ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியின்
பாடல்களை பக்கம் பக்கமாக பாட திட்டத்தினுள் வைத்துவிட்டு பள்ளியில்
சேருவதற்கே ஜாதியை கேட்பது நகை முரண் அல்லவோ? அரசு பள்ளியிலாவது ஜாதியின்
பெயரை மட்டும் தான் கேட்கிறார்கள்.பல
உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளியில் நிலமை படு மோசம்.பள்ளியின் பெயரிலே
ஜாதியை கொண்டும் ஜாதியை சார்ந்த பெயரைகொண்டும் இயங்கும் பெரும்பாலான
பள்ளிகள் குழந்தைகளிடம் ஜாதி என்னும் கருவேல விதையை விதைத்து
விடுகிறார்கள்.ஒரு குழந்தை தான் பயிலும் பள்ளியை நடத்தும் நிர்வாகம்
சார்ந்த ஜாதியை சேர்ந்ததாக மட்டும் இருந்தால் நிதி உதவி, இலவச நோட்டு
புத்தகம், நன்கொடை என்று ரசிது இல்லாமல் வாங்க கூடிய பணம், என்று
அனைத்தையும் இலவசமாக அளிக்கிறார்கள். ஒரே வகுப்பில் பயிலும் ஒரு ஜாதி
குழந்தைகளுக்கு மட்டும் இச்சலுகைகளை அளித்து விட்டு மற்றொரு இனம்
என்பதற்காக மற்ற குழந்தைகளுக்கு அளிக்காமல் இருக்கும் அந்த இடத்தில்
ஏற்படும் ஜாதிய ஏற்ற தாழ்வு என்பது பிற்காலத்தில் எப்படி கருவேல மரம்
மற்ற செடிகளை வளர விடுவதில்லையோ அது போன்றே அவர்கள் மற்ற இனத்தவ்ர்களையும்
வளர விடுவதில்லை.இதுவே ஜாதிய வெறிக்கு அடிகோல் இடுகிறது.கல்வி என்பது
ஒருவனுக்கு அறிவு என்னும் நெருப்பை பற்ற வைத்து அறியாமை எனும் இருளை நீக்க
உதவிடும் ஒரு கருவி. ஆனால் தனியார் மயமாக்கப்பட்ட கல்வியில் இன்று பெரும்
ஓட்டையாக இருப்பது ஜாதி, கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்காமல் அறியாமை
எனும் ஜாதியை வளர்கிறார்கள். இது தீவிரவாதத்தை விட மிக கொடியது. நம்முடைய
சிறுவயதில் அளிக்கப்படும் இத்தகைய நஞ்சுகளை எத்தனை அரியவகை விசமுறிவுகளை
(கல்வி,அறிவு) அளித்தாலும் சரி குணப்படுத்த முடியாது. இந்த மன நோயை
வளரவிடாமல் தடுக்க தேவை புதிய சட்டம். அதில் கல்வி நிறுவனங்கள் ஜாதியின்
பெயராலோ, அல்லது ஜாதிய தலைவரின் பெயராலோ இயங்க கூடாது. அதே போல ஜாதிய
அறநிலைகளாளும் இயங்க கூடாது. மேலும் ஒரு அறநிலையோ/தனி நபரோ தன் ஜாதிய
குழந்தைகளுக்கு மட்டும் உதவி செய்வது என்பதே முட்டாள்தனம் தான்.
இருப்பினும் ஒரு குழந்தையின் அறிவுபெற அது உதவுமானால் நாம் அதை
பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கும் சில வழிமுறைகளை வைத்து, அதில்
முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால் எக்காரணம் கொண்டும் அவர்கள் கல்வி
நிறுவனங்களின் மூலம் நேரடியாக சென்று உதவக்கூடாது. தேவை இருப்பின்
விசாரித்து கொள்ளலாமே ஒழிய நேரடியாக கல்வி நிறுவனங்களின் மூலம் உதவ
அனுமதிக்கக் கூடாது. மேலும் நாம் ஜாதிய அரசியலையும் விட்டு ஒழித்தால்
மட்டுமே நம்மால் ஏற்ற தாழ்வற்ற இந்தியாவை உருவாக்கிட முடியும் என்பதில் எள்
அளவுவேனும் நமக்கு சந்தேகம் வேண்டாம். நாம் போலியோவை விரட்டிவிட்டோம்
என்று மாறு தட்டிக்கொள்கிறோம். அது போன்று ஜாதி எனும் மன நோயை
எப்பொழுது????????????????????
