Tuesday 19 June 2018

கொரியத் தீபக்கற்பம்!

ஒரு குடைக்குள்
உலகை அடக்கிட எண்ணிய
ஜப்பானின் ஏகாதிபத்தியத்தின் கீழ்
ஒன்றிணைந்த கொரிய தீபகற்பம்..
அச்சு நாடுகள், நேச நாடுகளுக்கான
இரண்டாம் உலகப்போரில்,
நேச நாடுகளின் வெற்றி
அச்சு நாடுகளின் அச்சாணியை கழற்றிவிட்டது.
அந்த அச்சாணியில் கழன்ற சக்கரம்
கொரியா.
நேச நாடுகளின் நேசம்
நாடு பிடிப்பதில் போனது
பேருந்தின் பின் சக்கரம் போல்  இரண்டானது,
இரண்டும்
ஆபத்தில் தவிக்கும் கப்பலில்
கடலில் கொட்டிய எண்ணெய் போல்..
நேச நாடுகளின்
கொள்கை முரனை கோடிட்டது.
வடம் கம்யூனிச ஐக்கிய சோவியத்தின் பாலும்
தென்னகம் ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பாலும்
பிரிப்பட்டு துண்டானது தீபகற்பம்..
போரில் பிடித்த நாடுகளை
தன் கொள்கை நாடுகளாக்கி விட்டன.
வடக்கர்களின் ஒன்றிணைந்த கொரிய
கனவில்..
1950 போர் மூள
3 ஆண்டு போரில்
பெரிய அண்ணன்கள் நுழைய
கொல்லப்பட்டது லட்சக்கணக்கான
கொரியர்கள்
ஆர்மிஸ்டிஸ் ஒப்பந்ததோடு முடிந்தது கொரியப் போர்.
பனிப்போர் தொடர்ந்தது...
கம்யூனிச வடக்கு வளர்ந்தது.
சீன மூங்கில் போல்
அசுர வளர்ச்சி பொருளாதாரத்தில்
ஆசியாவிலே அதிக வளர்ச்சி,
தெற்கோ கருவேலை மரமாக
விறகு குச்சிகளுக்கானதாய் திண்டாடியது.
1965 புரட்சியாளர் சே வடக்கை
மக்களுக்கான கம்யூனிச ஆட்சிக்கு
கியூபாவிற்கு முன்ணுதாரணமென புகழ
கம்யூனிச ஆட்சிகளில் சிறப்பானதொரு ஆட்சியை நல்கிய வடக்கு,
சோவியத் ஆதரவில் விலகி
சீனா ஆதரவாக மாற
மானை தவறவிட்ட புலியாய்
சோவியத் தகிக்க,
சோவியத் உறவு முறிய,
தேவைகளுக்கு அணு உலை என்ற வடக்கு,
பவர் ஸ்டார் பெரிய அண்ணண்கள்
மிரளுமளவு அறிக்கைகள் விட,
சுப்ரீம் ஸ்டாராக வடக்கு அறியப்பட,
தடைகள் முன் நிற்க,
சிரித்து கடக்கிறது வடக்கு,
சர்வாதிகாரமாகிவிட்ட வடக்கு
உலகில் பெரிய நாடுகளை மிரட்டிய பெரிய அண்ணன்களை மிரட்டுகிறது எரிமலையாய்,
எரிமலை சற்றே அடங்கி போக விரும்பி
தெற்கோடு கைக்கோர்த்து,
அமைதிக்கு வருகிறது,
அமைதி பூக்கட்டும்,
கொரியா தீபகற்பம் மீளட்டும்,
கொரியர்கள் வாழட்டும்...

                -பரத் சந்திரன் சுப்ரமணியன்

Monday 21 May 2018

தாரிணி - INS Tarini

சக்திப் பீடங்கள் நான்கில் ஒன்றாம்
தாரா தாரிணியின் பெயரிலுள்ள
இந்தியத் தயாரிப்பான
தாரிணி பாய்மரப் படகில்
உலகை வலம் வர...
மாண்டோவியில் இருந்து
சீறிப்பாய்ந்த
சுறாக்களே...
வருக... வருக...

இந்தியப் பெருங்கடலில் மிதந்து...
பூமத்திய ரேகையில்
வட அரைக்கோளத்தில் இருந்து
தென் அரைக்கோளம் தாவி
மகரரேகை தாண்டி...
கங்காரு தேசத்தின் பிரேமாண்டடில்

