Tuesday 4 October 2016

காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்.

இமயம் முதல் குமரி வரை
இந்தியன் அன்றோ
சண்டைகள் செய்வதனாலே
வேற்று நாட்டவராகிவிடுவிரோ
பற்பல மொழிகள் பேசி திரிந்தாலும்
ஓர் தாய் பிள்ளைகள் அன்றோ
மொழி வேறு என்பதனாலே
சகோதரனுக்கும் தண்ணீர் தர மறுக்கலாமோ
வயிற்றுக்கு சோறு வேண்டும்
சோற்றுக்கு உழ வேண்டும்
உழவுக்கு நீர் வேண்டும் -அதனை
அளிக்க உமக்கு மனம் வேண்டும்
மொழி அரசியலுக்கு மக்கள் அடிமை கொள்ளலாமோ
உலகின் முன் வெட்கி தலை குனிதல் ஆகுமோ
மக்கள் மனதில் மனிதம் பிறந்திடல் வேண்டும் - அதற்கு
ஜாதி மாதம் மொழி இனம் நாடுகளுக்கு அப்பாற்பட்ட
மனிதர் ஆக வேண்டும் 
நம் மீது விழுந்த கரை போக்கிடல் வேண்டும் - அதற்கு
காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்
காவிரி கரை புரண்டு ஓடுதல் வேண்டும்.......

என்ற அவாவுடன் ...........................
                                                                    -பரத் சந்திரன் சுப்ரமணியன்.
 

கதறி துடிக்கிறாள் பாரத மாதா!

என் சொல்வேன் என் சொல்வேன்
எப்போதோ வரப்போகும் உன்னிடம் அதை வாங்கி வா இதை வாங்கி வா என்று
அன்பு கட்டளை இட அலைபேசியில் பேசிட விரைந்து வரும்
குழந்தை இடம் என் சொல்வேன்
உன் தந்தை இடம் இனி பேசவே முடியாதென்று
உன்னிடம் கொஞ்சி பேசி மகிழும் உன் மனைவி இடம் என் சொல்வேன்
உன்னை அரவணைக்கும் கைகள் உன்னை  இனி ஆர தழுவாதென்று
செல்ல சண்டை இடும் உன் சகோதர சகோதரிகளிடம் என் சொல்வேன்
இனி  உங்கள் சகோதரனிடம் செல்ல சண்டை இட முடியாது என்று
உன்னையே நினைத்து உருகும் உன் தாய் இடம் என் சொல்வேன்
உங்கள் மகனின் நினைவுகள் மட்டுமே மிஞ்சியது என்று
உன்னை நினைத்து என்றும் பெருமை கொள்ளும் உன் தந்தை இடத்து என் சொல்வேன்
உங்கள் அருமை பெருமை மகன் இன் உயிர் நீத்தான்  என்று
என் சொல்வேன்  என் சொல்வேன் என்று- அழும்
பாரத மாதவிடம் கவலை படாதே தாயே
என் மகனும் என்னுடைய  எண்ணற்ற இந்திய சகோதரர்களும்
உன்னை காப்பார்கள் என்று கூறுகிறது
பாரதத்தை காக்க எதிரிகளிடம் போராடி இன் உயிர் நீத்த ராணுவ வீரனின் ஆத்மா
கேட்ட உடன் மேலும் மனம் உடைந்து கதறி துடிக்கிறாள் பாரத மாதா
உன்னையும்  இழந்து விட்டேனே என்று........

உரி தீவிரவாத தாக்குதலுக்கு பழியான எனது அருமை சகோதரர்களுக்காக
அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும்
அவர்களின் எண்ணமும் லட்சியமும் நிறைவேறிடவும்
அவர்கள் குடும்பம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்திடவும்
எல்லாம் வல்ல உண்மை பரம் பொருளை வேண்டி நிற்கும்...........

                                                                           -பரத் சந்திரன் சுப்ரமணியன்
 

Tuesday 2 August 2016

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி ?

