சாதிகள் ஒழிந்து புதுமை பெண்கள் வளர்ந்து
பாரதியின் கனவு மெய்ப்படவேண்டும்
சகிப்பு தன்மை வளர்ந்து அமைதி உயர்ந்து
அன்னை தெரஸாவின் கனவு மெய்ப்படவேண்டும்
காந்தியின் கனவு மெய்ப்படவேண்டும்
தீண்டாமை ஒழிந்து ஒற்றுமை உயர்ந்து
பெரியாரின் கனவு மெய்ப்படவேண்டும்
தீவிரவாதம் ஒழிந்து பெண் கல்வி பெற்று
மலலாவின் கனவு மெய்ப்படவேண்டும்
வறுமை ஒழிந்து எளிமை வளர்ந்து
அண்ணாவின் கனவு மெய்ப்படவேண்டும்
ஈழ உரிமை பெற்று ஒற்றுமை வளர்ந்து
இந்தியனின் கனவு மெய்ப்படவேண்டும்
அசுத்தமற்ற தூய்மை இந்தியாவாய்
மோடியின் கனவு மெய்பபடவேண்டும்
பல் துறைகள் வளர்ந்து வளர்ந்த இந்தியாவாய்
கலாமின் கனவு மெய்ப்படவேண்டும்
இவர்களது கனவு மெய்ப்பட்டு
எனது கனவு மெய்ப்படவேண்டும்.
-பரத்
No comments:
Post a Comment