும் சில விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் மட்டும் அல்ல மக்களாகிய நம்முடைய பொறுப்பும் கூட. இன்று முதலேனும் நாம் லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன் என்று உறுதி ஏற்போம். "இந்திய குடிமகனாகிய நான் இன்று முதல் லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன்" என உறுதி கொள்கிறேன். உறுதி ஏற்றால் மட்டும் போதாது அதை நெஞ்சில் நிறுத்தி கடைபிடிக்கவும் வேண்டும். கடைபிடிப்பீர்களா?
Saturday, 31 October 2015
Friday, 14 August 2015
UNSPLASH:ஓர் புகைப்பட வலை தளம்
சமூக வலை தளங்களில் புகைப்படங்களில் வார்த்தைகளால் விளையாடுபவரா நீங்கள்? அட புகைப்படம் நல்லவே கிடைக்கவில்லை கிடைத்த புகைப்படமும் நல்ல தரத்தில் இல்லை என்று எண்ணுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இப்பொழுது unsplash (https://unsplash.com/) எனும் இனையதளத்தை அறிமுகம் செய்கிறேன் அந்த தளத்தில் நிறைய அழகிய புகைபடங்களை நல்ல தரத்துடன் காண முடிகிறது. பிறகு என்ன டவுன்லோட் செய்து மாற்றம் செய்து புகை படத்தை உங்களின் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து விடுங்கள்.
Knoword: ஆங்கில விளையாட்டு
நாம் எதையேனும் ஒன்றை விளையாட்டாய், வேடிக்கையாய் கற்றால் நாம் அவற்றை எளிதில் கற்று விடுவதோடு மட்டும் அல்லாமல் அதை நீண்ட நாட்களுக்கு எளிதில் நினைவில் கொள்வோம். ஆங்கிலம் என்றாலே அலறி ஒடுபவராக இருப்பவர்களுக்காக ஆங்கிலத்தை விளையாட்டாய் கற்று கொள்வதற்கு உதவுகிறது knoword(http://knoword.org/) என்னும் இணையதளம். இந்த இணைய தளமானது ஒரு வார்த்தையின் அர்த்தத்தையும்(பொருள்) அந்த வார்த்தையின் முதல் எழுத்தையும் அளித்து விடும் அதை வைத்து நாம் அந்த வார்த்தையினை கண்டு பிடித்திடல் வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 20 புள்ளிகளும் 5 நொடி கூடுதல் நேரமும் தரப்படும். தவறான அல்லது பதில் அளிக்காத கேள்விகளுக்கு 10 புள்ளிகள் கழிக்கப்படும். இதன் மூலம் உங்களால் அதிக வார்த்தைகளை கற்று கொள்ள முடியும். அங்கிலத்தை அறிந்திட வாழ்த்துக்கள்.
Sunday, 9 August 2015
நல்ல தரத்துடன் முழு அளவுடன் கூடிய பிரிண்ட் ஸ்க்ரீனிற்கு?
நீங்கள் வலை தளத்தில் உலாவி கொண்டு இருக்கையில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த அல்லது தேவை படுகின்ற ஒன்றை உங்கள் தேவைக்கோ அல்லது நண்பர்களுக்கு பகிர நினைத்தால் பிரிண்ட் ஸ்க்ரீன் option ஐ பயன் படுத்துவோர் அதிகம் ஆனால் அதில் தெளிவாகவோ அல்லது ஓர் குறிப்பிட்ட அளவிற்கு மேல் முழுமையாகவோ இருக்காது, அதற்காகவே ஓர் வலைதள செயலி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது அதில் நீங்கள் பிரிண்ட் ஸ்க்ரீன் எடுக்க வேண்டிய வலை பக்கத்தின் முகவரியை மட்டும் கொடுத்தால் போதும் அந்த வலை பக்கம் முழுவதும் பிரிண்ட் ஸ்க்ரீன் எடுக்கப்பட்டு காட்டும் மேலும் அதனை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழு பக்கத்தையும் நல்ல தரத்துடன் வழங்குவதே. அதனை zoom செய்து பார்த்தல் புரியும். பிரிண்ட் ஸ்க்ரீன்னுக்கு ctrlq.org/screenshots/