IRCTC faster train ticket booking tricks
ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி ?
இதுக்கு தான் இந்த ஊரு பக்கமே வரதில இங்க வந்துட்டு போறதுக்கே 2 நாளு ஆகிடுது இதுல நின்னு கிட்டே தான் போகணும் நின்னுகிட்டேதான் வரணும்னா எப்படி வரது.சரி இரயில் வண்டியில் தட்கல் முறையில் ஆவது முன் பதிவு செய்து  போகலாம் என்று செல்பவர்களுக்கும் 3-5 நிமிடங்களில் டிக்கெட் காலி என்று வீடு திரும்ப வேண்டி இருக்கிறது.சரி நாமும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம் என்றால் நமக்கு வாய்ப்பே இருக்காது.இதனால் சலித்து கொள்பவர்கள் ஏராளம்.அவர்களுக்கு ஒரு எளிதான வழி நம்முடைய பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே type செய்து வைத்து கொள்ளலாம்.
அதற்கான எளிய வழி முறைகள்:
1)கீழே கொடுக்கப்  பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
2)கிளிக் செய்தவுடன் தோன்றும் ஒரு பக்கத்தில் Reservation Form என்ற buttonனும் video demo என்ற buttonனும் இருக்கும்.
3)demo வீடியோவைக்காண Demo videoவினை கிளிக் செய்யவும்.Demovideo 4)reservation formமை கிளிக் செய்தால் resevation form  போன்ற ஒரு படிவம் தோன்றும் அதில் நீங்கள் உங்களுடைய பயணிகளின் விவரங்களை தட்டச்சு செய்து வைத்துக் கொள்ளவும்.Reservation form
5)பின்பு i am feel lucky என்ற பொத்தானை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் magic auto fill என்ற பொத்தான் இருக்கும் அதனை drag செய்து படத்தில் உள்ளது போன்ற book mark tool bar இல் வைத்து கொள்ளவும்.
6)இனி வேலை சுலபம் தான். எப்போதும் போன்று நாம் irctc  website இல் login செய்து பயண விவரத்திற்கு பின் வரும் passenger detail  பக்கம் வரும் பொழுது நீங்கள் drag செய்து வைத்திருந்த magic auto fillஐ கிளிக் செய்தால் உங்கள படிவம் நிரப்ப பட்டிருக்கும் பிறகு என்ன தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம். அதனால் உங்களின் வாய்ப்பும்  அதிகம் ஆகிறது.
                                                       HAPPY  JOURNEY  பார்வையாளர்களே!

