சமூக வலை தளங்களில் புகைப்படங்களில் வார்த்தைகளால் விளையாடுபவரா நீங்கள்? அட புகைப்படம் நல்லவே கிடைக்கவில்லை கிடைத்த புகைப்படமும் நல்ல தரத்தில் இல்லை என்று எண்ணுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இப்பொழுது unsplash (https://unsplash.com/) எனும் இனையதளத்தை அறிமுகம் செய்கிறேன் அந்த தளத்தில் நிறைய அழகிய புகைபடங்களை நல்ல தரத்துடன் காண முடிகிறது. பிறகு என்ன டவுன்லோட் செய்து மாற்றம் செய்து புகை படத்தை உங்களின் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து விடுங்கள்.
Friday, 14 August 2015
Knoword: ஆங்கில விளையாட்டு
நாம் எதையேனும் ஒன்றை விளையாட்டாய், வேடிக்கையாய் கற்றால் நாம் அவற்றை எளிதில் கற்று விடுவதோடு மட்டும் அல்லாமல் அதை நீண்ட நாட்களுக்கு எளிதில் நினைவில் கொள்வோம். ஆங்கிலம் என்றாலே அலறி ஒடுபவராக இருப்பவர்களுக்காக ஆங்கிலத்தை விளையாட்டாய் கற்று கொள்வதற்கு உதவுகிறது knoword(http://knoword.org/) என்னும் இணையதளம். இந்த இணைய தளமானது ஒரு வார்த்தையின் அர்த்தத்தையும்(பொருள்) அந்த வார்த்தையின் முதல் எழுத்தையும் அளித்து விடும் அதை வைத்து நாம் அந்த வார்த்தையினை கண்டு பிடித்திடல் வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 20 புள்ளிகளும் 5 நொடி கூடுதல் நேரமும் தரப்படும். தவறான அல்லது பதில் அளிக்காத கேள்விகளுக்கு 10 புள்ளிகள் கழிக்கப்படும். இதன் மூலம் உங்களால் அதிக வார்த்தைகளை கற்று கொள்ள முடியும். அங்கிலத்தை அறிந்திட வாழ்த்துக்கள்.
Sunday, 9 August 2015
நல்ல தரத்துடன் முழு அளவுடன் கூடிய பிரிண்ட் ஸ்க்ரீனிற்கு?
நீங்கள் வலை தளத்தில் உலாவி கொண்டு இருக்கையில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த அல்லது தேவை படுகின்ற ஒன்றை உங்கள் தேவைக்கோ அல்லது நண்பர்களுக்கு பகிர நினைத்தால் பிரிண்ட் ஸ்க்ரீன் option ஐ பயன் படுத்துவோர் அதிகம் ஆனால் அதில் தெளிவாகவோ அல்லது ஓர் குறிப்பிட்ட அளவிற்கு மேல் முழுமையாகவோ இருக்காது, அதற்காகவே ஓர் வலைதள செயலி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது அதில் நீங்கள் பிரிண்ட் ஸ்க்ரீன் எடுக்க வேண்டிய வலை பக்கத்தின் முகவரியை மட்டும் கொடுத்தால் போதும் அந்த வலை பக்கம் முழுவதும் பிரிண்ட் ஸ்க்ரீன் எடுக்கப்பட்டு காட்டும் மேலும் அதனை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழு பக்கத்தையும் நல்ல தரத்துடன் வழங்குவதே. அதனை zoom செய்து பார்த்தல் புரியும். பிரிண்ட் ஸ்க்ரீன்னுக்கு ctrlq.org/screenshots/
Monday, 3 August 2015
கலாம் எனும் - ஓர் இதிகாசம்
இராமேசுவரத்தில் முத்தாய் பிறந்து
பொக்ரைன் அணுகுண்டு சோதனை செய்து அயல்நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எல்லாம் சிம்ம சொப்பணமாய் விளங்கிய நீ
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய்
உலக விண்வெளி ஆராய்ச்சியின் தலை மகனாய்
பாரதத்தின் ரத்தினமாய்
இந்தியாவின் மூத்த குடிமகனாய்
இவ்வுலகத்திற்கு கிடைத்த அரிதான வைரம் நீ
உன்னிடம் கற்று கொள்ள ஏராளம் -ஆனால்
காலமோ இல்லை தாராளம்
உன்னுடைய எளிமையே உனது வலிமை
உன்னுடைய அன்பு என்னும் பலகீனமே உனது பலம்
உன்னுடைய தனிமையே உனது தனிச் சிறப்பு
உன் புன்னகையில் ஓர் குழந்தையை கண்டோம்
உன் மனிதநேய பண்பில் இறைவனை கண்டோம்
எங்களை கனவு காண செய்வதையே கனவாக கொண்டு -கடைசி மூச்சு வரை
உங்களுடைய அறிவையும், ஆற்றலையும் அளித்து
மஹாபாரத கர்ணனாய்
திரு குரானில் வரும் மலைக்கராய்
பைபல் படி நல்ல மேய்ப்பராய்
ஜாதி மதங்களை தாண்டி ஓர் தனி இதிகாசமாய் வாழ்ந்த உம்
இறப்பிற்கு எங்கள் கண்நீர்த் துளிகளை சிந்தாமல்
உன்னுடைய 2020ல் இந்தியா கனவிற்கு வேர்வை துளிகளை சிந்தி
உழைத்து அந்த வெற்றி துளியை உனக்கு காணிக்கை ஆக்குவோம்
உனது கனவு இந்தியாவில் நீ வாழ முடியாமல் விதி சதி செய்து இருக்கலாம்- ஆனால்
உனது கனவு இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதையும் - ஒவ்வொரு
மனித இதயத்தில் நீ வாழ்வதையும் எந்த விதியாலும் சதியாலும் தடுக்க இயலாது
லஞச ஊழல் அற்ற வல்லரசு இந்தியாவை உருவாக்க
ஓர் மாணவனாய் ஓர் இளைஞராய்
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்த மனிதனாய் உறுதி பூணுகின்றோம்.

Subscribe to:
Posts (Atom)