Monday, 3 August 2015
கலாம் எனும் - ஓர் இதிகாசம்
இராமேசுவரத்தில் முத்தாய் பிறந்து
பொக்ரைன் அணுகுண்டு சோதனை செய்து அயல்நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எல்லாம் சிம்ம சொப்பணமாய் விளங்கிய நீ
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய்
உலக விண்வெளி ஆராய்ச்சியின் தலை மகனாய்
பாரதத்தின் ரத்தினமாய்
இந்தியாவின் மூத்த குடிமகனாய்
இவ்வுலகத்திற்கு கிடைத்த அரிதான வைரம் நீ
உன்னிடம் கற்று கொள்ள ஏராளம் -ஆனால்
காலமோ இல்லை தாராளம்
உன்னுடைய எளிமையே உனது வலிமை
உன்னுடைய அன்பு என்னும் பலகீனமே உனது பலம்
உன்னுடைய தனிமையே உனது தனிச் சிறப்பு
உன் புன்னகையில் ஓர் குழந்தையை கண்டோம்
உன் மனிதநேய பண்பில் இறைவனை கண்டோம்
எங்களை கனவு காண செய்வதையே கனவாக கொண்டு -கடைசி மூச்சு வரை
உங்களுடைய அறிவையும், ஆற்றலையும் அளித்து
மஹாபாரத கர்ணனாய்
திரு குரானில் வரும் மலைக்கராய்
பைபல் படி நல்ல மேய்ப்பராய்
ஜாதி மதங்களை தாண்டி ஓர் தனி இதிகாசமாய் வாழ்ந்த உம்
இறப்பிற்கு எங்கள் கண்நீர்த் துளிகளை சிந்தாமல்
உன்னுடைய 2020ல் இந்தியா கனவிற்கு வேர்வை துளிகளை சிந்தி
உழைத்து அந்த வெற்றி துளியை உனக்கு காணிக்கை ஆக்குவோம்
உனது கனவு இந்தியாவில் நீ வாழ முடியாமல் விதி சதி செய்து இருக்கலாம்- ஆனால்
உனது கனவு இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதையும் - ஒவ்வொரு
மனித இதயத்தில் நீ வாழ்வதையும் எந்த விதியாலும் சதியாலும் தடுக்க இயலாது
லஞச ஊழல் அற்ற வல்லரசு இந்தியாவை உருவாக்க
ஓர் மாணவனாய் ஓர் இளைஞராய்
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய் உறுதி பூணுகின்றோம்.

Sunday, 28 June 2015
வீட்டில் இருந்து கொண்டே உங்களின் அறிவை உபயோகப்படுத்தி சம்பாதிக்க!
அடச்சே! நமள்ள எதுக்கு லட்சகணக்கா செலவு பண்ணி இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க வீட்ல சும்மா உட்காரவா? என்று புலம்பும் பெண்ணா நீங்கள்? அல்லது படித்து கொண்டே வேலை செய்ய நினைக்கும் மாணவர்களா நீங்கள்? உங்களுக்கான பகுதி இதோ. என்னுடைய அறிவை உபயோகப்படுத்த வேண்டும் அதே நேரத்தில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கான வேலையை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் அதற்காக பல வலைதளங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கின்றன அதில் சில நம்ப தகுந்த வலைதளங்கள் மூலம் உங்களுக்கான வேலையை நீங்கள் செய்ய இதோ எங்களின் பரிந்துரைகள்:
2-guru.com
உங்களின் முன்னேற்றதிற்கு வாழ்த்துக்கள் !!!
ஜிமெயிலில் நாம் அனுப்பிய மெயிலினை திரும்ப பெறுவது எப்படி ?