Thursday 30 June 2016

புரட்சி முதல் வினுப்ரியா வரை சமூக ஊடகம் - உலக சமூக ஊடக தினம்

நீங்கள் உணவு இல்லாமல் கூட ஒரு நாள் இருந்து விடுவீர்கள், ஏன் குடிக்க  தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்து விடுவீர்கள் ஆனால் ஒரு நிமிடம் கூட உங்களால் சமூக வலைதளத்தில் டிவீட்டர் இல் tweet அல்லது retweet செய்யாமலோ facebook இல் போஸ்ட் போடாமலோ அல்லது share செய்யாமலோ இன்ஸ்டாகிராம் இல்லாமலோ கூகிள் பிளஸ் சில் போஸ்ட் போடாமலோ உங்களால் இருக்க முடியாது.  உலகின் பல நாடுகளில் சமீப காலமாக புரட்சி ஏற்பட தொடங்கிய இடம் சமூக வலைதளம்.  தங்கள் உலகின் அத்துணை தவறுகளையும் தட்டி கேட்க்கும் இடமாகவும் நெட்டிசன்களின் பொழுது போக்கு அம்சமாகவும், சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் மீம்ஸ் மன்னர்களின் அவையாகவும் இருந்த இருக்கும் இருக்க போகும் இடமாகவும்,
இருக்கும் இடம் சமூக வலைதளம். புரட்சிகளுக்கு மட்டும் அல்ல அமைதிக்கும் சமூக செய்யற்பாட்டுக்கும் உதவிய தளமும் கூட. சென்னை பெரு வெள்ளத்தில் அரசிற்கு முன்பே நம்மை ஒருங்கிணைத்தது சமூக வலைதளமே. சமூக வலைதளம் ஓர் அரசினை புரட்சியால் அகற்றவும் முடியும் அதே  சமூக வலைதளத்தின் மூலம் ஆட்சியை அமைக்கவும் முடியும் என்பதை சமீபத்திய இந்திய தேர்தல் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. சமூக வலைதளத்தின் மூலம் விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும் கட்சிகள் முன் வைத்த போதே உங்களுக்கு அது புரிந்து இருக்கும்.  நாட்டில் ஒரு தவறு நடந்தவுடன் ஒரு வலை பதிவு வருகிறது உடனே அந்த தவறு அரசு தரப்பில் சரி செய்ய படுகிறது .  அதே போல் ஓர் உதவி என்று சமூக வலைதளத்தில் ஒரு குரல் கேட்கிறது உடனே அந்த உதவியினை மனிதாபி மானம் உடைய ஒருவரால் அந்த நபருக்கு சரியான நேரத்திற்குள் சென்று அடைகிறது என்றால் அது சமூக ஊடகத்தின் தாக்கத்தால் மட்டுமே முடியும். சமூக வலைதளத்தின் தாக்கம் இளைஞர்களிடம் மட்டும் அல்ல எல்லா வயதினர்களிடம் ஏற்பட்டு உள்ளது என்பதனை நம்மால் அறிய முடிகிறது. நம் குடியரசுத்தலைவர், பிரதமர், முதல் ஏன் 93 வயது பெரியவர் கலைஞர் வரை அனைவரின் சமூக வலைதள பயன்பாட்டினை கான  முடிகிறது. அத்தகைய சமூக வலைதளங்கள் சமீப நாட்களாக திசை திரும்பி பயணிக்க தொடங்கி இருப்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு காட்டவும் கிலியை ஏற்படுத்தவும் செய்கின்றது. வினுப்ரியா அவர்களின் மரணமும் அதை தான் நமக்கு சுட்டுகிறது. இது போன்ற தவறான/மோசமான செயல்களுக்கும் சமூக ஊடகங்கள் பயன்படுவது அதிர்ச்சியை தான் ஏற்படுத்துகின்றன. முதலில் நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் மனித தன்மையுடன் செயல்படுவோம் என்ற உறுதி மொழியை உலக சமூக ஊடக தினமான இன்று ஏற்போம். பல  வினுப்ரியாக்கள் நம்மை உடன் பிறப்புகளாக நம்பி தான் சமூக ஊடகங்களுக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல் படுவோம். சரியான உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடுவோம். சமூக வலைதளத்தை சரியான முறையில் பயன் படுத்துவோம். போஸ்ட்களும், மீம்ஸ்களும் இடுவது குற்றம் அல்ல அவை பிறர் பாதிக்காதவண்ணமும் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காதவண்ணமும் இருத்தல் வேண்டும். சமூக வலைத்தளங்கள் நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் இடமும் கூட.........    

Wednesday 29 June 2016

"உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?" மனிதாபிமானம் குன்றி வரும் சென்னை வாசிகளே!