துறைமுகம் சென்று...
லீயுவின் நிலமுனை வழியே...
கிவிகளின் தேசத்தின் லிட்டேல்டன் துறைமுகம் சென்று...
சாண்டா அணிவகுப்பு மரியாதை பெற்று...
தென் பசிபிக் பெருங்கடலில்
ஹோர்ன் நிலமுனை வழியே
தென் அட்லாண்டிக் பெருங்கடலின்
போக்லாந்தின் ஸ்டான்லி துறைமுகம் சென்று....
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகம் அடைந்து...
குட்ஹோப் நிலமுனை வழியே...
இந்தியப் பெருங்கடலில் ஐக்கியமாகி...
சீறிப் பாய்ந்து..
மகர ரேகை கடந்து சீறுகையில்...
தொழில்நுட்பப் பழுது ஏற்பட...
மொரிசியசின் லூயிஸ் துறைமுகம் உதவ..
மீண்டும் பாயத் தொடங்கி...
பூமத்திய ரேகையில்
தென் அரைக்கோளத்தில் இருந்து
வட அரைக்கோளம் தாவி...
இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டல
எல்லையில் இருந்து..
இந்தியப் பிராந்திய கடல் எல்லையில்
நுழைந்து...
மாண்டோவிக்கு
உலகைச் சுற்றி வலம் வரும்...
கடற்படை வீராங்கனைகளே..
வருக... வருக...

கடல் மாசுவின் மீது ஆராய்ச்சி செய்து அறிக்கையோடு வரும்
வீரப்பெண்டீர்களே...
வருக.... வருக...

தரணி சுற்றத் தாரிணியில் சென்று வரும்
தாரகைகளே...
வருக... வருக...

கடல் சூழலியல் ஆராய்ந்து வரும்
அரிவைகளே...
வருக வருக...

கடல் கடத்தல் பாவம் என்ற தேசத்தில்...
கடலில் உலகைச் சுற்றிய..
நங்கைகளே...
வருக... வருக...

வேலையாள்ப் போல் பார்த்த பெண்களை
உலகைச் சுற்றி வந்து உலகையே வியக்க வைத்த..
மடந்தைகளே..
வருக... வருக...

வேடிக்கைப் பார்ப்பவளாய் வைத்திருப்போரை
வேடிக்கைப் பார்க்க வைத்த
தெரிவைகளே...
வருக... வருக...

பெண்டீர்க் காயங்களை ஆற்றி
ஆற்றுக் காட்ட வந்த
ஆறு பெண்கள் குழுவே...
வருக... வருக...

தேசம் திரும்பும்
மங்கைகளே...
பாசமுடன் வரவேற்கிறோம்...
வருக... வருக...

ஆயிரமாயிரம் மாற்றம் கண்ட
தேசத்தில்...
மாற்றம் காண விழையும்...
மனிதிகளே...
மகிழ்வுடன் வரவேற்கிறோம்...
வருக... வருக...

வர்த்திகா ஜோஷியே
வருக... வருக...

பிரதிபா ஜம்வாலே
வருக... வருக...

ஐஸ்வரியா போடப்பட்டியே
வருக... வருக...

பட்டாரப்பள்ளி சுவாதியே
வருக... வருக...

விஜய தேவியே
வருக... வருக...

பயல் குப்தாவே
வருக... வருக...

உம்மைக் கண்டும் மாறுவோர்
சிலரேனும் மாறட்டும்...
மங்கையர் வாழ்வு மலரட்டும்....

தேசம் கை கொடுக்கும்...
நேசமுடன் நாம் கொடுத்தால்...

                     -பரத் சந்திரன் சுப்ரமணியன்.



"ஜஸ்டி என்னும் ஜஸ்டிஸ்"

















மணிமகுடம் சூடவில்லை
மகுடத்தின் மாணிக்கமாய்
மிளிர்கிறாய்...

கருத்துரிமைக்கான நீதி ஆணையிட்டாய்
நீதி உரிமைக்காக அணியினை
வகுத்துவிட்டாய்
மக்களுக்காக....

தனிமனித ரகசியம் அடிப்படை உரிமை என்றாய்...
மகுடத்திற்கான நியமன ரகசியம் உடைத்தாய்...
நீதிக்காக.....

பதவிக்கு அலைவோர் நடுவில்
நடுநிலை தவறாது நீதி அளித்தாய்...
குடியானவனுக்காக...

இதோ நீ விடை பெற போகிறாய்...
பிரிவு உபச்சாரம் இல்லாது..
சம்பிரதாயங்களை உடைத்தாய்...
சம்பிரதாயப் பணிகளை மறுத்தாய்...
பகுத்தறிவாளனாக...


நீ பதவியில் இருந்து விடை பெற்றாலும்..
உன் அதிகாரம் குறைந்தாலும்..
நீ பிறப்பித்த ஆணைகள்
மக்கள் அதிகாரமாய்...
உன் கருத்துக்கள் நீதி துறையின்
கருத்துருக்களாய்...

உன் ஆசை சீர்திருத்தங்கள்..
விரைவில் பிறக்கட்டும்...
உன் ஓய்வுக்கு பின் வாழ்க்கை சிறக்கட்டும்...
தன் பெயரில் ஜஸ்டி வைத்து ஜஸ்டிஸ்
வழங்கிய நீதிமானே...
ஜஸ்டி செலமேஸ்வர் எனும் பெயர் நீதி துறை
வரலாற்றில் பதியட்டும்....
உன் புகழ் சிறக்கட்டும்..
உன் மக்கள் தொண்டு தொடரட்டும்...
உன் வாழ்வு மலரட்டும்...

                   -பரத் சந்திரன் சுப்ரமணியன்.