அய்யய்யோ! மெயிலை தவறான மெயில் id க்கு அனுப்பி விட்டோமே, தவறான பைலினை அட்டாச் செய்து அனுப்பி விட்டோமே என வருந்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக நாம் அனுப்பிய மெயிலை திரும்பப் பெரும் வசதியினை ஜிமெயில் நமக்கு ஏற்படுத்தி தந்து உள்ளது. ஆனால் என்ன தற்சமயம் இதை செய்வதற்கான நேரம் குறைவு 05-30 நொடிகள் தான். இதுவரை கூகுள் labs மூலம் இந்த சேவையை பரிசோதனை மூலம் நமக்கு வழங்கியது. அதை நம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது கூகுள் நிறுவனம். இதனை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஜிமெயிலினை log in செய்தால் வரும் திரையின் வலது பக்கத்தின் மேல் பகுதியில் பல்சக்கரம் போன்ற icon ஐ கிளிக் செய்து settings optionஐ கிளிக் செய்தால் வரும் திரையில் undo send யினை enable செய்து உங்களுக்கு தேவையான நேர அளவினை select செய்து save செய்தால் நீங்கள் இந்த வசதியினை எளிதாக பெற்றுவிடலம். சரி எப்படி undo செய்வது என்று கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பதில் நீங்கள் மெயிலினை send செய்த பிறகு மேலே காட்டி உள்ளவாறு notification ஒன்று வரும் அதில் நீங்கள் undoவினை நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் click செய்தால் நீங்கள் உங்கள் மெயிலினை எளிதாக திரும்ப பெற்று கொள்ளலாம்.
Sunday, 14 June 2015
பணிப் பண்பாடு -இறையன்பு
பணிப் பண்பாடு -இறையன்பு
முதல் பதிப்பு: மே 2009
பதிப்பகம் -NCBH விலை -15
நன்றி :iraianbu.in
முதல் பதிப்பு: மே 2009
பதிப்பகம் -NCBH விலை -15
நன்றி :iraianbu.in
வாசிப்போம் வளர்வோம்
வாசிப்போம் வளர்வோம்
கதை நீதி : புத்தகங்களே வாழ்க்கையின் தத்துவங்கள்.
மாணவர்களே இன்ப சுற்றுலா
செல்லலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கே செல்லலாம் என்று
நீங்களே கூறுங்கள் என்று கேட்டார். உடனே மாணவன் ஒருவன் எழுந்து குற்றாலம்
என்றான். அதற்கு பல மாணவர்கள் பார்த்தாச்சு என்று கூறினர். இன்னொரு மாணவன்
கொடைக்கானல், மற்றொரு மாணவன் ஊட்டி, ஓகேனக்கல், என்று கூற அதற்கும்
பார்த்தாச்சு என்றே பதில் வந்தது. உடனே ஒரு மாணவன் எழுந்து நம் கல்லூரியின்
நூலகம் செல்லலாம், அங்கு தான் ஒருவரும் சென்றதில்லை என்று கூறினார். உடனே
வகுப்பறை முழுவதும் ஒரே சிரிப்பலை எழுந்தது. இது சிரிப்பதற்கு மட்டும்
அல்ல சிந்திக்கவும் வேண்டிய விஷயம். இது மாணவர்களிடம் வசிக்கும் திறன்
குறைந்து கொண்டே செல்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. பல சாதனையாளர்களை
உருவாக்கியது புத்தகங்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. சில
சாமானியன்களை சரித்திர சாதனையாளர்களாக மாற்றிய புத்தகம்:
ரஸ்கினின் கடையனுக்கும் கடை தோற்றம் - மோகன் தாஸ் என்ற சாமானியனை மகாத்மாவாக மாற்றியது.
சேக்கிழரின் பெரிய புராணம் - வெங்கட்ராமனாய் இருந்தவரை பகவான் ரமனமஹிரிஷியாய் மாற்றியது.
இது போன்று எராளமானவர்களின் வாழ்க்கையையே மாற்றியப் புத்தகங்கள் உங்களையும் உயர்த்த காத்து கொண்டு தான் இருக்கின்றன.தலைமை பண்பு
தலைமை பண்பு
கதை நீதி :தலைமைக்கு தகுதி வேண்டும்
மாவீரன்
அலெக்சாண்டர் தன் போர் வீரர்களுடன் உலகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது பாலை வனம் ஒன்றை அடைந்தனர்.அப்போது
அனைவரும் தண்ணீர் தாகத்தால் சோர்வடைந்தனர். அப்போது அந்த வழியே சில இறை
தொண்டர்கள் சென்றனர்.அப்போது அலெக்சாண்டரை கண்ட அவர்கள் தங்களிடம் இருந்த
குவளை தண்ணீரினை அவனுடைய தலை கவசத்தில் ஊற்றி கொடுத்து பருகுமாறு
கூறினர்.அதற்கு அந்த மாவீரனோ என் தலைமையை நம்பி எனக்காகவும் தங்கள்
நாட்டுக்காகவும் இவர்கள் என்னுடன் வந்து உள்ளனர்.எனவே இவர்களை விடுத்து
நான் மட்டும் தண்ணீரை பருகினால் அது தலைமைக்கு அழகல்ல,என்று கூறி தண்ணீரை
பருக மறுத்து நன்றி கூறி இறை தொண்டர்களிடம் இருந்து விடை பெற்றான்.இதை
கண்ட போர் வீரர்கள் அட நம் மன்னர் நம்மை சிறப்பித்து விட்டார், என்று கூறி
உற்சாகத்தில் தாகத்தை மறந்து போர் புரிந்து வெற்றிகளை குவித்து
அலெக்ஸாண்டரின் பாதங்களில் சமர்பித்தனர்.