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சட்ட பேரவையில் சொல்லும் நாளிற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நடைபெற்ற கொலைகளை கண்டால் தமிழகம் அமைதி பூங்காவாக  இல்லை, கொலை மயாணமாக(?) மாறி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதுவும் நுங்கம்பாக்கம் ஸ்வாதி அவர்களின் படுகொலை சென்னையில் மனிதாபி மானிகள் இன்னும் வாழ்கிறார்களா? என்ற கேள்வி நம் முன் வந்து செல்கிறது.  அதிகாலை பொழுதில் எப்பொழுதும் போல தன் அன்றாட வேலைகளை கவனிக்க தான் அலுவலகத்திற்கு புறப்பட்ட ஸ்வாதி அவர்களுக்கும் அவரை ரயில் நிலையம் வரை கொண்டு வந்து விட்ட அவர் அப்பாவிற்கும் தெரியாது, நாம் அன்றாடம் மனிதாபிமானம் அற்ற ஜந்துக்களுடன் (மன்னிக்கவும் மனித தன்மை அற்ற எவரும் மனிதன் அல்ல என்றே இதுகாறும் நான் படித்த கேட்ட அறிவு) தான் பயணிக்கிறோம் என்று. அன்று ஒருவர் அல்லது இருவர் இணைந்து குரல் கொடுத்தாவாது அதனை தடுக்க முற்பட்டிருக்கலாம். இதில் இருந்தே நம்மவர்களிடம் மனிதபிமானமும் இல்லை, ஒற்றுமையும் இல்லை, என்று அறிய முடிகிறது. அட! ஐந்து அறிவு ஜீவிகளிடம் கூட ஓற்றுமை உள்ளது. முன்பு ஒரு முறை  அநேகமாக 2011 ஆண்டு ஆட்சி பொறுப்பில் முதல்வர் அவர்கள் அமர்ந்த போது கொள்ளையர்களும், கொலையாளிகளும் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர். இனி தமிழகம் அமைதி பூங்காவாக  செயல்படும் என்ற வார்தைகளை உதிர்த்த நியாபகம். அப்படியானால் அந்த கூலி படையினருக்கோ  அல்லது அரசின் அனுமான படி கூலி படை அல்லாதவற்கும் துணிச்சல் பிறந்து விட்டதா? துணிச்சல் பிறந்து விட்டது என்றால் அதற்கு காரணம் யார்? அதற்கு மக்களின் அரசு மட்டும் காரணம் அல்ல மக்களாகிய நாமும் ஓர் காரணம் தான்  நகரமயம் ஆன பிறகு சென்னையில் கலாச்சாரம் மட்டும் அல்ல மனிதாபிமானமும் குறைந்து விட்டது (அழியவில்லை!) என்றே இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. இதை பயன் படுத்தியே கூலி படையினரும்  தமிழகத்தில் தன்  கை வரிசையை காட்ட துவங்கி உள்ளனர். இத்துணை கொடூர கொலையை தடுக்க முன் வராத உங்களை தான் சென்னை பெரு வெள்ளத்தின் போது எத்துணை எத்துணை மனிதாபிமானிகள்  தமிழகதின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்து தமிழகத்தில் என்றுமே மனிதாபிமானம் சாகாது என்று உணர்த்திவிட்டு சென்றனர். ஆனால் இன்று அதே  சென்னையில் அத்துணை பேர் முன்பு பட்ட பகலில் மனிதாபிமானம் அற்ற முறையில் மனிதாபிமானம் உள்ள ஒரு பெண்ணிற்கு ஓர் கொடூரம் நடக்கிறது அதை தடுக்க அங்குள்ள எந்த சென்னை வாசிகளும் முன் வரவில்லை. அன்று நீங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது உங்களை போன்று அன்று யாரும் உதவ முன் வரவில்லை என்றால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கனம் நினைத்து பாருங்கள். பொதுவாக செய்த நன்றியை சொல்லிக்காட்டும் வழக்கம் இல்லாதவர்கள் தமிழர்கள் ஆனால் நம் கண் முன்பே தன்  மக்களின் மனிதாபி மானம் இழப்பதை  கண்டு கனத்த இதயத்துடன் தான் இதை இங்கு நினைவு கூறுகிறேன். இந்த நிகழ்வு மட்டும் அல்ல இது போன்று எத்தனை எத்தனை ஸ்வாதிகள், என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. அதில் ஸ்வாதியின் பெயரும் இடம் பெறுமே ஒழிய, மக்களின் மனதில் மனிதாபிமானம் இடம் பெறபோவதில்லை(?). வசிப்பிடம் தான் நகரமயம் ஆகி வரலாமே ஒழிய மனித மனதில் மனிதாபிமானம் அழிந்து நகரமாய் ஆகி விட கூடாது. அப்போது தான் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாகவும், சென்னை சிங்கார சென்னையாகவும்  இருக்கும் என்பதை உணருங்கள். இந்த தருணத்திலும் எனக்கு ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது அது வைகை புயல் வடிவேல் அவர்களின் நகைச்சுவை "உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?". சென்னை வாசிகளே. ஒரு கனம்  நினைத்து பாருங்கள் உங்கள் மனமே உங்களை வறுத்து எடுக்கும். இனியேனும் மனிதாபிமனதுடன் ஒன்று பட்டு செயல்பட்டு நாம் மனிதர்கள் தான், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்று உலகிற்கு உணர்த்துவோம். ஏனெனில் உலகம் அனைத்தையும் வெகு விரைவில் மறந்து விடும் நம்மைப் போல(!)..................