Wednesday, 29 October 2014
Monday, 20 October 2014
SWACCH BHARAT
எனக்கு பலமுறை தோன்றி இருக்கிறது.ஏன் நம் இந்தியா இவ்வளவு குப்பையும் கூளமாக இருக்கிறது.நம் ஊரில் மட்டும் தான் இப்படியா? என்று யோசிக்க தோன்றும்.ஆனால் நம் ஊரில் தான் ரோட்டில் குப்பையை போட்டு செல்லுபவர்,ரயில் நிலைய நடை மேடையில் உணவு பொட்டலத்தை தூக்கி போடுபவர்,சுவற்றில் சிவப்பு நிற பெயிண்ட் அடித்தார் போல பளிச் என்று வெற்றிலையை மென்று துப்பி செல்லும் பாட்டி,ஏன் நம் நாட்டின் புண்ணிய நதியான கங்கையை கூட நம்மால் சுத்தமாக வைத்து இருக்க முடியவில்லை.காரணம் என்னவென்றால் நம் நாட்டில் உள்ள 121 கோடி மக்களும் எதாவது ஒரு வழியில் நம் நாட்டை அசுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இது பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்த போது ஒரு உண்மை எனக்கு சுளீர் என உணர்த்தியது.நீங்கள் நாட்டிற்கு வந்து விட்டீர் அவரவர் வீட்டினையே சுத்த படுத்தாத போது எங்கு நாட்டை....... என்று சொல்லி தலையில் அடித்து கொண்டார். இது போன்ற அசுத்தமான இந்தியாவை தூய்மை படுத்துவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள திட்டமே SWACCH BHARAT திட்டம்.இத்திட்டத்தின் மூலம் நம் நாட்டை ஒரே நாளில் தூய்மை படுத்தி விட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை இந்தியாவின் தூய்மைக்கான ஒரு முன்னோடி திட்டமாகவே இதை நாம் கருத வேண்டும். நம் வீடு போன்று தான் நம் நாட்டையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.இதற்கே அரசாங்கம் திட்டம் போட்டு தான் நடைமுறைபடுத்துகிறது என்றால் பாரத்தின் பிள்ளைகளான நம்மிடம் எவ்வளவு பொறுப்புணர்ச்சி இருக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது.எனவே உறங்கி கிடக்கும் நம்மை சத்தமாக எழுப்பும் இத்திட்டத்தை நாம் உபயோகப் படுத்தி நம் தாய் நாட்டை சுத்தம் செய்திட வேண்டும். சுத்தம் செய்தால் மட்டும் போதுமா இல்லையே சுத்தத்தை நாம் பராமரிக்கவும் வேண்டும், என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அத்துடன் அரசாங்கமும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளும், அத்துடன் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.அரசு மட்டும் தான் இதை செய்ய வேண்டுமா???????
Monday, 13 October 2014
குறை கூறவில்லை விடை கூறுகிறேன்
18 ஆண்டுகள் ஆகிவிட்டன எதற்கு சட்டப்படி ஒரு குழந்தை பெரியவன் என்ற அந்தஸ்து பெருவதற்கா? சட்டம் தன் கடமையை செய்ய! ஆம்! தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர ஏறக்குறைய என் வயது. இந்த வழக்கில் குற்றம் சுமத்த பட்ட நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முதல் குற்றவாளி ஜெவுக்கு 100 கோடி அபராதம் மற்றும் மற்ற மூவர்க்கும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.என்ன தான் கால தாமதமான நீதியை நீதி துறை வழங்கினாலும் சட்டத்தின் முன் ஏற்ற தாழ்வுகள் இல்லை.அனைவரும் சமம் என்று வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜான் மைகேல்.டி.குன்ஹா ஆணித்தரமாக அடித்து காட்டி உள்ளார். இதன் மூலம் நீதி துறையின் மீதான நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அவரது அசாத்தியமான துணிச்சல், வேகம், அரசையும் அரசியலையும் கட்சியையும் ஒருங்கே வழிநடத்தி செல்லும் திறன் கொண்ட அவருக்கு கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.மக்கள் பிரதிநிதியாக இருந்த அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.மற்றவர்களுக்கும் முன்னுதாரனமாகவும் இருக்க வேண்டும்.அவர் அப்படி செயல்பட்டாலும் அவர் ஆதரவாளர்கள்அவர் பால் கொண்ட அன்பால் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுப்பட்டு மக்களுக்கும் மக்களின் சொத்தான பொது சொத்துக்கும் சேதம் விளைவித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவர்களின் எதிர்ப்பை நீதி துறையை அவமதிக்கும் வண்ணம் காண்பிப்பது, என்பது இந்தியாவின் நீதி துறையையும் சட்டத்தையும் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கர்ஐயும் சட்டம் பயின்ற வழக்குரைஞர் ,நீதிபதிகள் ஆகியோரை அவமதிப்பது போன்றதாகும்.எனவே நம் முதல்வர் அவர்களின் வேண்டுகோளின் படி அனைவரும் தங்கள் வன்முறையை கைவிட்டு அறவழியில் செயல்படுங்கள்.
Subscribe to:
Posts (Atom)