விடா முயற்சியும் தன்நம்பிக்கையும்
விடா முயற்சியும் தன்நம்பிக்கையும்
கதை நீதி :விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி
வழிப்போக்கன்
ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. ஊரை
சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே
தண்ணீரை தேடிய பயணம் செல்ல வேண்டி இருந்தது.அப்படியோர் வறட்சி நிலவி
இருந்தது.அப்போது ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி
அளித்தது.உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்து
கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார்.உடனே அந்த வழிப்போக்கன்
நன்றி என்று கூறி விட்டு ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம்
மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால் உனக்கு இறைவனின்
கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.உடனே அந்த விவசாயி ஐயா இந்த நிலமும்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரை போன்று வறண்டு தான்
கிடந்தது.என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும் தான் இன்று இப்படி
காட்சி அளிக்கிறது என்று பணிவாக கூறினான்.மேலும் ஐயா நான் இந்த நிலத்தை
பதபடுத்திய போது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை உடன் என் மனமும்
பக்குவப்பட்டது என்றான்.இது போன்ற விடா முயற்சியும் தன்நம்பிகையும்
இருந்தால் நாம் ஈடுபடும் காரியத்தில் மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றி
பெறலாம் என்று அந்த வழிபோக்கனுக்கு புரிந்தது.தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்:
தடையையும்
எளிதாக கடந்து செல்ல முடியும்:
கதை நீதி : துன்பம் வந்தால்
தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும்
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால்
தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை
அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார்.
அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச்
சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால்
அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து,
அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து
சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று
கூறினார்.
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும்
பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு
எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும்
எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி முடித்தார்.முயற்சி
முயற்சி
கதை நீதி :முயற்சி திருவினை ஆக்கும் :
ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய தேயிலையை எல்லா கடைகளிலும் விற்பதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டுபட்டு இருந்தார்.ஆனால் அந்த பகுதியில் அந்த தேயிலை பரிட்சயம் இல்லை.ஆனால் விற்பனை பிரதிநிதியின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு சிலர் மட்டும் சில பொட்டலங்களை வாங்கி காட்சிக்கு வைத்து இருந்தனர் .ஆனால் ஒருவர் மட்டும் வாங்க மறுத்து வந்தார். உடனே அந்த விற்பனை பிரதிநிதி தன் மகளை அழைத்து அந்த கடைக்கு அனுப்பி அந்த தேயிலை இருகிறதா என்று கேட்டு வாங்கி வரசொன்னார். இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன் மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்த கடயை நோக்கியே பலரும் படை எடுக்க வேறு வழி இன்றி அந்த கடைகாரரும் தேயிலை பொட்டலங்களைவாங்க ஆரம்பித்தார்.அவருடைய கடையிலும் அந்த தேயிலை பொட்டலங்களை பார்த்த மக்கள் சிலர் அதை வாங்க முன் வந்தனர். பிரதிநிதி பல இலவசம் மற்றும் தள்ளுபடி என்று வாங்குபவர்களை கவர்ந்து அந்த தேயிலையை மக்கள் மனதில் பதியவைத்தார். நாளடைவில் அந்த தேநீர் சுவையானது தான் என்று பரவலாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.இரண்டே ஆண்டுகளில் போட்டி தேயிலையை வென்று தன கனவை நனவாக்கினார்.எனவே முயற்சி இருந்தால் நாம் எதிலும் வெற்றி அடையலாம்.

வண்டிகார பெருந்தகை
வண்டிகார பெருந்தகை
கதை நியதி :பலனை எதிர்பார்க்காதே!