Saturday 14 May 2016

வாக்களிப்போம் நேர்மையாக!


இன்று நீங்கள் சுதந்திரமாக பேசமுடிகிறது, எழுத முடிகிறது, வலை பதிவுகளை இட முடிகிறது. ஏன் உங்கள் நண்பரில் இருந்து நம் பிரதமர் வரை கலாய்ப்பதற்கு  மீம்ஸ் பதிவிட முடிகிறது என்றால் அதற்கான காரணம் ஒன்று தான் நாம்  ஜனநாயக நாட்டினர் என்பதே. நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க தயார் பொழுது கழிக்க தயார் ஆனால் உங்களுடைய ஜனநாயக கடமையாற்ற மட்டும் நீங்கள் தயார் இல்லை. காரணமோ  தெரியவில்லை! உங்களின் அத்துணை உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு உரிமை உண்டெனில் அது ஜனநாயகத்தின் திறவுகோலான வாக்குரிமை. அது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட. முன்  எப்போதும் இல்லாத அளவு இந்த முறை தேர்தல் ஆணையமும் மிக கடுமையான விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கி உள்ளது. சமுக வலைதளமாக இருக்கட்டும் , கல்லூரிகளாக இருக்கட்டும், பொது மக்கள் கூடும் இடமாக இருக்கட்டும் அது தன் பணியை செய்து கொண்டு தான்  இருக்கிறது. ஆனால் திரை அரங்குகளில் படம் பார்க்க எத்துனை பெரிய வரிசையில் நிற்க தயாராக இருக்கும் நம்மால் , சமூக வலை தளங்களில் உலாவ தயாராக இருக்கும் நம்மால். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பொழுதை போக்க தயாராக இருக்கும் நம்மால்  வாக்களிக்க சில மணி துளிகளை செலவு செய்ய தயாராக இல்லை. ஒன்றை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் நீங்கள் சுதந்திர  காற்றை சுவாசிக்க காரணம்  ஜனநாயகம். ஜனநாயகத்தை சரியாக பயன் படுத்தினால் தான் நீங்கள் சுதந்திரமாக வாழ இயலும். மேலும் நான் இந்த பள்ளியில் தான்  இந்த கல்லூரியில் தான் படிப்பேன், இந்த உடையை தான் அணிவேன், இதை தான் உண்ணுவேன், இந்த பொருளை தான் பயன் படுத்துவேன், இந்த இடத்தில தான் வேலை செய்வேன் என்று கூறும் நீங்கள், ஏன் உங்களை இவர்கள்  தான் ஆள வேண்டும் என்று விரும்புவது இல்லை. மேலும் வாக்களிக்க பணம் தருவது மட்டும் அல்ல பெறுவதும் குற்றம். நீங்கள் பணம் பெறுகிறிர்கள் என்றால். நீங்கள் அவர்கள் செய்த/ செய்ய போகும் பாவங்களுக்கு உங்களுடைய பங்கினை கேட்கின்றீர்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள்  எப்பொழுது லஞ்சம் பெற நினைத்தீர்களோ அப்போதே நீங்கள் உங்களின் அத்துணை உரிமைகளும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் சமூகத்தின் கொள்ளைக்காரனாகிவிடுகிறீர்கள். எனவே இந்த எண்ணத்தை மாற்றி வாக்களிப்பதற்கு பணம் பெறுவது தனது தன்மானத்தை விற்கும் இழி செயல் என கருதி நேர்மையாக வாக்களிக்கும் படியும், நீங்கள் மட்டும் அல்லாமல் உங்களின் பெற்றோர்கள் நண்பர்கள், உறவினர்களையும் நேர்மையாக வாக்களிக்க வைக்க வேண்டியதும் உங்களின் கடமை என்பதை உணருங்கள். இந்த முறையேனும் 100 சதவிகித வாக்கினை  நேர்மையாக அளித்து நம் ஜனநாயக கடமையை ஆற்றுவோம். வாக்களிப்போம் நேர்மையாக!.......