Sunday 22 January 2017

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகுமா?

ஜல்லிக்கட்டுக்கு தமிழக ஆளுநர் அவசர சட்டம் ஒன்றை பிறப்பிததுள்ளார். அவசர சட்டம் குறித்த விளக்கம். மாநிலம் பிறப்பிக்கும் அவசர சட்டம் என்பது சட்டசபை நடை பெறாத போது மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் படி ஆளுநர் சட்டம் பிறப்பிக்க நம்முடைய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் சட்டமன்றம் கூடிய 6 வார காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏற்கபட்டால் அது நிரந்திர சட்டமாகும். இல்லையேல் அவசர சட்டம் காலவாதி ஆகிவிடும். எனவே அவசர சட்டம்  சட்டமன்றம் கூடிய 6 வார காலம் மட்டுமே செல்லுபடி ஆகும். 6 மாதம் என குறிப்பிடுவது 2 சட்டமன்ற கூட்ட தொடர்க்கு இடைப்பட்ட அதிக பட்ச கால இடைவெளியே ஆகும். எனவே ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். ஏனெனில் ஜனவரி 23 அன்று சட்ட மன்றம் கூட இருப்பதால் அது மார்ச் 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். ஒருவேளை இச்சட்டமன்ற கூட்ட தொடரில் நிறவேற்றப்பட்டால் அது நிரந்தர சட்டமாகும் இல்லையேல் மார்ச் 5ல் அவசர சட்டம் காலவாதி ஆகிவிடும். எனவே இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்று நாம் நம்புவோம்.