ஒரு கூக்கிராமத்தை நோக்கி பண்டிதர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த மாட்டு வண்டிகாரனிடம் அந்த பண்டிதர்,ஐயா இந்த ஊரில் சிதம்பரம் பிள்ளை என்ற ஒரு வள்ளல் இருந்தாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர் மேலே போய் சேர்ந்துட்டார் என்று பதில் வந்தது.அது சரி அவரை பற்றி ஏன் கேட்டீர்கள்,என்று வண்டிக்காரன் கேட்டார்.அதற்கு அந்த பண்டிதர் தன் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ஏழையாக பிறந்த எமக்கு படிக்க பணம் கொடுத்த வள்ளல் அவர்.அதனால் தான் எமக்கு இந்த வாழ்கை கிடைத்தது,என்று கூறி அழுதுவிட்டார்.ஊர் வந்தவுடன் கீழே இறங்கி பேசிய வாடகையை எடுத்து நீட்டினார் அந்த பண்டிதர்.உடனே அந்த வண்டிக்காரன் பணம் வேண்டாம் என்று கூறி புறப்பட தயாரானான்.அதற்கு அந்த பண்டிதர், ஏன் வேண்டாம்,எதற்கு வேண்டாம் என்று கேட்டார் . அதற்கு அவர் ஐயா நீங்கள் கேட்ட சிதம்பரம் பிள்ளை பரம்பரை தாங்க நாங்க.இப்போ நொடிஞ்சு ஏழையாய் போய்ட்டோம்.மிச்சம் இருக்கிற இந்த மாடும் வண்டியும் தாங்க ஐயா எங்களுக்கு சோறு போடுது.ஆனாலும் எங்க ஐயா கொடுத்து வளர்ந்தவக நீங்க உங்ககிட்ட கூலி வாங்கினா கொடுத்த இடத்தில திருப்பி வாங்கின குத்தம் வருமுங்க நாங்க கொடுத்த இடத்தில் வாங்குறது இல்லைங்க என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தார் அந்த வண்டிகார பெருந்தகை.

உழைப்பிற்கு வயது உண்டா ?
உழைப்பிற்கு வயது உண்டா ?
கதை நீதி : உழைப்பே உயர்வு
அமெரிக்காவின் பிரபல கோடிஸ்வரர் ஒருவர் முதுமையிலும் கடும் உழப்பை மேற்கொண்டிருந்தார்.நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்பவர் அவர்.ஒரு முறை விமானத்தில் அவர் பயணம் செய்த போது பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர் அவரை வியப்புடன் பார்த்தார்.பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே இருந்தார்.உடனே அந்த இளைஞர் அவரிடம் அய்யா நீங்கள் ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்துளிர்கள்.இனியும் இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா என்று கேட்டார்.அதற்கு அந்த பெரியவர் தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல உயிரத்தில் பறக்க வைத்திருக்கிறார்.சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது சுலபமாக பறக்றது இல்லையா.அதான் விமானம் மேலே எறிவிட்டது என்று விமானி என்ஜின் ஐ அணைத்துவிட்டால் என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல தான் வாழ்க்கையும் நாம் கடுமையாக உழைத்து மேலே வந்து விட்டு,நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும் விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர் ராக்பெல்லர் ஆவார்.

கடவுளின் கருணையா ?
கடவுளின் கருணையா ?
கதை நீதி : முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.
ஒரு உலக புகழ் பெற்ற இசை மேதை ஒருவர் வழக்கம்போல
அபாரமாக ஒருமுறை பியானோ வாசித்தபோது கூடி இருந்த அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரம் ஆகியது.பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.அப்போது ஒரு பெண்மணி அவர் கரங்களை பற்றி கொண்டு முத்தமழை பொழிந்து,உங்கள் கரங்கள் விசேசமானவை.உங்களுக்கு என்று யாருக்கும் தராத சிறப்பான ஆற்றலை கடவுள் வழங்கி உள்ளார் என்று அப்பெண்மணி கூறினார்.அதற்கு அம்மேதை அம்மணி இது கடவுள் அளித்த ஆற்றல் இல்லை,தினம்தோறும் என்னுடிய 8 மணி நேர பயிற்சியின் பலன் இது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நீங்களும் இப்படி வாசிக்கலாம் என்று கூறிய இசை மேதை வேறு யாரும் இல்லை செவிப்புலன் பழுதுற்ற பீத்தோவன்.

கடவுளை விட மனிதன் உயர்ந்தவனா ?
கடவுளை விட மனிதன் உயர்ந்தவனா ?
யார் உயர்ந்தவர் கடவுளா? மனிதரா? என்று கேட்டால் எப்பொழுதும் கடவுளே
உயர்ந்தவர் என்ற பதில் மட்டுமே வரும் கடவுளை விட மனிதன் உயர்ந்த கதை
இது.மகாபாரத போரிலே அர்ச்சுனனின் அம்புகளால் கர்ணனை கொல்ல
முடியவில்லை.அவனது தானங்களின் புண்ணிய பலன் அவனை காத்தது .எனவே அவனை
அம்புகளால் கொல்ல முடியாது என்று எண்ணிய கண்ணன்,மரணத்தையும் யாசிப்பது
என்று முடிவு செய்து,ஏழை அந்தணன் வடிவில் வந்து, நீ செய்த புண்ணியங்கள்
யாவையும் எனக்கு தா என்று யாசகம் கேட்டான்.வந்திருப்பது கண்ணன் என்பதை
உணர்ந்த கர்ணன் இறைவனே நம்மிடம் இறைவனே யாசகம் கேட்கிறபோது மறுப்பது எப்படி
என்று மகிழ்வுடன் நீ செய்த புன்னிய பலனை மட்டும் தான் கேட்டாய் நான்
உமக்கு செய்த, செய்கிற,செய்ய போகிற யாவையும் உமக்கு அளிக்கிறேன்.என்று தாரை
வார்த்தான் கர்ணன்.இதயத்தில் வழிந்த இரத்தத்தை உளங்கையில் வாரிய கர்ணன்
தாரை வார்தான் கர்ணன்.தானம் வாங்கும் பொழுது கடவுள் கண்ணன் கை
தாழ்ந்தது கொடுக்கும் பொழுது மனிதன் கர்ணன் கை உயர்ந்தது கொடுகிற
எண்ணம் மனிதனை உயர்த்தியது
வாங்குகிற
எண்ணம் கடவுளை தாழ்த்தியது. அதற்காக கடவுள் தாழ்ந்தவர் இல்லை.மனிதனை
உயர்த்துவதற்காக கடவுள் தன்னை தாழ்ததவும் தயங்க மாட்டார் என்பதே நிர்தசனமான
உண்மை.
பொன்னியின் செல்வன் -கல்கி
எனக்கு படித்ததில் பிடித்தது
ச.வேல்முருகன்,
துணைப்பேராசிரியர்,
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி ,
மேல்மருவத்தூர்.
பொன்னியின் செல்வன் -கல்கி
எனக்கு படித்ததில் பிடித்தது கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்று நாவல் தான் .பிற்கால சோழர்களில் தலை சிறந்த மன்னராகிய இராஜா ராஜா சோழனின் பெயரில் இருந்தாலும் வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத் தேவனே கதையின் நாயகன் ஆவார் .தன்கையில் வந்த மணிமகுடத்தை இன்னொருவர் சிரசில் சுட்டிய தியாக சிகரம் அருள்மொழிலர்மனின் ( இராஜா ராஜா சோழன்) வீரத்தையும் தியாகத்தையும் மையமாக வைத்து வந்தியத் தேவன் எனும் கலகலப்பான பாத்திரத்தை கொண்டு மிக நேர்த்தியாக கல்கி கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களையும வாசகர்களின் நாடிதுடிப்பிற்கு ஏற்றவாறு
நகர்த்தி செல்வதுதான் அனைவரையும் கவர்ந்த ஒன்று.கடைசி அத்தியாயத்தில் "வேடிக்கையும்,விளையாட்டும் ,குறும்பும் ,குதூகலமும்,துடுக்கும் உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை
இனி நாம் காணப்போவதில்லை"என்று கல்கி அவர்கள் எழுதியதை படித்தபோது கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் ஆறாக ஓடியது இன்றும் மறக்க முடியாது.அப்போது நான் ஒன்பதாவது வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பு செல்ல இருந்த நேரம் இருப்பினும் என்னை படிக்க தூண்டிய
என் பெற்றோர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)